twitter

புதுக் கதையாக பழைய பல்லவி தானா?



சுட்ட பிணம் கூட எழுந்து நடக்கலாம்,
ஏழு கடல் நீரும் வற்றிப்போகலாம்,
நீ சொல்வது எப்படி உண்மையாகலாம்


என்று ஒரு பழைய சினிமாப் பாடல் உண்டு. இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்று கூடுகிறார்கள் என்ற பத்திரிகைச் செய்தியைப் பார்த்தவுடன் மேலே உள்ள பாடல் வரிகள் தான் எனக்கு ஞாபகம் வந்தன. கலண்டர் திகதியையும் பத்திரிகைத் திகதியையும் ஒப்பிட்டுப் பார்த்தேன், ஏப்ரல் முதலாம் திகதியோ என்று பத்திரிகைத் திகதியும் கலண்டர் திகதியும் ஒன்றாகவே இருந்தன. ஓ! அப்படியானால் சரி, நவம்பர் 19.

கடந்த காலங்களில் பல தடவைகள் தமிழ்த் தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால் தமிழ்த் தலைவர்களிடம் காணப்பட்ட சுயநல நோக்கம் காரணமாக இவர்களது கூட்டுகள் ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. இப்பொழுது ஒரு லட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதன் பின்னர் (சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கணிப்பீட்டின் பிரகாரம்) இப்போதைய தமிழ்த் தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு உயிர் வாழும் சுதந்திரம், உணவு அருந்தும் சுதந்திரம், உறங்கும் சுதந்திரம், விசில் அடித்தவுடன் "சடின் பிறேக்'' போட்டு நிற்பாட்டும் சுதந்திரம், முகாமில் வாழ்ந்தாலும் தேசியக் கொடியை ஏற்றும் சுதந்திரம், வாக்களிக்கும் உரிமை போன்ற பல்வேறு உரிமைகளையும் (சுதந்திரத்தையும்) பெற்றுக்கொடுத்த பின்னர் தமிழ்த் தலைவர்கள் வெளிநாட்டிலாவது ஒன்று கூடுகிறார்கள் எனறால் அது ஏதோ ஒரு வகையிலாவது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய விடயமே.

இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இலங்கை சுதந்திரமடைந்த போதே, தமிழர்களின் உரிமைகளையும் பிரித்தானியரிடமிருந்தே பெற்றிருக்கலாம். இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரே சிங்களத் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களைத் தமது கைகளுக்குள் போட்டுக்கொண்டு, தமிழ்த் தலைமைகளை ஏமாற்றித் தமது காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றத் தொடங்கி விட்டனர்.

ஏமாந்த சோணகிரித்தனமாக தமிழ்த் தலைவர்கள் தமது கதிரைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பிழைப்பு அரசியலில் ஈடுபட்டனர். தமிழ்த் தலைவர்களில் ஒரு சாரார் கண்ணை மூடிக் கொண்டு சிங்களத் தலைமைகள் சொல்வதை நம்பி ஏமாந்தனர். இன்னொரு சாரார் கண்ணை மூடிக் கொண்டு சிங்களத்தலைமைகள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆயினும் ஆரம்பத்தில் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டவர்கள் பின்னாளில் இணக்க அரசியலில் ஈடுபட்டதையும், இணக்க அரசியலில் ஈடுபட்டவர்கள் பின்னாளில் (பட்டுத் தெளிந்தபின்) தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தியதையுமே கடந்தகால இலங்கை வரலாறு காட்டுகிறது.

இதற்கு நல்ல உதாரணமாக ஜி.ஜி. பொன்னம்பலம், அடங்காத் தமிழன் என அழைக்கப்பட்ட கணிதப்பேராசிரியர் சுந்தரலிங்கம், வி.பி.என அழைக்கப்பட்ட வ.பொன்னம்பலம் ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். ஜி.ஜி.பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் சம பிரதிநிதித்துவக் கோரிக்கையை முன்வைத்தபோது அதனை டி.எஸ்.சேனநாயக்க அவர்கள், நடேசபிள்ளை, மகாதேவா போன்றோரின் துணையுடன் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை முறியடித்தார். இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட போது இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கிய சோல்பரிப் பிரபுவின் நண்பரான பேராசிரியர் சுந்தரலிங்கத்தைத் தனது அமைச்சரவையில் இணைத்துக்கொண்டு தான் சிறுபான்மையினர் மீது எந்தவித பாகுபாடும் காட்டமாட்டேன் என பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு உறுதியளித்தார் டி.எஸ்.டி.எஸ்.சேனநாயக்கா பிரதமராகப் பதவியேற்றதும் தனது செயலாளரிடம், "பாரும் இப்பொழுது பொன்னம்பலம் (ஜி.ஜி) வந்து சேர் என்று சொல்லி கை குலுக்கி விட்டுப் போவார்" என்று சொன்னார். டி.எஸ்.சேனநாயக்கா கூறியது போல் பொன்னம்பலமும் போய் பவ்வியமாக "சேர்" என்று கைகுலுக்கி விட்டுச் சென்றாராம்.

இலங்கை சுதந்திரமடைந்தவுடன் அமைச்சரவையில் இணைந்துகொண்டு ஜி.ஜி. கைத்தொழில் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். டி.எஸ்.சேனநாயக்காவின் அரசியல் ஆலோசகராக விளங்கிய சுந்தரலிங்கம், டி.எஸ்ஸின் அழுத்தம் காரணமாக (சூடு கண்டபின்) தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு தமிழ் ஈழக்கோரிக்கையை முன் வைத்தார். இதே போலவே 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை குடியரசின் அரசியல் யாப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்ட போது செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட வ.பொன்னம்பலம் ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். இவற்றை விட தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவும் தேர்தல் காலங்களில் மாறிமாறி ஐக்கிய தேசியக் கட்சியுடனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து ஏமாந்தது தான் கடந்தகால இலங்கைத் தமிழர் வரலாற்றின் அத்தியாயங்கள்.

சிங்களத் தலைமைகள் திட்டமிட்டு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றன என்ற காரணத்தாலேயேதான் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது, ஒரு லட்சம் உயிர்களைப்பலியெடுத்த பின் புலிகளை அழித்து விட்டதாக தென்னிலங்கை மார் தட்டுகிறது. இப்போது வெள்ளம் கழுத்து வரை வந்து விட்டது. சேடம் இழுக்கும் சுதந்திரம் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கழுத்து வரை வந்த வெள்ளத்தை இடுப்பளவுக் கேனும் குறைக்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டிய நிலையே இப்போது....! நிச்சயமாகக் குறைக்க முடியும். தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டால் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நாம் நிச்சயமாக எமது உரிமைகளை வென்றெடுக்கலாம். தமிழ்த் தலைவர்களுடன் முஸ்லிம் தலைவர்களும் ஒன்று கூடியுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தலைமைகளுடன் முஸ்லிம் தலைமைகளும் சேர்ந்தால் கழுத்து வரை வந்த வெள்ளத்திலிருந்து நீந்திப் புதிய அரசியல் வாழ்க்கையை ஆரம்பிப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல. காரணம் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வெளி அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலிலும் சிறுபான்மையினரின் ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர்களுக்குத் தேவை. இந்தச் சாதகமான சந்தர்ப்பத்தை தமிழ் முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பயன்படுத்துவார்களா?

ந.பரமேஸ்வரன்

கனடாவில் றயசன் பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றத்தின் மாவீரர் நாள்

றயசன் தமிழ் மாணவர் மன்றம் தமது மாவீரர் நாள் 2009தை தமிழீழ மண்ணுக்காய் மரணித்த மாவீரரை நினைவில் கொண்டு கார்த்திகை 23ம் திகதி மாலை சிறப்பாக நடாத்தியிருந்தனர். நிகழ்ச்சிகள் குறித்த நேரத்திற்கு கனேடிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முறையே மாவீரரின் தியாகங்களை வெளிப்படுத்தும் நினைவுத் தூபி முன்பாக ஈகைச்சுடரேற்றல், மலர் வணக்கம், அதனைத் தொடர்ந்து தமிழீழ மீட்புப் போராட்டத்தில் வீரமரணமடைந்த போராளிகளுக்கும், அக்கால கட்டத்தில் இலங்கை, இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்காகவும் சில நிமிட அகவணக்கமும் நடைபெற்றது.

தொடர்ந்து எமது தேசியத் தைலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 2008ம் ஆண்டு உரையில் இருந்து அவரது தீர்க்கதரிசனமான சில வரிகள் ஒளிபரப்பப் பட்டு அதற்கான் விளக்கவுரை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் எழுச்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. நிகழ்ச்சி மேடையானது மாணவர்களினால் முற்றுமுழுதாக தயாரிக்கப்பட்டு தமிழீழத் தேசியச்சின்னங்களுடன் காணப்பட்டது. நிகழ்ச்சிகளின்போது றயசன் பாடசாலை மாணவர்களினால் தயாரிக்ப் பட்ட நடனங்கள், கவிதைகள், குறும் படங்கள், மாவீரர்களை போற்றி பாடல்கள் மற்றும் மாணவர்களின் பேச்சுக்கள் போன்றவை நடை பெற்றன.

இறுதியாக, மாணவரின் நடிப்பில், அன்ரன் பீலிக்ஸ் அவர்களின் நெறியாள்கையில் உருவான, எமது தமிழீழத்தை ஆக்கிரமிப்பிலிருந்து இளையோராகிய நாம் விடுவிப்போம் என்ற கருப்பொருள் கொண்ட நாடகம் மேடையேறியது. அதனைத் தொடர்ந்து, மாணவர் மன்ற உபதலைவர், தமிழராகிய நாம் எமது கலாச்சாரம், போராட்ட வரலாறு மற்றும் தனித்தமிழீழம் என்பனவற்றை தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டியதன் முக்கியத்துவத்தினை விளக்கி உரையாற்றினார்.

நிகழ்ச்சிகளின் முடிவில் கொடியிறக்கத்தின் பின், நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப்பாடலுக்கு மாணவர் அனைவரும் எழுந்து நின்று இணைந்து பாடினர். எமக்காய் தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரரின் வழி நின்று இளையோராகிய நாம் விரைந்து தமிழீழத்தை விடுவிப்போம் என்ற உறுதியுடன் மாணவர்கள் வீடு சென்றனர்.

"இனக்கொலை" நாயகர்களின் இழுபறிப் போர்!

இருபதாம் நூற்றாண்டின் ‘யூதஇன’ப் படுகொலைகளுக்குப் பின், இந்நூற்றாண்டு மறக்கவோ மன்னிக்கவோ இயலாத ‘சிறுபான்மை இன அழிப்பு’ இவ்வருட(2009) முற்பாதியில் அரங்கேறியிருக்கிறது.

அதனை ‘வெற்றி’கரமாக நடாத்தி முடித்தவர்கள் இலங்கையின் அதிபர் ராஜபக்‌ஷேயும், முப்படைத்தளபதியாக அதிபரின் கட்டளையை ஏற்றுச் செயற்பட்ட சரத் பொன்சேகாவும் !

‘ஈழம்’ என்னும் ஓர் தனித்தமிழ் நாடு உருவாகிவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றிய ஓர் அண்டை நாடும் இந்த ‘வெற்றி’யில் கணிசமான பங்கினை வகித்திருந்தது.

உலக நாடுகள் பலவற்றின் நவீன ஆயுதங்கள் ; மறைமுகத் தூண்டுதல்கள் ; உற்சாகமூட்டல்கள் ; வேவு வேலைகள்; காலை வாருதல்கள் என்னும் பன்முக ஆற்றல்களது உதவியுடன் நசுக்கப்பட்ட இந்தத் தமிழின உரிமைப்போரின் ‘வெற்றி’க்கு உரித்துடையவர் தாமே என்று மார்தட்டிக் கொள்வதில் எழுந்த போட்டியும், அதிகார மோகமும் இன்று இந்த இரு ‘நாயகர்’களையும் எதிரிகளாக மாற்றிவிட்டிருக்கிறது.

sarath_mahinda

‘புலி’களால் தூக்கம் தொலைத்து நடமாடிக்கொண்டிருந்த இந்த இரு சிங்களத் தலைவர்களும், இன்று ஒருவர் மற்றவரால் தூக்கத்தை இழந்து அவதியுற்றுக் கொண்டிருக்கிறார்கள்!

இவர்கள் இருவரும் அடித்துக் கொள்வதால் அந்நாட்டில் வாழும் தமிழர்கள் அடையப்போவதோ அல்லது இழக்கப்போவதோ எதுவுமில்லை. அதுதான் அவர்கள் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்களே. இனி இழக்க அவர்களிடம் என்ன இருக்கிறது?. என்றாலும், இவர்களது இந்தப் பூசலுக்கான ‘யுத்தத்தில்’ தமிழினம் தொடர்புற்றிருப்பதை மறுப்பதற்கில்லை.

எனவே இந்த இரு ‘இனக்கொலை நாயகர்’களது போராட்டத்தின் பின்னணிபற்றி எழுதுவது, ஒருவகையில் தேவையானதுங்கூட.

அதிபர் பதவி என்னும் அதிகாரம் கிட்டுவதற்கு முன்னர்- ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளியாக விளங்கிய, ராஜபக்‌ஷே ஒரு முன்னாள் மனித உரிமைப் போராளி என்றால் நம்புவதற்கு சிரமமாகத் தானிருக்கும். ஆனால் உண்மை.அதுதான்.

அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வழி இருபது வருடக் கடூழியச் சிறைத் தண்டனை பெற்ற ஊடகவியலாளரான திஸ்ஸநாயகம் தமது வாக்குமூலமொன்றில்; அப்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷே மற்றும் அவரது ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தாம் மேற்கொண்டிருந்த ‘காணாமல் போனோர்’ பற்றிய தகவல்களைத் திரட்டும் பணியில் தமக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிவந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக ….. இந்த ராஜபக்‌ஷே, ஆரம்பத்தில் ஓர் மனித உரிமைப்போராளியாகத் தன்னை இனங்காட்டி வந்திருக்கிறார். அதன் மூலமாக பொதுஜன ஆதரவினையும் பெற்றிருக்கிறார்.

இது, ஒருவகையில் ‘கலைஞர்’ கருணாநிதி தம்மைத் ‘தமிழினக் காவல’ராக வெளிக்காட்டிக்கொண்டதற்கு ஒப்பானதெனலாம்!

இவர்களைப் போன்ற தலைவர்களது சுய உரு வெளிப்படும் சமயத்தில்; அதனால் பெருமளவிலான அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை இவர்கள் உணர்வதில்லை என்பதுதான் வேதனையானது.

எது எப்படியோ, மனித உரிமைகளை மதித்து அதற்காகப் போராடிய ஓர் முன்னாள் மனித உரிமைப் போராளி, இலங்கையின் அதிபர் என்னும் உயர்ந்த பதவியை எட்டிய பின்னர், மனித உரிமைகளை மிதிக்கும் ஒருவராக மாறிவிட்டிருப்பது ஆச்சரியமான உண்மை!

இவரது மனித உரிமை மீறல்களுக்கு சிங்கள ஊடகவியலாளர்கள் பலரும் பலியாகும் நிலையும் ஏற்பட்டிருந்தது. சிறுபான்மை இனமொன்றின் நியாயமான போராட்டத்தினை நசுக்குவதற்குத் தாம் எடுக்கும் நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்கும் சுதந்திரத்தினைப் பறிக்கும் இவரது செயல்கள் சிங்களர்கள் மத்தியிலும் இவருக்கு எதிப்பினை உருவாக்கத் தவறவில்லை.

மற்றொருபுறத்தில், தனது குடும்ப அரசியலை வளர்த்தெடுப்பதில் இவர் கடைப்பிடித்த உத்திகளோ நமது(?), ‘கலைஞரை’யும் மிஞ்சுவனவாக இருந்தன!

‘கலைஞரைப் போன்று, இவர் தமது பேரனுக்கும் ‘பதவி’யினைப் பெற்றுத்தரத் தவறிவிட்டாலும் ( ஒருவேளை இவரது பேரப்பிள்ளைகள் வாக்களிக்கும் வயதை எட்டாதது காரணமாயிருக்கலாம்) ஏனையவற்றில் இவர் கலைஞரைவிடவும் வேகமாகவே செயலாற்றினார்!

இப்போது இலங்கையை ஆள்வதும், இனியும் சில தலைமுறைகளுக்கு அந்நாட்டை ஆளப்போவதும் ராஜபக்‌ஷே பரம்பரையினரே என்னும் நிலையை உருவாக்க இவர் அரசியல் சதுரங்கத்தில் நகர்த்த முயன்ற ‘காய்கள்’, காட்டிய சர்வாதிகார அடக்கு முறைகள் என்பன, இவருக்கு எதிர்ப்பினை உருவாக்கும் காரணிகளாக அமைந்தன.

சென்ற மே மாத நடுப் பகுதிவரை- அதாவது ‘புலிகள் இயக்கம் முறியடிக்கப்பட்டுவிட்டது’ என்னும் செய்தி உறுதியாகும்வரை- ‘புலிகளையும் அவர்களை ஆதரிக்கும் தமிழர்களையும் பற்றிச் சிங்கள அரசியல் வாதிகள் உருவாக்கிவைத்த ஒருவித ‘கிலி’யில் வாழ்ந்த சிங்களப் பொதுசனம், அதன் பின்னர் தமது உண்மை நிலையினைச் சிறிதுசிறிதாக உணர ஆரம்பித்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் மஹிந்தவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் இன்று இலங்கை அரசியலில் பரபரப்பினை உருவாக்கியுள்ளது.

தலைநகர் கொழும்பில் இந்த இருவருக்கும் இடையேயுள்ள முறுகல் நிலையினைத் தங்கள் அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்துவதில் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், அதிபர்மீது அதிருப்தி கொண்டுள்ள ஜாதிக விமுக்திப் பெரமுனவும் முனைந்து நிற்கின்றன.

அதிலும் குறிப்பாக அண்மைக்காலங்களில் ராஜபக்‌ஷேயின் அரசியல் அதிரடிகளால் சிதிலமாகிவிட்டிருக்கும் எதிக்கட்சியான ஐக்கியதேசியக்கட்சி சரத் பொன்சேகாவை எதிர்வரும் அதிபர்தேர்தலில் ஆதரிக்க முன்வந்துள்ளது. ஜேவிபியும் சில நிபந்தனைகளுடன் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவில் இருப்பதாகக் கோடிகாட்டுகின்றன!

கொழும்பில் நிலமை இவ்வாறிருக்க,

உலகின் ஒரேயொரு ‘காவல்காரன்’ தானே என்னும் இறுமாப்பில் ஆப்கானிஸ்தான், ஈராக் என்று தன் கைவரிசையைக் காட்டிவந்த அமெரிக்காவுக்கு ……

அதிலும் தொடர்ந்து வட-கொரியா, ஈரான் ஆகிய நாடுகளைப் பணியவைக்கப் பகீரதப்பிரயத்தனம் செய்துவரும்

அமெரிக்காவுக்கு………….,

‘சுண்டைக்காய்’ நாடான இலங்கை…….. சீனாவின் துணையோடும், இந்தியாவின் ஆசியோடும், சற்று அதிகமாகவே ‘வாலாட்டுவது’ பிடிக்கவில்லை.மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளைத் தட்டிக்கழித்ததோடு அவை இலங்கைமீது கொண்டுவந்த மனித உரிமை மீறல்களுக்கான கண்டனங்களையும் இந்தியா , கியூபா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு முறியடித்ததையும் அது மறந்துவிடவில்லை.

ஈழத்தமிழர்களைக் கொல்வதற்கு ஆயுதங்களை வழங்கியும் , அவர்களது விடுதலைப் போராளி இயக்கத்தைப் ‘பயங்கரவாதிகள்’ எனப் பட்டியலிட்டு அவர்களைத் தனிமைப்படுத்தவும் உதவிய இந்த ‘உலக மகா சண்டிய’’ருக்கு, ராஜபக்‌ஷே ‘மூக்கில் தும்பைவிட்டு’ ஆட்டுவது பிடிக்குமா ? என்ன ?!

அதற்குக் காலம் பார்த்திருந்த அமெரிக்கா, சரத் பொன்சேகாவின் ‘பச்சை அட்டை’ விவகாரத்தின் மூலம் அவரைத் தனது வழிக்குக் கொண்டுவரத் திட்டம் தீட்டியது.

இதனால், ‘பச்சை அட்டை’க்காக அமெரிக்கா சென்ற சரத், அங்கிருந்து அதிபர் தேர்தலுக்கான ‘பச்சை கொடி’யுடன் நாடுதிரும்பினார்.

உலகின், பல முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ-சர்வாதிகார நாடுகளுக்கும், முடியாட்சி தேசங்களுக்கும் ஆபத்பாந்தவனாக விளங்குவதில் மகிழ்ச்சியடையும் இந்த ‘மக்களாட்சி’யின் மகிமை போற்றும் நாட்டுக்கு…. இப்போது இலங்கையின் ராணுவத் தலைவர் ஒருவர் கிடைத்திருப்பது இரட்டை மகிழ்ச்சி தரும் விடயமல்லவா?

அமெரிக்காவிலிருந்து இலங்கை திரும்பியதும், தனக்கு வழங்கப்பட்டிருந்த பதவியைத் துறந்த சரத், ராஜபக்‌ஷேயின் அரசுக்கெதிராக பதினாறு அம்சப் பட்டியலொன்றினையும் தயாரித்து அளித்துள்ளார். அதில் முதல் பதின்மூன்றும் முற்றுமுழுதாக அவரது பதவி பற்றியதே. இறுதியாக உள்ள மூன்றிலும், இடம்பெயர்ந்துள்ள தமிழர் நலன்கள் மற்றும், இலங்கையில் வாழும் தமிழர்களது அரசியல் உரிமைகள் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்பனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவைகூட, சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர்… அவர் ஈழத்தமிழர்கள் குறித்துக் கொண்டிருந்த எண்ணத்திற்கும், வெளியிட்ட கருத்துகளுக்கும் நேர்மாறானதாக- பதவியை அடைவதற்கு தமிழர்கள் பற்றிப் பேசியே ஆகவேண்டும் என்னும் நிர்ப்பந்தங்காரணமாக இடம்பெற்றிருப்பதாகவே தெரிகிறது.

இதில் உள்ள நேர்மை பற்றி, கடந்த சில வருடங்களாக அவரது ராணுவத் தலைமையின் கீழ் செயலாற்றிய இலங்கை அரசபடைகளின் நடவடிக்கைகளை அனுபவித்த; இப்போது எஞ்சியிருக்கும் (!)ஈழத் தமிழர்கள் நன்கு அறிவார்கள்.

அவர்களைப் பொறுத்த மட்டில்……

“தமிழர்களுக்கு எது செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரியும்…. அவர்கள் நினைப்பதை எல்லாம் நான் வழங்கிவிட மாட்டேன்” என்று திமிர்த்தனமாகப் பேசிய ராஜபக்‌ஷவும்;

“இலங்கையில் தமிழர்கள் தங்களுக்கென எவ்வித தனியான உரிமைகளையும் பெற்றிருக்கவில்லை. அவர்கள் சிங்களரோடு இணங்கி வாழப்பழகவேண்டும்” என்னும் தொனியில் கருதுத் தெரிவித்த பொன்சேகாவும் ஒரே முகம் கொண்ட இருவர்தாம்.

என்றாலும்,

‘ஆடுகள் மோதிக்கொண்டால்…… ஓநாய்க்குக் கொண்டாட்டம்’ என்னும் பழமொழி ஒன்று இருப்பதால்…..

ஓநாய்கள் மோதிக்கொள்ள ஆரம்பிக்கும் போது; ஒருவேளை ‘ஆடுகள்’ தப்பி விடுதலை அடையக்கூடுமோ ? என்னும் ஒருவித ‘நப்பாசை’ என் மனதில், துளிர்விடத்தான் செய்கிறது!

எதற்கும் பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

ரொறன்ரோ பல்கலைக்கழக மாவீரர் நாள் நிகழ்வு

தாயகமண்மீட்புப் போரிற்காய் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் வாரம் வெள்ளி நவம்பர் 20, 2009 தொடங்கியது.


அன்று,ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் மூன்று வளாகங்களான இசுகாபரோ, மிசிசாகா, சேன்ட்ஜோர்ஜ் இணைந்து மாவீரர் நாள் நிகழ்வினை நடத்தினர். ரொறன்ரோ பல்கலைகழகத்தின் இசுகாபரோ வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவிலான பல்கலைக்கழக மாணவர் கலந்து கொண்டனர்.


பிற்பகல் 7:30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. கனடிய மற்றும் தமிழீழக் கொடியேற்றங்களைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களால் பல எழுச்சிமிக்க நாடகங்களும் நடனங்களும் நிகழ்த்தப்பட்டன.


மாணவர் பல உணர்வுமிக்க பேச்சுக்களையும் வழங்கினர். தமிழீழம் மலரும், அது காலத்தின் கட்டயாம். அதற்காய், தமிழராகிய நாம், ஒற்றுமையாய்,எழுச்சியுடன் எழுந்து உழைக்க வேண்டும். ஈழத்தில் அவலப்படும் மக்களை நாம்காப்பாற்ற வேண்டும், அவர்களை தமிழீழத்தில் வாழ நாம் வழிஅமைக்க வேண்டும் போன்ற கருத்துகளை பேச்சுகளை முன்வைத்தன.


நிகழ்வின் நிறைவில் தமிழீழம் மலரும்வரை நாம் ஓயப்போவதில்லை என்று மாணவர் உறுதிமொழி எடுத்தனர். கனடிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடி இறக்கத்துடன் பிற்பகல் 9:30 மணிக்கு மாவீரர்நாள் நிறைவு பெற்றது.

இருப்பாய் தமிழா நெருப்பாய் நிகழ்வில் கலந்துகொள்ள இயக்குநர் செந்தமிழன் சீமான் ரொறன்ரோ சென்றடைந்தார்

நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று கனடாவின் ரொறன்ரோ நகரை சென்றடைந்துள்ளார். ஈழமுரசு வருடம் தோறும் நடத்தும் தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை விழாவில் கலந்துகொள்வதற்காக ரொறன்ரோ நகரை சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

எதிர்வரும் 26ம் திகதி வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ரொறன்ரோ நகரிலும், 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியல் நகரிலும் நடைபெறவுள்ள தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 55 எழுச்சி நிகழ்வான இருப்பாய் தமிழா நெருப்பாய் நிகழ்வில் பங்குபற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சிரிப்புக்குள்ளாகியுள்ள செம்( கனி)மொழி மாநாடும் செம்(மறி) சிவத்தம்பியும்

sivathampiஈழத்தமிழினத்தின் பாரிய அழிவின் பங்காளி என்ற பட்டத்திற்கு முழுமையான உரித்துடையவர் என்று உலகத் தமிழர்களினால் சூட்டப்பட்ட தமிழ் வளர்தத (தமிழால், தனது குடும்ப அரசியல், பொருளாதாரம், முதல்வர் பதவி என்பவற்றில்| தன் நிலைய வளர்ததுக் கொண்டவர்) தமிழக முதல்வர் மு.கருணாநிதி உலகத்தமிழர் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை எப்படியாவது நடத்திவிட வேண்டுமெனப் பகீரதப் பிரயத்தனம் செய்து காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.

தமிழால் தன்னை வளர்ததுக் கொண்டவர் என்ற தனித்துவமான முத்திரையை மேலும் ஒரு முறை அழுத்தமாகப் பதிவுசெய்துகொள்ள அவர் மேற்கொண்டுள்ள மற்றுமோர் முயற்சி இதுவாகும்.

தமிழை நூலாகக், கலையாக, கவியாக, மேடைப் பேச்சாக, அரசியலாக விற்று தன்னை வளர்ததுக்கொண்ட (செல்வம் நிறைவாகச் சம்பாதித்த – திருமிகு) முத்துவேலு கருணாநிதி அவர்கள் தமிழால் தன்னை வளர்ததுக்கொண்ட வயது முதிர்நதவர் என்பதைச் சுருக்கமாகத் தமிழ் வளர்தத பெரியார் என்ற சொல்லும்போது தவறாக உலகத் தமிழினம் தமிழைக் கருணாநிதி வளர்ததார் என்ற தப்புக்கணக்கு போட்டுவிடக்கூடாது என அன்னை தமிழின் பெயரால் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தனது முதல்வர் பதவிக் காலத்தை வளர்ததுக்கொள்ள தமிழை மட்டுமல்ல தமிழர்களின் தன்மானத்தையும் விற்று தனித்துவத் தலைவராகி விட்டார். ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதுபோல் மத்திய அரசிடம் மடிப்பிச்சையேந்தி பதவி வேட்டையாடியதும், அதை உலகத் தமிழினத்தின் கண்களிலிருந்து மறைக்க தற்பொழுது உலகத்தமிழ் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை நடத்துவதும் கண்டு உலகத் தமிழினம் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றது.

அதுமட்டுமல்ல தன்னை வளர்கக தழிழை மேலும் விற்பது போன்று 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவரகள் இலங்கையின் சிங்கள கடற்படையினரால் கச்சதீவுக் கடலில் வைத்து நாய்களைவிடக் கேவலமாக நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுச் சாகடிக்கப்பட்தோடு கோடிக்கணக்கான பெறுமதியுள்ள அவர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டது.

அதற்காக இலங்கை அரசை எதிர்தது ஒருசொல்தானும் கேட்காது, அழிக்கப்பட்ட அந்த அப்பாவி மீனவர்களின் உயிருக்கும், சொத்துக்களுக்கும் ஈடாக கேட்டிருப்பது, தன்னை வளர்ககும் தனியான திட்டத்திற்கு அவர் இலங்கை அரசைக் கேட்டிருப்பது, தள்ளாத வயதில் உள்ள ஈழத்தமிழ் அறிஞர் சிவத்தமிபி அவர்களை அரசு பலாத்காரமாக அவரது செம்(மறி) மொழி மாநாட்டிற்கு அனுப்பிவைக்கச் செய்வதுதான்.

தனது நாட்டில் பிறந்தவர்களாயிருந்தும், தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால், கோடிக்கணக்கான சொத்துக்கள் அறுநூறுக்கு மேற்பட்ட உறவுகளின் உயிர்கள், பல்லாயிரக்கணக்கான உறவுகள் அடிபாட்டிற்குள்ளான அவலங்கள் அனைத்தையும் இலங்கை அரசை ஏன் என்று ஒரு வார்ததை தானும் கேட்காதவரான தமிழால் வளர்நத தலைவரும், அவரது தயவால் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைத்தக்கொண்ட மத்திய அரசும் அவுஸ்திரேலியாவில் ஓருசில சீககிய மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதும் போர்ககொடி தூக்குகிறார்கள்.

இப்படியே தமிழையும் தமிழ் இனத்தையும் விற்றும், இனஅழிவிற்கு வழிகாட்டியாய், உறுதுணையாய் இருப்பதன் மூலமும் தமிழால் தன்னை வளர்ததுக்கொண்ட பெரியாரின் சேவைகளை எழுதிக்கொண்டு போனால் ஏடுதாங்காத அளவிற்குக் கோடிட்டுக் காட்ட முடியும். ஆனால் அதற்கு நேரம் போதாது என்பதல் ஒருசிலவற்றை ஒப்புவித்திருக்கின்றோம்.

பாவம் உறவுகளின் பேரழிவிற்கு உள்ளாகி மனம் சொந்து நடைப்பிணங்களாக நடமாடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் அறிஞர்களை, இலங்கை பாசிச அரசின் கெடுபிடிகளுடன் தமிழால் தான் வளரும் தாகத்திற்குப் பலியாக்கப் போகிறாரோ (செல்வம் நிறைவாகச் சம்பாதிதத – திருமிகு) திருமிகு முத்துவேலு கருணாநிதி அவர்கள் உலகத் தமிழினத்தை உற்று நோக்கிப் பார்ததுக் கொண்டிருக்கும் உண்மைத்துவம் இதுவாகும்.

- சங்கிலியன்

புலிகள் இயக்கத்தின் குழப்பநிலையும் உண்மை நிலைவரமும்

தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரை ஒருகட்டத்தில் தனியே இழுக்கத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எண்ணற்ற சவால்களையும் சோதனைகளையும் சந்தித்து வளர்ந்து வந்தது. மீளாது எனக் கருதிய சந்தர்ப்பங்களிலெல்லாம் மீண்டெழுந்ததோடல்லாமல் வளர்ச்சிப் பாதையில் ஒருபடி பாய்ந்துமிருந்தது. ஆனால் வீழாது எனக் கருதிய பொழுதில் அது களத்தில் வீழ்ந்தது. இராணுவ ரீதியில் மீண்டெழ முடியாத பேரழிவை அவ்வியக்கம் சந்தித்தது. தாயகத்திலே ஒரு கட்டமைப்பாகச் செயற்பட முடியாத நிலைக்கு அவ்வியக்கம் சென்றது.

இருந்தும் அரசியல் வெளியில் புலிகள் அமைப்புக்கான வகிபாகம் முற்றாகத் துடைத்தழிக்கப்படாமல் இருந்தது உண்மையே. அந்தப் புள்ளியிலிருந்து மீண்டெழ நினைத்த இயக்கத்துக்கு தொடர்ந்தும் அடிமேல் அடி விழுந்துகொண்டிருக்கிறது. அவ்வியக்கத்தைத் தப்பிப் பிழைக்க விடுவதில்லையென்று கங்கணம் கட்டிக்கொண்டு பல சக்திகள் விடாது முயற்சிப்பதை அறிய முடிகிறது. இயக்கம் சந்தித்துக் கொண்டிருக்கும் தொடர் சவால்களில் மிகப் பிந்தியதும் மிகவும் பாரதூரமான விளைவுகளைத் தரக்கூடியதுமான சிக்கல்தான் களத்திலிருந்து தளபதி ராம், நகுலன் போன்றோர் வெளியிடுவதாக வந்து கொண்டிருக்கும் அறிக்கைகள்.

இப்போது ராம், நகுலன் தரப்பிலிருந்து வெளியிடப்படும் அறிக்கைகளும் அல்லது அவர்கள் வெளியிடச் சொன்னதாகச் சொல்லப்பட்டு வரும் அறிக்கைகளும், அவர்கள் தனிப்பட்டவர்களோடு செய்து கொள்ளும் உரையாடல்களும் மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவு செல்வாக்கைக் கொண்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. சிலநாட்களின் முன்னர் குறிப்பிட்ட தளபதிகளும் பொறுப்பாளர்களும் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, தடுப்பு முகாமிலிருந்தவாறே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்குழு ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து எதிர்பார்த்தது போலவே ஓர் அறிக்கை மறுபுறத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.

இறுதியாக தளபதி ராமினால் வெளியிடப்பட்டதாகச் சொல்லப்படும் அறிக்கையில் புலம்பெயர்ந்த நாடுகளிலிருக்கும் பொறுப்பாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் சாடி எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக நிதி, சொத்துக்கள் என்பன பேசப்பட்டுள்ளன. புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்கு இவர்களே காரணமெனவும், தற்போது தாயகத்திலுள்ள போராளிகள் தொடர்பாகவோ, கைது செய்யப்பட்டுள்ள போராளிகள் தொடர்பாகவோ, முகாம்களிலிலுள்ள மக்கள் தொடர்பாகவோ அக்கறையற்றிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுக்களில் சில தமிழ்மக்களிடமும் உள்ள அபிப்பிராயங்களே. இதனால் மிக இலகுவாக இவை தமிழ்மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் செயற்குழுவுக்கும் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கும் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையைக் குறைக்க வழிசெய்யும் நிலையிலுள்ளன. இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மிகக்கவனமாக அவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

ஒருவகையில் இந்த அடியை வாங்க புலிகள் தகுதியானவர்களே. மறுபுறத்தில் அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. தளதிகளான இராம், நகுலன் உட்பட்டோர் இராணுவத்தினரின் பிடியில் சிக்கியமை ஏற்கனவே தெரிந்திருந்தும் அதை மக்களிடம் மறைத்து இவ்வளவு நாளும் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். தளபதி ராம் அனுப்பிய அவரின் தனிப்பட்ட அறிக்கையைக் கூட செயற்குழுவின் சார்பில் பிரசுரித்துக் கொண்டிருந்தார்கள். தளபதி ராமோடு தொலைத் தொடர்பு வழியான தொடர்பினைக் கொண்டிருந்தார்கள்.

தமது பிடியிலிருந்த ராமையும் நகுலனையும் இன்னும் சில முக்கிய பொறுப்பாளர்களையும் பயன்படுத்தி சிறிலங்கா இராணுவத் தரப்பு எஞ்சிய புலிகள் அமைப்பின் செயற்குழுவோடும் செயற்பாட்டாளர்களோடும் விளையாடிக் கொண்டிருந்தது. மறுபுறத்தில் (கே.பி யின் கைதுக்குப் பின்னர்) இவைகள் தெரிந்தும்கூட தமக்கு எதுவும் தெரியாதது போல புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். இயக்கத்தின் சொத்துக்கள், நிதி வழங்கல் வழிமுறைகள், செயற்பாட்டாளர்கள் பற்றி சாடைமாடையாகக் கதைபிடுங்க அவர்களும், அத்தருணங்களில் இலாவகமாகத் தப்பி இவர்களுமென இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு இவ்வளவு காலம் நீண்டிருந்ததே ஆச்சரியம்தான்.

இப்போது மாவீரர் நாளையொட்டி இந்தக் கண்ணாமுச்சி விளையாட்டு முடிவுக்கு வந்திருக்கிறது. ஏனென்றால் தமிழ்மக்களுக்கான புலிகளின் மாவீரர்நாள் செய்தி ஏதோவொரு விதத்தில் தாக்கம் செலுத்துவதாகவே அமைகிறது. அவ்வறிக்கையில் சொல்லப்படும் விடயங்களில் தமது நோக்கத்தைத் திணிக்க முயன்று தோற்றுப் போன நிலையில் சிறிலங்கா அரசதரப்பு தனது தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. அதன்படி மாவீரர் நாளுக்கான உரை வழமைபோல் இடம்பெறும் என்ற அறிவிப்பு தளபதி ராமின் பெயரால் நேரடியாக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்குழுவால் விடுக்கப்படாத நிலையில் சில ஊடகங்கள் எச்சரிக்கையடைந்து கொண்டன. சில ஊடகங்கள் மட்டும் அதை வெளியிட்டு, பின்னர் புலிகள் வேண்டுகோளுக்கிணங்க அவ்வறிக்கையை நிறுத்திக் கொண்டன.

இனிமேலும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டைத் தொடர முடியாத நிலையில்தான் புலிகள் இயக்கம் உண்மையை ஊடகங்களுக்குத் தெரிவித்தது. அதை சில ஊடகங்கள் பொதுமக்களின் பார்வைக்கும் வெளியிட்டன. அதைத் தொடர்ந்து எதிர்பார்த்ததைப் போல் மறுதரப்பிலிருந்து உணர்ச்சிமயமான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்மக்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளதை உணர்ந்துகொள்ள முடிகிறது. முதலில் இராணுவ, புவியியல் நிலைமைகளைக் கொண்டு சிலவற்றை ஊகிக்க முற்படுவோம்.

மே மாதம் 18 ஆம் நாளோடு வன்னி முழுவதும் சிறிலங்கா அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து சேர்ந்தது. அதற்கு முன்பே தளபதி ராம், நகுலன் ஆகியோரோடு சில நூறு போராளிகள் அம்பாறையை மையமாக வைத்துச் செயற்பட்டு வந்தார்கள். அம்பாறையில் இருந்த புலிகளின் இராணுவக் கட்டமைப்பைச் சிதைக்க சிறிலங்கா அரசபடை தன்னாலான முயற்சிகளை எடுத்தது. கஞ்சிக் குடிச்சாறு வனப்பகுதியில் பாரிய தேடுதல் வேட்டைகளை நடத்தியதும், அங்கே பல சண்டைகள் நடந்ததும் நாமறிந்ததே.

இந்நிலையில் வன்னிப்பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த பின்னர் மிகப்பெரிய ஆளணிவளத்தோடிருந்த சிறிலங்கா இராணுவம் தனது அடுத்த நடவடிக்கையாக கிழக்கின் காடுகளில் இருக்கும் தளபதிகளையும் போராளிகளையும்தான் வேட்டையாடியிருக்கும். வன்னியில் உக்கிரச் சமர் நடந்துகொண்டிருந்தபோதே தனக்கிருந்த மட்டுப்படுத்தப்பட்ட ஆளணி வளத்தோடு அம்பாறைக் காடுகளில் தேடுதல் வேட்டையிலீடுபட்ட அரசபடை, பின்னர் அப்படியெதுவும் செய்யாது பேசாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. வன்னியின் அழிவுக்குப்பின்னர் அம்பாறைக் காடுகளில் சண்டைகள் நடந்ததாக இருதரப்பிலிருந்தும் தகவல்களில்லை. சுமார் ஆறுமாதகாலமாக தளபதி ராமையும் ஏனையவர்களையும் செயற்பட விட்டுக்கொண்டு அரசபடை பேசாமலிருந்தது என்பது நம்புவதற்குக் கடினமே.

இதே காரணத்தை வன்னியிலும் பொருத்திப் பார்த்து நாம் சில முடிவுகளுக்கு வரமுடியும். வன்னிக் களத்திலே தலைவரோ முக்கிய தளபதி யாரேனுமோ இறக்காமல் தப்பியிருக்கும் பட்சத்தில், அவர்கள் எங்கோ காடுகளுள்தான் மறைந்திருக்கிறார்கள் என்ற சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் சிறிலங்கா அரசபடை இவ்வளவு காலமும் பேசாமலிருந்திருக்க வாய்ப்பில்லை. தளபதிகளல்லாதவர்களைக் கொண்ட மிகச் சிறு அணிகள் சிலவேளை தப்பிப் பிழைத்திருக்க வாய்ப்புண்டேயன்றி வேறு சாத்தியங்களில்லை. இந்திய இராணுவக் காலப்பகுதியை உதாரணப்படுத்தும் காலம் இதுவன்று. சிறிலங்கா அரசபடையினரின் ஆட்பலம், நவீன வசதிகளைக் கொண்ட நுட்பப் பலம் என்பன இன்றைய நிலையில் மிகமிக உயர்ந்த நிலையிலேயே உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

மேற்படிச் சந்தேகம் இப்போதன்று, முன்பே விடயம் தெரிந்தவர்களால் கதைக்கப்பட்டதுதான். காடுகளில் சண்டை நடப்பதாகத் தன்னும் செய்திகளைக் கசிய விடுவதன் மூலம் தமது சூழ்ச்சிக்கான நம்பகத்தன்மையைப் பேண அரசு முயற்சிக்கவில்லை. அவ்வளவு நம்பிக்கை எங்கள் மேல்!

சரி, இனி தற்கால விடயத்துக்கு வருவோம்.
ராமின் பெயரால் வெளியிடப்பட்ட, வெளியிடப்படும் அறிக்கை பலரிடையே சலனத்தை எற்படுத்தியிருக்கிறதென்பது வெளிப்படை. முன்னாள் இயக்க உறுப்பினர்களாகவும் தற்போதைய செயற்பாட்டாளராகவுமுள்ளவர்கள் கூட இவ்வறிக்கையை நம்பத் தலைப்பட்டுள்ளார்கள் என்பது வேதனையே. பதிவர் சாத்திரியும் அவர்களுள் ஒருவர். அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள பலவற்றை நாமும் பேசுகிறோம்தான். அதற்காக தவறான இடத்திலிருந்து வருமோர் அறிக்கைக்கு நாம் ஆதரவு வழங்கி எதிரியின் சூழ்ச்சிக்குப் பலியாகாமலிருப்பது முக்கியமானது. அதுவும், இதற்கு முந்திய அறிக்கையில், மாவீரர் தினத்தில் கொள்கை விளக்க அறிக்கை வெளிவரும் என்றுகூடப் போடாமல், 'உரை' நிகழ்த்தப்படும் என்று எழுதப்பட்ட பின்னரும் அவ்வறிக்கையை நம்புவது ஏனோ தெரியவில்லை. தலைவரின் இடத்திலிருந்துகொண்டு உரை நிகழ்த்தக்கூடியவராகத் தன்னைக் கருதிக் கொள்பவரில்லை ராம் என்பது அவரையறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அப்படியொன்று வந்தால் மக்கள்தான் ஏற்றுக்கொள்வார்களா என்பது அடுத்த கேள்வி.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பு காத்திரமாகவும், நேர்மையாகவும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட இந்த இராணுவ இழப்பென்பது திடீரென ஏற்பட்ட ஒன்றன்று. அதற்கான அத்திவாரம் முன்பே போடப்பட்டு மிகுந்த எச்சரிக்கையோடும் திறமையோடு எதிரியால் நகர்த்தப்பட்ட காய்களும், அவற்றை முறியடிக்கத் தவறிய எமது தவறும் முக்கியமானவை.

வன்னியின் வீழ்ச்சிக்கு முன்பே எமக்கான ஆப்பை இறுக்கிவிட்ட எதிரியின் நகர்வுகள், அதில் பகடைக்காயாக்கப்பட்ட எமது போராளிகள், பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களை இப்போதாவது வெளியிட வேண்டும்.

நேர்மையாகவும் தீவிரமாகவும் செயற்பட்டுக் கொண்டிருந்த தளபதி ராம் போன்றவர்கள் எவ்வாறு சூழ்ச்சியின் வலையில் சிக்கவைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள், ஏனையவர்கள் எப்படி பிடித்துக் கொடுக்கப்பட்டார்கள், முழுவிருப்போடு எதிரியியோடு இணைந்து பணியாற்றிய துரோகிகள் யார் என்பவனவற்றையும் விரிவாகத் தெளிவுபடுத்த வேண்டிய நேரமிது. இனியும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு வேலைக்குதவாது.

எமது ஈழவிடுதலைப் போராட்டம் இனி எப்படிப் போகுமென்பது தெரியவில்லை. அதை ஒற்றைமாடாக இழுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் என்ன கதியாகுமென்று தெரியவில்லை. ஆனால் (குறைந்தபட்சம்) அவ்வியக்கத்துக்கு ஒரு பொறுப்புண்டு. நடந்ததைச் சொல்லுங்கள்.

புலனாய்வுப் பகுதியில் எதிரியை முறியடிப்பதில் தோற்றுவிட்டோம். அனால் என்ன நடந்ததென்பதையாவது மறைக்காமல் சொல்வது இயக்கத்தின் கடமை.


உண்மையைச் சொல்வதால் மக்கள் எம்மைவிட்டுப் போய்விடுவார்களென்ற பயம் வெகுளித்தனமானது. 'பொய்யைச் சொல்லுங்கள், கூட வருகிறோம்; உண்மையைச் சொன்னால் ஓடிப்போகிறோம்' என்று சொல்லும் மக்களை இழுத்துக் கொண்டு எங்கே போவது?

எமது இயக்கத்தின் மீதான எதிரியின் சூழ்ச்சித் திட்டங்களும், அவை நடைமுறைப்படுத்தப்பட்ட விதமும், அதற்குப் பயன்படுத்தப்பட்டவர்கள், பலிக்கடா ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களுமடங்கிய விரிந்த அறிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து எதிர்பார்க்கிறோம்.

எழுதியவர் வன்னியன்

வரலாறு ஒரு நாளும் வாழ்த்தாது - தமிழருவி மணியன்

'மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது' என்று 'பூம்புகார்' திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது.

'மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்' என்று எழுதினார் ஜெயகாந்தன். 'அழுதால் கொஞ்சம் நிம்மதி' என்றார் கண்ணதாசன். வீழ்ந்துவிட்ட இனத்துக்காக அழுதாலும், தாழ்ந்துவிட்ட தன் பெருமைக்காகஅழுதாலும் அழுவது நல்லதுதான். ஆனால், கலைஞர் கண்ணீர் விடுவதோடு நிறுத்தாமல், 'விடுதலைப் புலிகளின் அவசர முடிவால் ஏற்பட்ட விளைவுகளை' விளக்கியிருக்கிறார். அந்த விளக்கத்தில் நேர்மையின் நிறமில்லை என்பதுதான், பொய்யின் நிழல் படாத நிஜம்.

மகிந்தா ராஜபக்ஷேவும், ரணில் விக்கிரமசிங்கேவும் 2005-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகள் ரணிலை ஆதரிக்க மறுத்தது ஒரு பெரிய அரசியல் பிழை என்பது கலைஞரின் கருத்து. ஒரு லட்சத்து

81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்ரணில் தோல்வியைத் தழுவினார். ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்குப் பணிந்து தேர்தலைப் புறக்கணிக்காமல், ரணிலுக்கு ஆதரவாக வாக்குகளைவழங்கியிருந்தால், ராஜபக்ஷே அதிபராக வந்திருக்க முடியாது என்பதே நம் முதல்வரின் வாதம். 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் பிரபாகரன் தமிழர்களை வாக்களிக்க அனுமதித்திருந்தால், ரணில் வெற்றிபெற்று அமைதிப் பேச்சைத் தொடர்ந்திருப்பார் என்பது கலைஞரின் நம்பிக்கை.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 1998 மற்றும் 1999-ல் ஆற்றிய 'மாவீரர் தின' உரைகளில், 'சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் சமாதானப் பேச்சுகளில் பங்கேற்க நாம் தயார்!' என்று பிரகடனம் செய்தார்.

நவம்பர் 2001-ல் மாவீரர் நாள் உரையில், 'ஆயுத பலத்தினால் எமது மக்களை அடிமை கொள்ள முனையும் அரசுக்கும், அரசுப் படைகளுக்கும் எதிராகவே நாம் போர் புரிந்து வருகிறோம். இக்கொடிய போருக்கு முடிவு கட்டி, நிரந்தர அமைதியை நிலைநாட்டுவதாயின், போர் வெறி கொண்ட இனவாத சக்திகளை இனங்கண்டு ஒதுக்கிவிடுவதோடு, தமிழ் மக்களுக்கு நிதி வழங்கவும் சிங்கள மக்கள் முன் வர வேண்டும்' என்று பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.

ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகளும் இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகளிடம் அமைதியான அரசியல் தீர்வை எதிர்பார்த்து ஒவ்வொரு முறையும் ஏமாற்றமுற்றனர் என்பதுதான் வரலாறு. இதை நம் முதல்வர் நன்றாகவே அறிவார். ஆனால், பதவி நாற்காலிப் பற்றுதான் அவர் நினைப்பதை வெளியில் சொல்லி, 'நெஞ்சுக்கு நீதி' தேடுவதைத் தடுத்துவிடுகிறது.

ஈழத் தமிழர்கள் 1987-ல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணத் தெருக்களில் வீதியுலா வந்தபோது, 'நிரந்த அமைதியையும், உரிமை மிக்க வாழ்வையும் வழங்க வானத்து தேவர்களே வரமளிக்க மண்ணில் வந்து இறங்கியதுபோல்' மகிழ்ந்து வரவேற்றனர்.

ஆனால், அந்த அமைதிப் படையால் தங்கள் அமைதி முற்றாகக் குலைந்தபோது அவர்கள் திகைத்து நின்றனர். அப்போதும் நம் முதல்வராக இருந்த கலைஞர் அந்த 'அமைதிப் படை' நாடு திரும்பியபோது தேடிச் சென்று வரவேற்க மறுத்தார். அன்று கலைஞருக்கு இனம் முக்கியமாகப் பட்டது. இன்று...?

சந்திரிகா குமாரதுங்காவால் இனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தனர். அவர் 1994-ல் வெற்றி பெற்றபோது, 'காரிருள் கலைந்து வெளிச்ச விழுதுகள் ஈழ நிலத்தில் இறங்கியதாக' தமிழர் நெஞ்சம் மீண்டும் நம்பிக்கை கொண்டது. வளையல்களுக்கும், புடவைகளுக்கும் அது சந்திரிகாவின் பெயர் சூட்டி மகிழ்ச்சியில் மிதந்தது.

ஆனால், வாக்களித்தபடி ஈழத்தமிழர் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படவுமில்லை; போரை நிறுத்த சந்திரிகா அரசு சம்மதிக்கவுமில்லை. அவருடைய ஆட்சியில்தான் 'ஜெய சுக்குறு' (வெற்றி நிச்சயம்), 'தீச்சுவாலை' போன்ற மோசமான ராணுவ நடவடிக்கைகள் தமிழருக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டன.

ரஷ்யா, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து நவீன போர்க் கருவிகளையும், படை விமானங்களையும் சந்திரிகா அரசு வாங்கிக் குவித்தது. யாழ் நகரை, சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து, ஐந்து லட்சம் தமிழர் இடம் பெயர்ந்தனர். இந்த மாபெரும் மனித அவலத்தை உலகநாடுகள் அன்றும் மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தன. 'சமாதான தேவதை' சந்திரிகாவின் சுயமுகம் வெளிப்பட்டபோது ஈழத்தமிழர்கள் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடந்தனர்.

சந்திரிகாவிடம் ஏமாற்றமடைந்த தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கேவிடம் நம்பிக்கை கொண்டனர். அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி சமாதானப் பேச்சு வார்த்தை மூலம் இனப் பிரச்னைக்கு உரிய தீர்வை வழங்குவதாகவும், பொருளாதாரத் தடை, பயணத் தடை போன்ற முட்டுக் கட்டைகளை முற்றாக நீக்குவதாகவும் 2001-ல் நடந்த பொதுத்தேர்தலின்போது வாக்குறுதி வழங்கியது.

'சமாதானம் வேண்டி நிற்கும் சக்திகளுக்கும், அதற்கு எதிரான தீவிரவாத சக்திகளுக்கும் இடையில் போட்டியாக இத்தேர்தல் நடக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இத்தீவில் சமாதானம் நிலவ வேண்டுமா... போர் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு பொதுமக்களிடம் விடப்பட்டிருக்கிறது!' என்று கூறிய பிரபாகரன், சந்திரிகாவின் சுதந்திரா கட்சிக்கு எதிராக ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

'ரணிலின் கட்சி விடுதலைப் புலிகளுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டது' என்று சந்திரிகா குற்றம் சாட்டினார். தமிழர் ஆதரவுடன் தேர்தலில் ரணில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த ரணிலிடமும் தமிழர் நம்பிக்கை துரோகத்தையே சந்தித்தனர்.

நார்வே நட்டின் முயற்சியால் இலங்கையில் போர் நிறுத்தம் வந்தது. பிப்ரவரி 22, 2002 அன்று வன்னியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிரபாகரன் முதலில் கையப்பமிட்டார். பிரதமர் ரணில் கையப்பம் இட்ட பின்பு யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோவிலுக்கும் சாவகச்சேரிக்கும் சென்றார். வீதியெங்கும் தமிழர் கூடிப் புதிய நம்பிக்கையுடன் ரணிலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கினர்.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் முதல் பேச்சு வார்த்தை தாய்லாந்தில் 2002 செப்டம்பரில் நடந்தது. அங்கேயே அக்டோபர் - நவம்பரில் இரண்டாவது பேச்சு வார்த்தையும் தொடர்ந்தது. சமாதானம் நாடிய பிரபாகரன், தனித் தமிழீழம் என்ற கோரிக்கையிலிருந்து கூட்டாட்சி முறைக்கு இறங்கி வந்தார்.

'உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்துக்கு இசைவாக நாமும் எமது போராட்ட வரலாற்றை முன் நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே. சமாதானத்தில் எமக்கு உண்மையான பற்றுண்டு என்பதை உலகுக்கு உணர்த்தவே, நாம் ராணுவ மேலாதிக்க நிலையில் நின்றுகொண்டு அமைதி வழியைத் தழுவினோம்.

எமது மக்களின் தேசிய இனப் பிரச்னைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின், அதனை முயன்று பார்ப்பதில் முழு மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம்' என்றார் பிரபாகரன். ஆனால், ரணில் தமிழினத்தைத் திட்டமிட்டு வஞ்சகமாக ஏமாற்றினார்.

தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி, ஜப்பான் என்று ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த நிலையிலும் தமிழினம் எந்த உரிமையையும் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டது.

கலைஞர் இன்று கொண்டாடும் இந்த ரணில் விக்கிரமசிங்கே, பேச்சுவார்த்தை நடக்கும்போதே கருணாவை, பிரபாகரனிடமிருந்து பிரித்து 2004-ல் விடுதலைப் புலிகளிடையே பிளவை உண்டாக்கியவர். கிழக்கு மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் வலிமையைப் பலவீனப்படுத்த கருணாவை ரணில் அரசுபயன் படுத்திக் கொண்டது

ஒருமலினமான வஞ்சகப் படலம்.இலங்கை அதிபராக இருந்த சந்திரிகாவின் அரசியல் சூழ்ச்சியை எதிர்க்க, விடுதலைப்புலிகளைத் தன் அரசியல் சதுரங்கத்தில் வெட்டுக் கொடுத்தவர் ரணில். போர் நிறுத்த ஒப்பந்தப்படி யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்றாமல் அதைத் திறந்த வெளிச் சிறைச்சாலையாக வைத்திருந்ததன் விளைவாகவே பிரபாகரன் ரணிலிடம் நம்பிக்கைஇழந்தார்; பேச்சு வார்த்தை முறிந்தது.

சிங்களத் தலைவர்கள் அனைவரும் நிரந்தர அமைதி யையும், அரசியல் தீர்வையும் உருவாக்குவதற்கான நேர் மையும், உண்மையான அர்ப் பணிப்பும் உள்ளவர்கள் இல்லை என்பதையும்தங்கள் பதவியைத்தக்க வைத்துக் கொள்ள தமிழினத்துக்கு எதிராக சிங்களப் பேரின வாதத்தை வளர்க்கவும், பௌத்த பிக்குகளின் ஏவல் கூவல்களாகச் செயற்படவும் சித்தமாக உள்ளவர்கள் என்பதையும் கலைஞர் அறியாதவரா? எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ஆய்வு இன்று அவசியந்தானா? இந்திய அரசுதான் ஈழத்தமிழரை அழிப்பதில் ராஜபக்ஷே அரசுக்கு முழுமையாக உதவியது

என்பதை சரத் ஃபொன்சேகா போட்டுடைத்த பின்பும், மத்திய அரசின் அத்துமீறிய தமிழின அழிப்பு ஆதரவு நடவடிக்கைகள் குறித்து வாய் திறக்க முடியாத நம் முதல்வர், இன்னும் எத்தனை காலம் 'சகோதர யுத்தம்' குறித்து விதம் விதமாக வியாசம் எழுதி பிரச்னையை திசை திருப்பப் போகிறார்?

போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், நிலங்களை விட்டு ரணில் ஆட்சியில் ராணுவம் வெளியேறவில்லை. மக்கள் வாழிடங்கள் ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்ததால் மீள்குடியேற்றம் நிகழவில்லை.

800 ச.கி.மீட்டர் பரப்புள்ள யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் சிங்களப் படையை நிரந்தரமாகக் குவித்து வைத்திருந்த ரணிலுக்கு, பிரபாகரன் மீண்டும் தேர்தலில் ஆதரவு தர மறுத்ததைக் கலைஞர் அரசியல் பிழை என்கிறாரா? 'அந்த அரசியல் பிழையினால்தான் ராஜபக்ஷே ஆட்சி மகுடம் தாங்கினார்;

தமிழினத்தைக் கொடூரமாக அழித்தார்' என்று கலைஞர் கருதினால், ராஜபக்ஷேவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய அரசை இவர் ஏன் எதிர்த்து எழவில்லை? இந்திய அரசுக்கு அன்றும் இன்றும் தலைமை தாங்கும் காங்கிரஸை ஏன் எதிர்த்துப் போர் முழக்கம் செய்யவில்லை? பதவி நாற்காலி பறிபோய்விடுமே என்ற அச்சம் காரணமாகவே புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்துவிட்டதா?

வன்னி மக்கள் வாழ் நிலத்தில் பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகள், எரிகுண்டுகள், வான்வெளித் தாக்குதல்கள் என்று சர்வதேசப் போர்விதிகளுக்கு மாறாக இரக்கமிலா ஓர் அரக்க ஆட்சி பல்லாயிரம் தமிழரைக் கொன்று குவித்ததை எதிர்த்து ஐ.நா. மனித உரிமை அமைப்பில் விவாதிக்க ஜெனிவாவில் மே 25, 2009 அன்று சிறப்புக் கூட்டம் நடந்தபோது இந்தியா வெளிநடப்பு செய்தபோதும், இலங்கை அரசுக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகளிடம் ஆதரவு

திரட்டியபோதும் இனவுணர்வுடன் அவற்றை எதிர்த்து எழுத ஏன் கலைஞர் பேனாவைக் கையில் எடுக்கவில்லை? அசோக சக்கரத்தைத் தேசியக் கொடியில் வைத்திருக்கும் காந்தி தேசத்தை ஆளும் அரசு, தமிழினத்துக்கு எதிராக ராஜபக்ஷே சகோதரர்கள் நடத்திய ரத்தக் குளியலுக்கு ரகசிய ஆதரவு வழங்கியதோடு, அழித்தவன் கைகளிலேயே புனர்வாழ்வு தர ஆயிரம் கோடியை அள்ளிக் கொடுத்த கொடுமைக்கு உடந்தையாக நின்ற கலைஞரை வரலாறு எப்படி வாழ்த்தும்?

சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா? பெரியாரின் பொருந்தாத திருமணத்தை அரசியலாக்கி, அவரிடமிருந்து விலகி தனிக் கழகம் உருவாக்க அண்ணாவுடன் புறப்பட்ட சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஒவ்வொருவரோடும் சகோதர யுத்தம் நடத்தியது யார்? எம்.ஜி.ஆரோடும், வைகோவுடனும் சகோதரயுத்தம் நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியது யார்? வேலூர் செயற்குழுவில் சம்பத் தாக்கப்பட்டதும், திருச்சி பொதுக்கூட்டத்தில் கண்ணதாசன் மீது செருப்பு வீசப்பட்டதும் சகோதர யுத்தத்தின் சமிக்ஞைகளன்றி வேறென்ன?

'மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தினைத் திருடும் ஆணையோ, பெண்ணையோ சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளியை விட்டுவிடுகிறது' என்றார் ஹென்றி மெய்ன்.

விடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது.

இதுதானோ கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!

காட்டிக்கொடுத்த விபீஷணன் என்று கருணாநிதியை வரலாறு தூற்றும்!

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதை நினைத்து தாம் மௌனமாக அழுகிறார் என்ற சாரப்பட அறிக்கை ஒன்றை வெளி யிட்டிருந்தார் தமிழக முதல்வர் கருணாநிதி. அவரது அறிக்கையையும் அதற்கு நக்கீரன் என்பவர் எழுதிய பதிலையும் தமிழக நாளிதழ் ஒன்று வெளியிட்டி ருக்கிறது. அது இங்கு பிரசுரமாகின்றது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின என்பதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? என்று முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்த மௌனத்தின் வலிதான் யாருக்குத் தெரியப்போகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு:

"விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒரு சில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது. நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகிவிட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு, இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். அதை நாம் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தாலோ என்னவோ அலட்சியப்படுத்தி விட்டார்கள்.

"எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ?" என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றது. "இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். அமைதி முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார் அவர். தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென் பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். மேலும், 2005இல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்களை தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால், தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்" என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இலங்கை அதிபர் தேர்தலில் 1.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்ரமசிங்கே தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத் தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை. இதை எண்ணிப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப் பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின, எங்கே போய் முடிந்தன என்பதை நினைத்துப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது? நம்முடைய மௌனவலி யாருக்குத் தெரியப் போகிறது?'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் மேற்படி அறிக்கை தொடர்பாக "நக்கீரன்" வெளியிட்டுள்ள விளக்கம் கருணா நிதிக்கு அறளை பிறந்துவிட்டது என்பதற்கு அவரது இந்த அறிக்கை நல்ல சான்று. இல்லை பாசாங்கு செய்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை எப்போதோ விலக்கிக் கொண்டுவிட்டோம். விடுதலைப்புலிகளுடனான அணுகுமுறையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அணுகுமுறைதான் எங்களது அணுகுமுறை என்று நாக்கூசாமல் வெட்கமோ துக்கமோ சிறி தளவுமின்றி தமிழக சட்டசபையில் பேசிய கருணாநிதி இப்போது "விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது" எனப் புதுக்கதை பேசுகிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு கட்டளை போட்டு காவல்துறை கைது செய்த நூற்றுக் கணக்கான விடுதலைப் புலிகள் என சந்தேகப்பட்ட வர்களை இன்றும் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து அழகு பார்க்கும் கருணாநிதி "ஆதரவு வழங்கினோம்" என அப்பட்டமான பொய் சொல்கிறார். இப்போது கருணாநிதிக்கு ரணில் விக்கிரம சிங்க மீது அளவுகடந்த பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அவரைப் புலிகள் தோற்கடித்து விட்டார்கள் என்று கருணாநிதி ஒப்பாரி வைக்கிறார். இந்த ரணில் விக்கிரமசிங்கதான் . தீர்வு எதனையும் முன்வைக்காமல் பேச்சுவார்த்தையை இழுத்தடித்தவர். 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் 05 ஆம் நாள் ஒஸ்லோவில் நடந்த மாநாட்டில் விடுதலைப்புலிகள் உள்ளக தன்னாட்சி யோசனையை முன்வைத்தார்கள். அதனை அவரது பதவி காலத்தில் நடைமுறைப்படுத்த ஒரு சின்ன அசைவைக்கூடச் செய்யாதவர்.

விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்தியாவின் துணையோடு மூழ்கடித்தவர். அந்தச் சாதனையை நாடாளுமன்றத்தில் பெருமையாகப் பேசியவர்.
மேற்குநாடுகளின் செல்லப்பிள்ளையாக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க மேற்குநாடுகளின் துணையோடு விடுதலைப்புலிகளை வீழ்த்த சதிசெய்தார். விடுதலைப் புலிகளை சிக்க வைக்க வலை பின்னினார். இதுபோன்ற காரணங்களின் அடிப்படையில் தான் தேர்தலை விடுதலைப்புலிகள் புறக்கணித்தார்கள். இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசும் வேண்டாம் என்பதே அவர்களது கணிப்பாக இருந்தது. ஏனென்றால் ரணில் விக்கிரமசிங்கவும் ராஜபக்ஷவும் அடிப்படையில் சிங்கள பௌத்த இனவாதிகள்.

விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்திய அரசு செய்த சதிதான் காரணம். அதில் பங்காளியாக இருந்த தி.மு.க.கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தான் காரணம். இந்தியா மட்டும் ஒதுங்கி இருந்திருந்தால் விடுதலைப்புலிகளை போர்க்களத்தில் வீழ்த்தியிருக்க முடியாது. இதனை நேற்றுக் கூட இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். இலங்கையை காப்பாற்றியது இந்தியாதான் என மீண்டும் சத்தியம் செய்திருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்ட போரின்போது இந்தியா அளித்த ஆதரவு காரணமாகவே இலங்கை மீதான உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்தது என அந்நாட்டின் பாதுகாப்புத்துறைச் செயலரும், அதிபர் ராஜபக் ஷவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இந்தியா அளித்த ஆதரவினால் தான் போரை நிறுத்தக் கோரும் உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்து, தொடர்ந்து தாக்குதலை நடத்த முடிந்ததாகவும் கூறினார். இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என்று கூறிய கோத்தபாய, கடந்த நான்காண்டுகளில் இந்த நட்பு மேலும் நெருக்கமானதாகவும், புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா பல வகைகளில் உதவிபுரிந்ததாகவும் தெரிவித்தார்.

எனவேதான் கருணாநிதியின் கைகளில் தமிழீழ மக்களது குருதி தோய்ந்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். வரலாறு தலைவர் பிரபாகரனை தமிழன் மானம் காத்த சுத்த வீரன் என்று போற்றும். கருணாநிதியை தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீஷணன் என்று தூற்றும். வரலாற்றின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும். *
நன்றி - உதயன்

சிறுபான்மை மக்களின் எதிர்காலமாம்!!! சுவிசில் ஒட்டுக்குழுக்கள் மற்றும் தமிழ்க் கட்சிகளும் சந்திப்பு!!!

tamil leaders and traitorsஇலங்கையில் சிறுபான்மை மக்களின் எதிர்காலம் குறித்த விடயங்களை ஆராயும் முகமாக இங்கிலாந்தை தளமாக கொண்டுள்ள தமிழர் தகவல் மையம் என்ற அமைப்பு கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று சுவிட்சலந்தின் சூரிச் நகரில் ஆரம்பமாகும் இந்த கருத்தரங்கு மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தன்,மாவை சேனாதிராஜா,சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தமிழர் விடுத்லைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி,ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்தன், ஈ.பி.ஆர்.எல.எப்பின் (பத்மநாபா அணி ) தலைவர் சிறீதரன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் கட்சிகள் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,செயலாளர் ஹசன் அலி ஆகியோரும் மீள் குடியேற்ற துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் போன்றவர்களும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சுவிஸ் சென்றுள்ளனர்.

வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானும் இதில் பங்கேற்பார் என்று தெரியவந்துள்ளது.

இந்த கருத்தரங்கில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் கல்வி மான்களும் பங்கேற்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொள்வதற்கும் செய்தி வெளியிடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கின் முடிவில் அனைத்து சிறுபர்னமை மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமான தீர்வு யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளதாகவும் அதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பினை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் அனைத்து சிறுபான்மை இன அரசியல் கட்சிகளும் ஒன்றாக சந்திப்பது வரலாற்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படுகின்ற போதிலும் இவற்றினால் பொது இணக்கப்பாட்டிற்கு வர முடியுமா என்பது தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

றோ மற்றும் கோத்தபாயவின் ஏற்பாட்டில் சுவிசில் துரோகிகளின் மகாநாடு”
எதிர்வரும் வார இறுதி நாட்களில் துரோகிகளின் ஒன்றுகூடல் சுவிசில் நடைபெறவிருக்கின்றது. கருணா, சுவிசில் . தயாமோகன், குலம் மற்றும் தோழர் அம்பலவாணர் ஆகியோர் தற்போது டக்ளஸ்,பிள்ளையான், துரோகிகளைக்கொண்டு சுவிசுக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மஹிந்தவும் 3 சகோதரர்களும்!

mahinda_kotaஇலங்கை அரசை இயக்கிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷ சகோதர நிறுவனத்தின் அரசியல் கட்டமைப்பின் கண்ணோட்டமாக அமைக்கிறது. இக்கட்டுரை “லக்ருவணி மெதகம” என் பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை கடந்த 8ஆம் திகதிய “இருதின” பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.அதன் தமிழ் வடிவமே இது.

இன்று, ‘மஹிந்த சகோதர’ நிறுவனத்தின் 363 பேர் பலதரப்பட்ட அரச பதவிகளை வகித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விதிமுறைக்கு அமைய இப்பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கவில்லை. இவர்களுக்கு இருக்கும் ஒரே தகுதி அவர்கள் “சகோதர நிறுவனத்தின்” உறுப்பினர்கள் என்பது மட்டுமேயாகும்.

அண்மையில், பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் வைத்து மேற்குறிப்பிட்டவாறு கருத்து வழங்கியவர் சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரான மங்கள சமரவீர. அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமைக்குக் காரணம் உள்ளது. இன்று அரசினுள் போன்றே அரசுக்கு வெளியிலும் சகோதர நிறுவனமானது எந்தளவு தூரத்துக்கு வலுவாகக் காலூன்றிக் கொண்டுள்ளது என்பதை நாட்டுக்குப் புலப்படுத்திவிடுவதே அவரது அக்கருத்து வெளிப்பாட்டுக்கான காரணமாகும்.

மங்கள சமரவீரவின் கூற்று முற்றிலும் உண்மையானதேயாகும். அதாவது அரசும், அரசோடு சம்பந்தப்பட்டுள்ள முன்னணி நிறுவனங்கள் என்ற அனைத்தையும் நிர்வகித்து வருவோர் “பரசூட்களின்” மூலம் உயர் பதவிக் கதிரைகளில் வந்தமர்ந்து கொண்டுள்ள சகோதர நிறுவனத்தின் உறுப்பினர்களேயாவர்.

ஜனாதிபதியின் செலவு

இந்த அரசைப் பொறுத்தவரையில் அதன் நான்கில் மூன்று பங்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழேயே கொண்டு செல்லப்படுகிறது. உதாரணமா எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்காத அரசு, தேர்தலை எதிர்கொள்ளும் வரையில் அரசை நடத்திச் செல்வதற்காக இடைக்கால உத்தேச கணக்கு அறிக்கையை முன்வைத்து அவசர அவசரமாக அதை நிறை வேற்றிக் கொண்டது. இவ் அறிக்கையின் மூலம் ஜனாதிபதி மஹிந்தரின் நான்குமாத காலத்துக்கான செலவினங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த தொகை 280 கோடி ரூபாவாக காட்டப்பட்டிருந்தது. வேறு விதத்தில் கூறுவதானால் மஹிந்த ராஜபக்ஷவின் தினமொன்றுக் கான செலவினம் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாவாகும்.

இலங்கையின் வரலாற்றில் ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்து கொண்ட எந்தவொரு ஜனாதிபதியும் இத்தகைய தொரு பெரும் தொகையை தமது ஒரு நாளைய செலவீனமாகச் செலவழித்ததில்லை. முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவோ, ஆர்.பிரேமதாஸாவோ, டீ.பி.விஜேதுங்கவோ இத்தகையதொரு பெரிய நிதித்தொகையைத் தமக்காக ஒதுக்கிக்கொண்டதில்லை. குறைந்தபட்சம் செலவினம் மிக அதிகமானது என எதிர்க்கட்சியின் கடுந்தொனி விமர்சனத்துக்கு உள்ளான ஜனாதிபதி சந்திரிகா கூட இத்தகைய மிகப் பாரியதொரு தொகையைத் தமது செலவினமாகப் பயன்படுத்திக் கொண்டதில்லை.

அண்ணன், தம்பிக்களின் அதிகார “ஆதிக்கம்”

அது இவ்வாறிருக்க, மஹிந்த ராஜபக்ஷ இவ்விதமான அரசின் நான்கில் மூன்று மடங்கு நிர்வாகத்தைத் தாமே நிர்வகித்து வருகிறாரெனில் எஞ்சியுள்ள நான்கில் ஒரு பங்கை நிர்வகித்து வரு வோர் எவர்? என்ற வினா இங்கு தொக்கி நிற்கிறது.
அதற்குப் பதிலாக அமைவது, அவர்கள் வேறு எவருமல்லர், மஹிந்தவைத் தவிர எஞ்சியிருக்கும் அவரது மூத்த சகோதரர்களும் இளைய சகோதரர்களுமான மூவரே என்பதாகும். அதற்கமைய, இன்று அரசின் முதல்வரிசை நிறுவனங்கள் அனைத்தும் நிர்வகிக்கப்படுவது இந்த அண்ணன் தம்பிமார்களினாலேயே ஆகும். அந்த வகையில், மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ஷவின் கரத்துக்குள் இந்நாட்டுப் பொருளாதாரத்தின் கேந்திர மையங்களான விமானசேவை மற்றும் துறைமுகங்கள் அடங்கியுள்ளன. நாட்டின் வருவாயின் அதிகரித்த அளவுப் பிரமாணம் இந்த இரு துறைகளிலிருந்தே கிட்டுகிறது. அவற்றைவிட நீர்ப்பாசனம் போன்ற துறைகளும் சமல் ராஜபக்ஷவின் கரங்களுக்குள்ளேயே உள்ளன.

இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு உதவிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஏனைய அனைத்து அபிவிருத்தித் திட்டங்கள் முழுமையாகவே சார்ந்திருப்பது சகோதர நிறுவனத்தின் அடுத்த முக்கியஸ்தரான பஸில் ராஜபக்ஷவின் கீழேயேயாகும். “கிழக்கின் உதயம்” அபிவிருத்தியைப் பொறுத்தவரையில் அதன் அனைத்துச் செயற்பாடுகளும் பஸில் ராஜபக்ஷவின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே நிகழ்கின்றன. அது போதாதென்று “வடக்கின் வசந்தம்” திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்துச் செயற்பாடுகளுக்குமான கட்டளைகளைப் பிறப்பிப்பவரும் பஸில் ராஜபக்ஷவேயாவார். வீதி அபிவிருத்தியின் அனைத்துச் செயற்படுகளையும் மேற்கொள்பவரும் பஸில் ராஜபக்ஷவே. இவ் வாய்ப்புக்கள் அனைத்துமே தினமும் கோடிக் கணக்கில் பணம் அங்குமிங்குமாக புரளும் சாதகங்களைக் கொண்டனவாகும். ஆனால், இங்கு புதுமைக்குரியது யாதெனில், இப்பணத் தொகைகள் என்னவாகின்றன என்பதற்கான சுவடுகள் எங்கு தானும் பதியப்படாததேயாகும்.

இதற்கு நல்லதொரு உதாரணத்தை முன்வைக்க முடியும். அதாவது, தெனியாயவில் நிறுவப்பட்டுவரும் அரச மாளிகைக்குச் செல்லும் பாதை “மகநெகும”வின் மூலம் “கொங்கிறீற்” கலவையிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த வினாவுக்கு அரச தரப்பினரால் பதில் வழங்கப்பட்டபோது “மகநெகும” திட்டம் (பாதை மேம் படுத்தல் திட்டம்) என்பது அரசின் நிறவனமொன்றல்ல என்றே மழுப் பலாகப் பதலளிக்கப்பட்டது. ஆனால், “மகநெகும” பஸில் ராஜபக்ஷவின் நேரடி நிர்வாகத்தின் கீழேயே செயற்படுகிறது.

“பொம்மை” அமைச்சர்கள்!

இது, சகோதர நிறுவனத்தின் செயற்பாடுகளின் ஒரு பக்கம் மட்டுமேயாகும். மறுபக்கத்தை நோக்குவோமானால், அரசின் இன்றைய அமைச்சர்கள் அனைவரும் பெயரளவில் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர். அதாவது அவர்கள் தமது அமைச்சின் துறைகளிலுள்ள அவர்களது பதவிக் கதிரைகளுக்கு மட்டுமாக வரையறுக்கப்பட்டுள்ள பொம்மைகளாக அமர்ந்துள்ளனர். அவர்களுக்குரிய வேலைத் திட்டங்களின் அனைத்துச் செயற்பாடுகளும் சகோதர நிறுவனத்தின் பணிப்புரைகளின் மீதே முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களின் உத்தரவுகளே அங்கு நிறைவேறுகின்றன. அமைச்சர்களின் உத்தரவுகளைவிட அமைச்சுக்களுக்கு அப்பாலிருந்து வரும் இந்த சகோதர நிறுவனத்தின் “பரசூட்” உத்தரவுகளுக்கே அங்கு பெறுமதிகிட்டுகிறது.

அமைச்சு ஒன்றின் மூலமாக கேள்வி கோர லொன்று (டென்டர்) கோரப்படுமானால், அக் கேள்விக் கோரல் சகோதர நிறுவனத்தால் பரிந்துரை செய்யப்படும் நபருக்கே கிட்டுகிறது. அதற்கான தரகுப்பணம் சகோதர நிறுவனத்தைச் சென்றடைகிறது. இங்கு அரசின் அமைச்சர்களுக் கென்ற எந்தவொரு அதிகாரமும் இல்லை. இதன் காரணமாக, இன்றைய அளவில் சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்களும் கூட, சகோதர நிறுவனம் தொடர்பாக கடும் விரக்தி நிலைக்கே உள்ளாகியுள்ளனர்.

அண்மையில், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப் பட்ட சட்டப்படி வேலை யென்ற தொழிற்சங்க நடவடிக்கையின்போது, சகோதர நிறுவனத்தின் மகிமைகளை நாட்டு மக்களால் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிந் தது. இத் தொழிற்சங்கச் செயற்பாடுகளின் இடை நடுவில், ஜனாதிபதி நேபாளத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். மேற்படி தொழிற்சங்கங்கள், கனியவள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸியுடன் பேச்சுகளை மேற் கொண்ட போதிலும், அமைச்சர் பௌஸியால் அவர்களது விவகாரம் சம்பந்தமாக எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் எடுக்க இயலாது போனது. அதாவது, ஜனாதிபதி நாடு திரும்பும் வரையில் தம்மால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க இயலா தெனத் தொழிற்சங்கங்களுக்கு அவர் தெரிவித்திருந்தார்.

பஸிலிடம் கேளுங்கள்!

சகோதர நிறுவனத்தின் மகிமைகளை உணரத்தக்க மேலு மொரு சம்பவம் கடந்த வாரத்தில் இடம்பெற்றது. அதாவது, இலங்கையில் வெளிவரும் பத்திரிகை யொன்று, மீள் குடியேற்றங்கள் தொடர்பான அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் வினாவொன்றை எழுப்பியிருந்தது. அது, இன்றைய அளவில் இடம்யெர்ந்துள்ள மக்களுள் எவ்வளவு தொகையினர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற வினாவேயாகும். அவ்வினாவுக்கு அபூர்வமானதொரு பதிலை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வழங்கியிருந்தார். அது குறித்துத் தமக்கு எதுவும் தெரியாதெனவும், மீளக்குடிய மர்ந்துள்ள மக்கள் உள்ளடங்கும் வடபுலத்தின் அனைத்துவிதச் செயற்பாடுகளுடன் சம்பந்தமான தகவல்களைத் தெரிந்து கொள்வதற்குப் பிரமுகர் பஸில் ராஜபக்ஷவையே அணுகுமாறும் அவர் பதில் வழங்கியிருந்தார். இவற்றிலிருந்து இந்த சகோதர நிறுவனமானது அரசையும், அரசின் கேந்திர மையங்களையும் சிலந்தியைப் போன்று கௌவிப்பிடித்து ஆக்கிரமித்துக் கொண்டுள்ள விதம் தெளிவாகப் புலப்படுகிறது.

மன்னராட்சிக்கு செல்கிறோமா?

இவை மட்டுமல்ல, எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில், இச் சகோதர நிறுவனமானது நாடளாவிய ரீதியில் போட்டியிடத் தயார் நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கும் செய்திகள் பல்வேறு தினத்தாள்களிலும், இணையத்தளங்களிலும் காணமுடியும். அப்பத்திரிகைகள் வழங்கும் தகவல்களுக்கு அமைய, மேல்மாகாணத்துக்கு பஸில் ராஜபக்ஷ, வடமேல் மாகாணத்துக்குப் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ, சப்ரகமுவ மாகாணத்துக்கு சமல் ராஜபக்ஷ, தென் மாகாணத்துக்கு நாமல் ராஜபக்ஷ, ஊவா மாகாணத் துக்கு சசீந்திர ராஜபக்ஷ என்ற விதமாக வரவிருக்கும் தேர்தலில் நாட்டின் அதிகாரத்தைப் போன்றே மாகாணங்களின் அதிகாரத்தையும் கூடத் தமதாக்கிக் கொள்வதே சகோதர நிறுவனத்தின் குறிக்கோளாகும். இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, இவர்கள் பயணித்துச் செல்வது வேறு எங்கும் அல்ல. எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தி நிற்பது போன்றே மன்னராட்சி அரசொன்றுக்கே யாகும் முடியாட்சிக்கேயாகும். பண்டைய முடியாட்சி அரசுகளிலும் கூட மன்னரென்பவர் ஒட்டுமொத்த தேசத்தையும் நிர்வகித்தார். நாட்டின் பட்டி தொட்டிகள் ஈறாக அரசின் கட்டளைகளே நடைமுறைப்படுத்தப்பட்டன.

அமைச்சர்களும், பிரதானிகளும் மன்னரின் காலடியில் சூழ்ந்திருந்தனர். மன்னர் நாட்டை நிர்வகிக்கையில் மன்னரின் சகோதரர்கள் இளவரசர்களாகப் பட்டம் சூட்டப் பெற்று நாட்டின் பிரதேசங்களை நிர்வகிக்க அமர்த்தப்பட்டனர். இன்று விரிவடைந்து வருவதும் கூட, அப்பண்டைய முடியாட்சியையே யொத்த நிர்வாகக் கட்டமைப்பேயாகும். சற்று வித்தியாசமானதாக அமைவது, இன்று அந்த அரசானது கூட்டாட்சியென்ற அம்சங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதேயாகும்.

என்றாலும் கூட, இதற்கு முன்னரும் இந்நாட்டில் இதுபோன்ற குடும்ப நிர்வாகம் நிலவியுள்ளதல்லவா? அவ்வாறிருக்கையில் இப்போது மட்டும் எதிர்க்கட்சிக்கு ஏன் இந்த விமர்சன நோய் ஏற்பட்டுள்ளது?

பண்டா குடும்பம் பரவாயில்லை!

ஏதோ ஒரு தரப்பினர் இவ்வாறு வினாவெழுப்பி நிற்கக்கூடும். அந்த வாதத்தில் உண்மையில்லை யெனக் கூறிவிடவும் இயலாது. அதாவது, பண்டாரநாயக்கா குடும்பம் 1956 ஆம் ஆண்டிலிருந்து இடையிடையே இந்தநாட்டை ஆண்டு வந்துள்ளது. அந்த வகையில் 1956 இல் எஸ். டயிள்யூ.ஆர்.டீ. பண்டார நாயக்கவும் அதன் பின்னர் திருமதி ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவும் பின்னர் சந்திரிகாவும் கூட இந்நாட்டில் பிரதமர்களாகவும் ஜனாதிபதிகளாகவும் ஆட்சி புரிந்துள்ளனர். ஆனால்,இவர்களிடம் தென்பட்ட வித்தியாசமென்பது நாட்டை நிர்வகிக்கையில் இவர்கள் தமது குடும்ப நிறுவனத்தை நாடளாவிய ரீதியில் கட்டமைத்து விட எத்தனிக்காமையேயாகும்.

குறைந்த பட்சமாக, பண்டார நாயக்கா நாட்டை நிர்வகித்துச் செல்கையில் தமது துணைவியை அதனுடன் இணைத்துக் கொண்டதில்லை. பின்னர் நிர்வாகத்துக்கு வந்த அவரது துணைவியாரான சிறிமாவோ பண்டார நாயக்காவும்கூட, அது போன்றே ஒழுகினார். சந்திரிகாவும் கூட இரு தடவைகள் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி யிலிருந்தாலும்,தனது சகோதரரான அனுராபண்டார நாயக்காவைப் பிரதமராக்கிவிடவோ அல்லது அனுரவுக்கு அமைச்சுக்களின் நான்கில் மூன்று பங்கு அதிகாரத்தை கையளிக்கவோ எத்தனித்த தில்லை. அதேபோன்று, பண்டர நாயக்க சந்ததியினரைத் தேடிக் கண்டறிந்து அரசின் உயர் பதவிகளில் அமர்த்திவிட எத்தனித்ததுமில்லை. வெளியுறவுத்துறை சேவைகளுக்கு “பரசூட்” களின் மூலம் இறக்கிவிட்ட நபர்களைப் பதவிகளில் அமர்த்தியதும் இல்லை.

ஆனால், இன்றோ, அதற்கு நேர்மாறான விதத்திலான செயற்பாடுகளே இங்கு நடந்தேறி வருகின்றன.
இது போன்று,சகோதர நிறுவனங்களை நாட்டில் கட்டமைத்து அரசைத் தமக்குரிய சொத்தாக உரிமைப் பத்திரம் எழுதிக்கொண்ட அரச நிர்வாகிகளோ உலகில் தாராளமாகவே காணப்பட்டுள்ளனர். அந்தவகையில் ரஷ்யாவின் சார் மன்னர் குடும்பமும், பிலிப்பைன்ஸ் மார்க்கோஸ் குடும்பமும் அவ்விதமாக சகோதர நிறுவனங்களை நாடளாவிய ரீதியில் கட்டமைத்து நிர்வாகத்தைக் கொண்டு செல்லும் விதத்தில் செயற்பட்டுள்ளன. ஆனாலும் இறுதிக்கட்டத்தில் அவர்களும்கூட நாட்டு மக்களின் தீர்ப்புக்குத் தலைவணங்க வேண்டிய நிலையே ஏற்பட்டது. அவர்களது இறுதி முடிவாக நாட்டு மக்களாலேயே அவர்கள் நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டனர். அவைபோன்ற நிகழ்வுகள் எமது நாட்டில் முன்னொருபோதும் இடம்பெற்றதில்லை யென்றாலும்கூட, இந்த வரலாற்றுப் பாடங்கள் எமது நிர்வாகிகளுக்கும் கூட பெறுமதிமிக்க பாடங்களாகும்.

நன்றி - உதயன்

கனடாவில் உயர்தரப் பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் மாவீரர் தின நிகழ்வு

கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் உள்ள நோர்த் அல்பியன், ஜெப்றி, வெஸ்ட்வியூ உயர்தரப் பாடசாலை மாணவர்கள் மற்றும் தமிழ் வகுப்பு மாணர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நிகழ்வு 20 ம் திகதி வெள்ளிக்கிழமை ஜேன்-பிஞ் சந்திப்பில் உள்ள விமிக்கா மண்டபத்தில் நடைபெற்றது.


மாலை ஆறு மணிக்கு கனேடிய தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழீழக் கொடிக்கீதம் ஒலிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து எமது தாயக விடுதலைக்காக தம்முயிரை வித்தாக்கிய மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியின் முன்னின்று அகவணக்கமும் பின்னர் மலர்வணக்கமும் இடம்பெற்றது. இதன்பின்னர் மாணவர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட நடனங்கள், பேச்சுக்கள், எழுச்சி கானங்கள், கவிதைகள், மற்றும் நாடகங்கள் போன்றவை இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களின் உணர்வுகள் அவர்கள் தாயகவிடுதலையில் கொண்டுள்ள உறுதியைப் பறைசாற்றி நின்றன. இறுதியில் மாணவர்கள் எல்லோரும் மேடையில்கூடி தேசியக்கொடியை தாங்கிய வண்ணம் இந்தப் தமிழீழத்திற்கான போராட்டதை தாம் முன்னெடுத்துச்செல்வோம் என்ற உறுதிமொழியுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

தேர்தல் அறிவிப்பினை ஒத்தி வைத்தமைக்கு விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமே காரணம்

ஸ்ரீலங்கா அரசாங்கம் தேர்தல் அறிவிப்பினை ஒத்தி வைத்தமைக்கு விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழீழ விடுதலைப் லிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் வழமை போலவே கொள்கை விளக்க உரை எதிர் வரும் 27ம் திகதி இடம்பெறும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் விடுதலைப் புலிகளின் கொள்கை பிரகடனம் எவ்வாறு வெளியிடப்படவுள்ளது என்பதை சர்வதேச சமூகமே ஆர்வத்துடன் எதிர்hபாhத்திருக்கின்றது.

இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பினை மகிந்த ராஜபக்ச வெளியிட்டால் கொள்கை விளக்க உரையில் தேர்தல் முடிவுகளை மாற்றும் விதமான சில முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என்று ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பு அச்சமடைந்துள்ளது.

எனவே மாவீரர் தின உரை நிறைவடையும் வரை தேர்தல் அறிவிப்பினை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்கம் மாவீரர் தின உரைக்கு முன்பாக தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டும் பட்சத்தில் அதற்கு ஏற்ற வகையில் கொள்கை விளக்க உரையில் மாற்றங்ளை ஏற்படுத்தவும் விடுதலைப் புலிகள் தரப்பு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இம்முறை வெளியிடப்படவுள்ள விடுதலைப்புலிகளின் கொள்கை விளக்க உரையானது ஸ்ரீலங்காவின் நடைபெறவுள்ள எந்த தேர்தல் முடிவினையும் தீர்மானிக்கும் சக்தி மிக்கதாகவே இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர் கால் தமிழ் மக்களின் தெரிவுகள் குறித்து தெளிவான முடிவுகளை விடுதலைப்புலிகளி; மாவீரர் தின உரை பிரதிபலிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பழியைத் துடைக்க பகீரதப் பிரயத்தனம் கலைஞரின் முயற்சி பலிக்க வாய்ப்பில்லை

ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழக முதல்வர் கலை ஞர் கருணாநிதியின் "அங்கிடுதத்தி"த் தனத்தால் அவ ருக்குத் தீராப்பழி ஏற்பட்டுவிட்டது. "உலகத் தமிழினத் தின் தலைவர்" என்று தன்னைத் தமிழினம் மதிக்கும் என்றுதான் இதுகாறும் கருதி வந்தார் கலைஞர் கருணா நிதி.

ஆனால் ஈழத் தமிழர்கள் வரலாற்றில் பேரவலத்தை மிக மோசமான போரியல் அழிவுகளை சந்தித்துக் கொண்டிருந்தபோது, தன்னுடையதும் தனது குடும்பத் தினதும் சுயநல அரசியலுக்காகத் தமிழர்களை நட்டாற்றில் விட்டு, பெரும் பழியைச் சுமந்து கொண்ட அவரை "தமிழினத்தின் தலைவிதி" என்று நொந்து சபிக்கும் நிலையிலேயே உலகத் தமிழர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசியல் அணிகள் தொடர்பான கணக்கு வழக்குகள், கூட்டல் கழித்தல்கள், இன்றைய நிலையில் கலைஞர் கருணாநிதியின் காட்டில் நல்ல மழை என்ற நிலைமையை ஏற்படுத்தினாலும்

ஈழத் தமிழர்களை அந்தரிக்க விட்டு அதற்காகத் தமது அரசியலில் "அந்தர் பல்டி" அடித்த கலைஞரை உலகத் தமிழினம் எந்தக் கட்டத்திலும் மன்னிக்காது என்பது அவருக்கு நன்கு தெரியும் புரியும்.

எப்படியும் தமது இறுதிக் காலத்துக்கு முன்னர் அந்தப் பழியைத் துடைத்து அழித்துவிடலாம் என்ற நப்பாசை யில் அவ்வப்போது சில ஆரவாரங்களைப் பண்ணுவது இவரது அரசியல் தகிடுதத்தமாக இருந்து வருகிறது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சர்வதேச செந்தமிழ் மாநாடு என்றெல்லாம் "கப்ஸா"பண்ணிப் பார்த்தார். ஈழத் தமிழர் விடயத்தில் தம்மீது விழுந்துள்ள பழியைத் துடைப்பதற்கு அவர் நடத்தும் கபட நாடகமே இந்த மாநாடு என்பது பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டமையை அடுத்து சற்று அடங்கிப்போனார்.

இப்போது "நம் மௌன வலி யாருக்குத் தெரியப் போகின்றது?" என்ற தலைப்பில் ஈழத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்து ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரவலத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவரையும் குற்றம் சுமத்தி அவர் வெளியிட்ட அறிக்கையும் இதேமாதிரியில்
விவகாரத்தைத் திசை திருப்பும் எத்தனமின்றி வேறில்லை.

இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்து கொண்டிருந்தபோது கொன்றொழிக்கப் பட்டுக் கொண்டிருந்தபோது அத்தகைய கொழும்பு அரசின் அத்துமீறிய போக்கை ஆதரித்து, அங்கீகரித்து, அதற்கு உதவி, ஒத்தாசை வழங்கி, உறுதுணையாகச் செயற்பட்டது இந்திய மத்திய அரசு புதுடில்லி நிர்வாகம்.

இலங்கை விவகாரத்தில், அப்படி இந்திய மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளே தனது மாநில அரசின் முடிவும் கூட என்றும் பகிரங்கமாக அறிவித்ததன் மூலம், இலங்கையின் தமிழின அழிப்புக்குத் துணைபோன, இந்திய மத்திய அரசுக்கு முழு அளவில் முண்டு கொடுத்து, அந்த மத்திய அரசின் பழி பாவத்தில் தன்னையும், தனது இயக்கத்தையும், கட்சிக்காரர்களையும் பங்குதாரர் ஆக்கிக் கொண்டார் கலைஞர்.

இப்போது அதிலிருந்து வெளியே வர பழியைத் துடைக்க பகீரதப் பிரயத்தனம் பண்ணுகின்றார். ஆனால் அவை எல்லாம் எடுபடாமல், அவரின் கோமா ளித்தனங்களாக அர்த்தம் பண்ணப்படுகின்றமைதான் அவருக்கு இன்று நேர்ந்துள்ள அவலமாகும்.

இலங்கைத் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட போது, அதற்குத் துணைபோன புதுடில்லி ஆட்சிப் பீடத்துக்கு முண்டு கொடுத்து, தனது அரசியல் பிழைப்பை லாபகரமாக நடத்திய கலைஞர், அச்சமயம் மறுபக்கத்தில், மனித சங்கிலிப் போராட்டம், தமிழக எம்.பிக்கள் கூண்டோடு இராஜிநாமா என்ற கபட நாடகம், மூன்று மணி நேரம் நடத்திய சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்ட நடிப்பு, இலங்கையில் யுத்த நிறுத்தம் வந்துவிட்டது என்ற பித்தலாட்ட அறிவிப்பு, பல கட்சிப் பிரதிநிதிகளையும் புதுடில்லிக்குக் கூட்டிச் சென்று இந்திய மத்திய அரசை மிரட்டுவது என்ற கோணங்கித்தனம் என அவ்வப்போது அடித்த அரசியல் "பல்டி"கள் அல்லது,"ஸ்டண்ட்"கள் பலப்பல.

அவை எவையுமே அப்போதும் சரி, பின்னரும் சரி எடுபடவேயில்லை என்பதுதான் யதார்த்தம்.

இப்படித் தீராப்பழி தம்மீதும், தமது குடும்பம் மீதும் விழுந்திருப்பதால், அதையெண்ணி இப்போதாவது நொந்து அழுவதற்கான மனச்சாட்சியை அவருக்கு இறைவன் கொடுத்திருக்கின்றான் போலும். அதனால்தான், தமது பிந்திய இந்த அறிக்கைக்குள் வேறு ஏதோ உளறிக்கொட்டியிருந்தாலும் கூட, அதன் தலைப்பை "நம் மௌன வலி யாருக்குத் தெரியப் போகின்றது?" என்று வரைந்திருக்கின்றார் அவர்.

வன்னியிலே தமிழினம் கதறக் கதறக் கொன் றொழித்து அழிக்கப்பட்டபோது, அதன் கதறலை செவி மடுக்கத் தவறி அதன் அவலத்தை உணரத் தவறி சுயலாப அரசியல் நடத்திய இத்தகைய தலைவர்களுக்கு உண்மையில் மனச்சாட்சி இருந்து, அதில் ஏற்படக்கூடிய மௌனவலியை உணரும் பக்குவம் அவர்களின் பிரக்ஞைக்கு உண்டா என்பது சந்தேகமே. அப்படி அவர் களுக்கு மௌன வலி நேர்ந்தாலும் அதைத் தமிழினம் உணர்ந்து, புரிந்து கொள்வதற்கு அதில் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.

நன்றி - உதயன்

‘துரோகப் புலிகள்’ – அடையாளம் காட்டும் விடுதலைப் புலிகள்!

சிங்கள ராணுவத்துக்கு துணோபோகும் சில முன்னாள் தளபதிகள்! – LTTE எச்சரிக்கை

டந்த சில மாதங்களாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் காட்டிக் கொடுத்த முன்னாள் தளபதிகள் பற்றி செய்திகளை வெளியிட்டு வருகிறது ஆய்வு வலைதளம். ‘இன்னும் சில தினங்களில் இப்படியும் நடக்கக் கூடும்’ என அந்த வலைப்பூவில் தெரிவிக்கிற விஷயம் கிட்டத்தட்ட நடந்தே விடுகிறது.

கடந்த ஜூலை மாதத்திய பதிவொன்றில் இந்த தளத்தில் இப்படிக் குறிப்பிட்டுள்ளனர்:

“ஜெகத் கஸ்பர் அடிகள் தற்போதய தனது எழுத்துக்களால் மக்களின் மனங்களில் இடத்தைப் பிடித்து, பின்னாளில் பெரும் விஷக்கருத்தை விதைக்கப் போகின்றார். இது திட்டமிட்ட ஒரு செயல். இதற்கு பின்னணிகள் இருக்கின்றன. அதாவது சர்வதேசம் எங்கும் தமிழீழப் போராட்ட விழிப்புணர்வை மங்க வைக்கும் செயல்பாடாகவே அவை வெளிவரும். தமிழகத்தில், போராட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கும் பழ.நெடுமாறன், வை.கோ, சீமான், கொளத்தூர்மணி போன்றோரை அப்புறப்படுத்தும் அல்லது அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு இவர் வருவார்…”

கிட்டத்தட்ட இது நடந்தே விட்டது. மேலே குறிப்பிடப்பட்ட ஈழ ஆதரவாளர்களை மிகமிகக் கடுமையாக சாடி வரும் கஸ்பர், புலிகலையும் (சுய)விமர்சனம் செய்கிறார். மத்திய – மாநில அரசுகளை விமர்சிப்போரையும் கடுமையாக திட்டுகிறார்.

அடுத்து, புலிகளின் கிழக்கு மாவட்ட தளபதி ராம், தயா மோகன், நகுலன் எப்படி சிங்கள ராணுவத்துக்கு விலைபோனார்கள் என்று இந்த தளத்தில் முன்கூட்டியே குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக ராம் மற்றும் நகுலன் போன்றோர் இலங்கை ராணுவத்தின் பனகொட சிறப்பு முகாமில் ராஜ வசதிகளை அனுபவித்தபடி, புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பை, சர்வதேச நெட்வொர்க்கை உடைக்கும் முயற்சியில் ராணுவத்துக்கு பேருதவி செய்து வருகிறார்களாம். தொடர்ந்து இயக்கத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி, மக்களின் போராட்டத்தை இல்லாமல் செய்வதில் குறியாக உள்ளார்களாம்.

இந்த செய்திகளை உறுதிப் படுத்தியுள்ளது இப்போது புலிகள் இயக்கம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை.

‘இலங்கை இராணுவத்துடன் இயங்கும் முன்னாள் விடுதலைப் புலிகள் சிலர் இயக்கத்தின் பெயரில் குழப்பங்களை விளைவிப்பார்கள். எச்சரிக்கையாக இருக்கவும்ட என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அனைத்துப் பத்திரிகைகளுக்கும் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, புலிகளின் ஊடகப் பிரிவு மூலம்.

அந்த அறிக்கை:

“அன்புள்ள ஊடக ஆசிரியருக்கு

எமது இயக்கத்தின் அம்பாறை மாவட்டத் தளபதியாக திரு.ராம் அவர்கள் செயற்பட்டு வந்தாரென்பது நீங்கள் அறிந்ததே. அண்மைக் காலத்தில் அவரும் வேறு சில தளபதிகளும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் தற்போது இராணுவத்தின் பிடிக்குள் இருந்துகொண்டு இலங்கை அரசின் திட்டத்திற்கு அமைவாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுள் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முன்னாள் தளபதியும் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் துணைத் தளபதியாகவும் இருந்த நகுலன், திருகோணமலை மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான தவேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

இந்த நிலையில் ஊடகங்களை நிர்வகிக்கும் எமது அன்பானவர்களிடம் நாம் வேண்டுகோள் ஒன்றை விடுகின்றோம். எமது செயற்குழு சார்பில் வெளிவரும் அறிவித்தல்களையும், அறிக்கைகளையும் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வெளியீடுகளாகக் கருதிக்கொள்ள வேண்டும் எனவும், இது தவிர்ந்த வேறு வழிகளில் வரும் வெளியீடுகள் எமது வெளியீடுகளாகக் கருதி குழப்பமடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது அறிக்கைகள் வழமைபோல் தலைமைச் செயலகத்தின் ஊடகப் பிரிவினரிடம் இருந்து வெளிவரும் என்பதையும் அறியத்தருகின்றோம்,” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

media_release_tamil201109

-என்வழி-

இந்த அறிக்கையை சில ஊடகங்கள் வெளியிட்டு விட்டு இது நம்பகத்தன்மை அற்றதாக இருக்கின்றது , விரிவாக யார் எழுதியது என்று குறிப்பிடப்படவில்லை என்று தாம் பொறுப்பல்ல என்று ஏனோ தானோ என்று தம்மை நடுநிலையாளராக காட்ட முற்பட்டுள்ளன

இவ்வளவு காலமும் இவர்கள் என்ன உறுதி ப் படுத்தியா வெளியிட்டார்கள்

அப்படியானால் யாரிடம் ? எங்கே இருக்கின்றது புலிகளின் தலைமைச் செயலகம்

தொடர்ந்து கீழ் செல்லுங்கள் உங்களுக்கே விளங்கும் >>>>>>>>


“நகுலன் விலைபோய்விட்டாரா?”
எப்போது எந்தெந்த விடயங்களை சொல்லவேண்டும் என்பதில் தடம் புரள்வதால் அது எதிர்காலத்தில் பல ஆபத்துக்களையும் விளைவிக்கும் என்பதும் உண்மை.


“துரோகி ராமின் அடுத்த நடவடிக்கை என்ன?”
தற்போது எமக்கு கிடைத்த புலனாய்வு தகவல்களின்படி பனாகொட சிறீலங்கா இராணுவ முகாமில் சொகுசாக இருக்கும் ராம், தனது சர்வதேச கூலிகளுக்கு ஓர் கட்டளை அறிவித்திருப்பதாக அறியப்படுகின்றது
“புலிகளின் கிழக்கு தளபதி ராம் கைது” – நாடகம்
“கேணல் ராம்” – துரோகம்!


புலம்பெயர் மக்களே அவதானம்!
“நாம் இயக்கத்துக்கு இரகசியமாக முக்கிய வேலை செய்கின்றோம். கேணல் ராம் உத்தரவுப்படி இயங்குகின்றோம்.இயக்கத்துக்கு வேலை செய்பவர்கள் வேலை செய்ய வேண்டும் அல்லது விட்டுவிட்டு ஒதுங்க வேண்டும்”


“புல்மோட்டையில் ஒரு துரோகம்”
மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புல்மோட்டை முள்வேலி முகாமுக்குள்ளேயே “துரோகம்” இருப்பதுகவலைக்கிடம். அந்த துரோகத்தை “கபிலன்” என முன்னர் இயக்கத்தில் அழைத்தார்கள்.


“ஓடி வந்த” – தயாமோகன்
புலம்பெயர் தமிழர்களிடையே குழப்பத்தை விளைவித்த மகான் “தயாமோகன்”. முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தின் பின்னர் சிறீலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பணிபுரிய “தோழன்” கருணாவால் நியமிக்கப்பட்டவர்.


“றோ மற்றும் கோத்தபாயவின் ஏற்பாட்டில் சுவிசில் துரோகிகளின் மகாநாடு”
எதிர்வரும் வார இறுதி நாட்களில் துரோகிகளின் ஒன்றுகூடல் சுவிசில் நடைபெறவிருக்கின்றது. கருணா, சுவிசில் . தயாமோகன், குலம் மற்றும் தோழர் அம்பலவாணர் ஆகியோர் தற்போது டக்ளஸ்,பிள்ளையான், துரோகிகளைக்கொண்டு சுவிசுக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


“கருணா – தயாமோகன்” சுவிசில் சந்திப்பு
ஜேர்மனியில் இருந்து புறப்பட்டு கருணா சுவிசுக்கு சென்றதாகவும், அவரை கிருஸ்ணா அம்பலவாணரின் சார்பாக சிலர் சந்தித்துள்ளார்கள். மேலும், ஓடி வந்த தயாமோகனையும் நேரில் சந்தித்துப் பேசியதாக எமது புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன.


“தீர்க்கதரிசி” – சர்வே
1996 முதல் அப்பொறுப்பை வகித்த சர்வே 2002ம் ஆண்டு பேச்சுவார்த்தை காலகட்டத்தின் போது சர்வதேச சூழலுக்கமைவாக அனைத்துலகச்செயலகத்தின் பணிகள் நிறைவுபெற்று, அனைத்துலகத் தொடர்பகத்தின் கீழ் அனைத்துலக செயற்பாடுகளைக் கொண்டுவந்தார் தலைவர்.


“நான் அவன் இல்லை”
கேபியும் கிபியும்
KPயின் மறுபக்கம்: பகுதி 01அன்பார்ந்த மக்களே உங்களை ஏமாற்றவும், உங்கள் எதிர்காலத்தை விற்கவும் கே.பியின் திட்டங்கள் செயல்பட தொடங்கிவிட்டதை இவ்வார கே.பியின் பிரச்சாரப் பீரங்கியான ”பரபரப்பு” உறுதிப்படுத்தியுள்ளது. யாரிடமும் இல்லாத படம் அவர்களுக்கு மட்டும் எப்படிப் போனதோ..? கே.பி. அவசரப்பட்டு ‘நான் அவனில்லை’ என்று சொல்லாமல் விட்டால் சரி.

தமிழீழத்தின் பிள்ளைகள் தமிழீழத்தை அழித்தவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு

sivanathan_mahindaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பறிபோகும் தாய் நிலமும் "பதவிக்காய் அலையும் ஸ்ரீகாந்தாவும்"

ஐக்கிய இலங்கை என்ற கபடமான மகிந்த சிந்தனைக்குள் பலியாகும் ஸ்ரீகாந்தா பறிபோகும் தாய் நிலத்தை மறப்பதேன்?

மறக்க முடியுமா ? ஜெகத் கஸ்பாரின் மறு பக்கம்

தமிழீழப்போராட்ட விழிப்புணர்வை மங்க வைக்கும் செயல்பாடாகவே அவை வெளிவரும். தமிழகத்தில், போராட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கும் பழ.நெடுமாறன், வை.கோ, சீமான், குளத்தூர்மணி போன்றோரை அப்புறப்படுத்தும் அல்லது அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு இவர் வருவார்.

மேலும் >>>>>>>>>>>>>> இங்கே செல்லுங்கள்

சூரிச் கலந்துரையாடலின் பின்னணி என்ன?

uthayan_logoஇலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைத்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நேற்று முதல் மூன்று நாள்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படுவதாகத் தெரி விக்கும் செய்திகள் இப்போது வெளியாகியுள்ளன.

இதில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து தமிழ்த் தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் பெருங் கூட்டமாக சூரிச்சுக்குப் படை எடுத்திருக்கின்றார்கள்.

இந்தக் கூட்டம் அல்லது இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படும் விதமும், அது தொடர்பான ஏற்பாடுகளும் இலங்கையிலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் ஊடக வியலாளர்கள், ஆய்வாளர்கள், அவதானிகள் மட்டத்தில் பலத்த சலசலப்பையும், சந்தேகங்களையும் எழுப்பி நிற்பது உண்மை.

இத்துணை தரப்புகளை சத்தம் சந்தடியின்றி ஓரிடத்தில் கூடவைக்கும் ஏற்பாட்டாளர்கள், இதுபற்றி ஊடகங்களுக்கு மூச்சுக்கூட விடாமல், அமானுஷ்ய அதீத மௌனம் காப்பது ஏன் என்ற வினா இயல்பாகவே எழுகின்றது.

முரண்பட்ட திசைகளிலே முட்டுப்பட்டு, மோதிக் கிடக் கும் தமிழ், முஸ்லிம் தலைவர்களை, ஆரவாரமே காட்டாமல் ஒரு மூடிய அறைக்குள் கொண்டுவந்து சேர்க்கும் ஓர் அமைப்பின் முயற்சியும் அதில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய தரப்புகளின் பலமும் குறைத்து மதிப்பிடக்கூடியவையல்ல.

ஆனால் இந்தக் கலந்துரையாடல், அதற்கான ஏற்பாடு கள், முன்நடவடிக்கைகள் குறித்தெல்லாம் அளவுக்கு அதிகமான மௌனம் காக்கப்படுவது ஏன்? இப்படி தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அதுவும் இன்றைய மிக நெருக்கடி யான வேளையில் ஒன்றுகூடி, தமக்குள் கலந்துரையாடி ஓர் இலக்கை எட்டுவது என்பது உலகத் தமிழினமே கூர்ந்து உற்று நோக்கி கவனிக்க வேண்டிய விடயம். ஆனால், ஊடகவியலாளர்களையே நெருங்க விடாமல் இத்தகைய கலந்துரையாடலை, மிக இறுக்கமான சுவர்களுக்குப் பின்னால் மூடிய வேலிக்குள் நடத்துவது ஏன்? இவை யெல்லாம் இயல்பாகவே சந்தேகத்தைக் கிளப்புகின்றன.

உண்மையில், நெருக்கடி மிக்க இலங்கை அரசியலில் தமிழ், முஸ்லிம் மக்கள் தரப்பில் ஒன்றிணைந்த அரசியல் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே அவர்களுக்கு ஏதேனும் மீட்சியை ஈட்டிக் கொடுக்கமுடியும் என்ற நன்நோக்கத்திற்காக இந்தக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்குமானால் ஏற்பாடுகள் நடந்திருக்கு மானால் இத்தகைய அதீத,அளவுக்கு மீறிய கட்டுக்கோப்பு வேலி அத்தியாவசியமற்றதாகும்.
அது மாத்திரமல்ல, தமிழர்கள் தமக்குள்ளும், அதே சமயம் முஸ்லிம்களுடன் சேர்ந்தும் ஒன்றுபட்டு அரசியல் சவால்களை சந்திப்பதற்கான தளத்தை உருவாக்கும் நோக்கோடுதான் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப் படுமானால், இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இன்னொரு பிரதான தரப்பு ஏன் புறந்தள்ளப்பட்டது என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

நடப்பதை நடந்தவாறே உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்தித் தெரியப்படுத்துவது மட்டும்தான் ஊடகங்களின் பணி என்ற நிலைமையைத் தாண்டியதாக இன்று தமிழ் ஊடகவியல் தரப்பின் எல்லை விரிந்து, பரந்து கிடக்கின்றது.

தமிழர் அரசியலில் கருத்துருவாக்கிகளாக பிரதான கருத்துருவாக்கிகளாக இன்று ஊடகங்களும், ஊடகவிய லாளர்களுமே முன்னிலை வகிக்கும் நிலைமை உள்ளது. இதன் காரணமாகவே தமிழின அடக்குமுறை நடவடிக்கை களின் பிரதான அங்கமாக ஊடக அடக்குமுறையும் இலங்கைத் தீவில் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் காரணமாகவே அரசியல்வாதிகளுக்கு நிகராக இப்போது வரை ஊடகவியலாளர்களும் இழப்புகளை பாதிப்புகளை இங்கு சந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

ஊடகவியலாளர்களையும், ஊடகத்துறையையும் புறந்தள்ளி விட்டு, அரசியல்வாதிகள் மட்டத்தில் ஒத்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி என்பது நான்கு சக்கர வாகனத்தை மூன்று சக்கரத்தில் நகர்த்தும் எத்தனமாகவே படுகின்றது.

இன்றைய களநிலைமையில் ஊடகங்களைப் புறம்தள்ளி வைத்துவிட்டு, அரசியல் தலைமைகளிடையே ஒத்த கருத்தை உருவாக்க முடியும் என்பது இந்தக் கலந்துரை யாடலின் ஏற்பாட்டாளர்களின் நப்பாசையாக இருந்தால் அது புத்திசாதுரியமற்றதாகவே அமையும் என்பதை சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

இந்தக் கலந்துரையாடலுக்கு, பெரும் பணச் செலவில் அழைக்கப்பட்ட சில அரசியல்வாதிகளை விடவும் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் செல்வாக்கும், ஆதரவும், வரவேற்பும், வழிகாட்டும் தகைமையும் பெற்ற ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் இருக்கின்றமையை மறைத்து விடமுடியாது.

இதேவேளை, 1985 இல் பல்வேறு தமிழ் போராட்ட இயக்கங்களும், கட்சிகளும் திம்புவுக்குக் கூட்டிச் செல்லப் பட்டமை போன்ற தோற்றத்தை இப்போது சூரிச் கலந்துரையாடல் முன்நகர்வும் காட்டி நிற்கின்றது

திம்பு ஏற்பாட்டுக்கு இந்திய அதிகார வர்க்கம் பின்புலத்தில் இருந்தது. இப்போது சூரிச் ஏற்பாட்டுக்கு வெளியே தெரியாமல் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய சர்வதேச சக்தி எது?

ஊடகத் தரப்பினைப் புறக்கணித்து உதாசீனம் செய்து ஓரங்கட்டி இந்தக் கலந்துரையாடலை வெற்றிகரமாக நடத்தி விட்டால், பின்புலத்தில் உள்ள அரூபக் கரங்களை மறைத்து விடலாம் என சம்பந்தப்பட்டோர் எண்ணுவார் களேயானால் அது வேடிக்கையன்றி வேறில்லை.


எல்லா விடயங்களையும் எல்லாக் காலத்திலும் மூடி மறைத்து விடமுடியாது என்பதுதான் உண்மை.

நன்றி: உதயன் தலையங்கம்

“றோ மற்றும் கோத்தபாயவின் ஏற்பாட்டில் சுவிசில் துரோகிகளின் மகாநாடு”
எதிர்வரும் வார இறுதி நாட்களில் துரோகிகளின் ஒன்றுகூடல் சுவிசில் நடைபெறவிருக்கின்றது. கருணா, சுவிசில் . தயாமோகன், குலம் மற்றும் தோழர் அம்பலவாணர் ஆகியோர் தற்போது டக்ளஸ்,பிள்ளையான், துரோகிகளைக்கொண்டு சுவிசுக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

தொடரும் துரோகிகளின் பயணம்


“நகுலன் விலைபோய்விட்டாரா?”
எப்போது எந்தெந்த விடயங்களை சொல்லவேண்டும் என்பதில் தடம் புரள்வதால் அது எதிர்காலத்தில் பல ஆபத்துக்களையும் விளைவிக்கும் என்பதும் உண்மை.


“துரோகி ராமின் அடுத்த நடவடிக்கை என்ன?”
தற்போது எமக்கு கிடைத்த புலனாய்வு தகவல்களின்படி பனாகொட சிறீலங்கா இராணுவ முகாமில் சொகுசாக இருக்கும் ராம், தனது சர்வதேச கூலிகளுக்கு ஓர் கட்டளை அறிவித்திருப்பதாக அறியப்படுகின்றது
“புலிகளின் கிழக்கு தளபதி ராம் கைது” – நாடகம்
“கேணல் ராம்” – துரோகம்!


புலம்பெயர் மக்களே அவதானம்!
“நாம் இயக்கத்துக்கு இரகசியமாக முக்கிய வேலை செய்கின்றோம். கேணல் ராம் உத்தரவுப்படி இயங்குகின்றோம்.இயக்கத்துக்கு வேலை செய்பவர்கள் வேலை செய்ய வேண்டும் அல்லது விட்டுவிட்டு ஒதுங்க வேண்டும்”


“புல்மோட்டையில் ஒரு துரோகம்”
மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புல்மோட்டை முள்வேலி முகாமுக்குள்ளேயே “துரோகம்” இருப்பதுகவலைக்கிடம். அந்த துரோகத்தை “கபிலன்” என முன்னர் இயக்கத்தில் அழைத்தார்கள்.


“ஓடி வந்த” – தயாமோகன்
புலம்பெயர் தமிழர்களிடையே குழப்பத்தை விளைவித்த மகான் “தயாமோகன்”. முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தின் பின்னர் சிறீலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பணிபுரிய “தோழன்” கருணாவால் நியமிக்கப்பட்டவர்.


“றோ மற்றும் கோத்தபாயவின் ஏற்பாட்டில் சுவிசில் துரோகிகளின் மகாநாடு”
எதிர்வரும் வார இறுதி நாட்களில் துரோகிகளின் ஒன்றுகூடல் சுவிசில் நடைபெறவிருக்கின்றது. கருணா, சுவிசில் . தயாமோகன், குலம் மற்றும் தோழர் அம்பலவாணர் ஆகியோர் தற்போது டக்ளஸ்,பிள்ளையான், துரோகிகளைக்கொண்டு சுவிசுக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


“கருணா – தயாமோகன்” சுவிசில் சந்திப்பு
ஜேர்மனியில் இருந்து புறப்பட்டு கருணா சுவிசுக்கு சென்றதாகவும், அவரை கிருஸ்ணா அம்பலவாணரின் சார்பாக சிலர் சந்தித்துள்ளார்கள். மேலும், ஓடி வந்த தயாமோகனையும் நேரில் சந்தித்துப் பேசியதாக எமது புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன.


“தீர்க்கதரிசி” – சர்வே
1996 முதல் அப்பொறுப்பை வகித்த சர்வே 2002ம் ஆண்டு பேச்சுவார்த்தை காலகட்டத்தின் போது சர்வதேச சூழலுக்கமைவாக அனைத்துலகச்செயலகத்தின் பணிகள் நிறைவுபெற்று, அனைத்துலகத் தொடர்பகத்தின் கீழ் அனைத்துலக செயற்பாடுகளைக் கொண்டுவந்தார் தலைவர்.


“நான் அவன் இல்லை”
கேபியும் கிபியும்
KPயின் மறுபக்கம்: பகுதி 01அன்பார்ந்த மக்களே உங்களை ஏமாற்றவும், உங்கள் எதிர்காலத்தை விற்கவும் கே.பியின் திட்டங்கள் செயல்பட தொடங்கிவிட்டதை இவ்வார கே.பியின் பிரச்சாரப் பீரங்கியான ”பரபரப்பு” உறுதிப்படுத்தியுள்ளது. யாரிடமும் இல்லாத படம் அவர்களுக்கு மட்டும் எப்படிப் போனதோ..? கே.பி. அவசரப்பட்டு ‘நான் அவனில்லை’ என்று சொல்லாமல் விட்டால் சரி.

தமிழீழத்தின் பிள்ளைகள் தமிழீழத்தை அழித்தவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு

sivanathan_mahindaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பறிபோகும் தாய் நிலமும் "பதவிக்காய் அலையும் ஸ்ரீகாந்தாவும்"

ஐக்கிய இலங்கை என்ற கபடமான மகிந்த சிந்தனைக்குள் பலியாகும் ஸ்ரீகாந்தா பறிபோகும் தாய் நிலத்தை மறப்பதேன்?

மறக்க முடியுமா ? ஜெகத் கஸ்பாரின் மறு பக்கம்

தமிழீழப்போராட்ட விழிப்புணர்வை மங்க வைக்கும் செயல்பாடாகவே அவை வெளிவரும். தமிழகத்தில், போராட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கும் பழ.நெடுமாறன், வை.கோ, சீமான், குளத்தூர்மணி போன்றோரை அப்புறப்படுத்தும் அல்லது அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு இவர் வருவார்.

மேலும் >>>>>>>>>>>>>> இங்கே செல்லுங்கள்

“நகுலன் விலைபோய்விட்டாரா?” – ஆய்வின் புலனாய்வு

சொல்லவும் முடியாமல் சகிக்கவும் முடியாமல் சில சம்பவங்கள் வரலாறுகளில் நடைபெறுவது உண்மை.

ஆனால் எப்போது எந்தெந்த விடயங்களை சொல்லவேண்டும் என்பதில் தடம் புரள்வதால் அது எதிர்காலத்தில் பல ஆபத்துக்களையும் விளைவிக்கும் என்பதும் உண்மை.

அண்மை காலமாக விடுதலைப்புலிகளின் பேரழிவுக்கு பின்னர் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இதனை
சம்பந்தப்பட்ட தரப்பினர் தமிழீழ தேசம், மக்கள் விடுதலை கருதி மறைப்பதும் அதே நேரம் அவை கசிவதுமாக
இருக்கின்றது. இதனால் இன்று விடுதலைப்புலிகள் பல இயக்கங்களாக உருவெடுப்பது போன்ற தோற்றங்கள் எழுந்தவண்ணம் உள்ளது சிலவேளை நிஜமாக கூட வரலாம்.

புலம்பெயர் சமூகத்தில் தான் இவை அதிகமாக
இருந்த போதும் தாயகத்திலும் இன்று இரண்டு இயக்கங்கள் போல உருவெடுக்கும் அபாயம் எழுந்துள்ளது. ஒன்று இராணுவத்தினராலும் கருணாவினாலும் நடத்தப்படும் இயக்கம். மற்றது என்ன செய்வதென்று தெரியாமல் தத்தமது பாட்டில் குழுக்களாக மறைந்து வாழும் இயக்கம்.

இராணுவத்தினரால் நடாத்தப்படும் இயக்கம் பற்றி முதலில் பார்ப்போம்.

மே 17 இற்கு பின்னர் சரணடைந்த சில பொறுப்பாளர்கள் மற்றும் ஏற்கனவே இராணுவத்துடன் தொடர்பில் இருந்தவர்கள், இரட்டை முகவராக செய்ற்பட்டோர்கள், கருணா ஆகியோர் மற்றும் கிழக்கு மாகாணத்தில்
இருந்த விடுதலைப்புலிகள் ஆனால் கருணாவுடன் இரகசிய தொடர்பை வைத்திருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து இராணுவத்தின் வழிகாட்டுதல்களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை நடாத்த ஆரம்பித்துள்ளனர்.

இதன் மூலம் விடுதலைப்புலிகளின் எஞ்சி இருக்கின்ற போராளிகள் பொறுப்பாளர்களை கண்டுபிடித்தல்,விடுதலைப்புலிகளின் இராணுவ தகவல், ஆயுத கிடங்குகளை கண்டுபிடித்தல், புலம்பெயர் நாடுகளில் உள்ள
வலையமைப்பினை ஊடுருவி தாக்கி அழித்தல், அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் இடையே பிளவுகளை ஏற்படுத்தல் என்ற வகையில் இவை அமைந்தது.

இந்த வகையில் ஆரம்பத்தில் திரு.கே.பி அவர்கள் தலைமையில் அனைவரும் கூடிய போதே இராணுவத்தினரின் வழிகாட்டுதலில் இருக்கும் புலிகள் அமைப்பு செயற்பட தொடங்கியது. இதில் முதற்கட்டமாக தயா மோகன்
என்பவர் மலேசியாவுக்கு அனுப்பபட்டார் இவர் இராணுவத்தின் வழிகாட்டுதலில் கருணாவினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு முஸ்லிம் நபர் ஒன்றின் பெயரில் பாஸ்போட் செய்து மலேசியா வந்தடைந்தார்.

இதே காலப்பகுதியில் ஒன்பது பேர் கொண்ட சரணடைந்த புலிகளும் இந்தியாவுக்கு அனுப்பபட்டிருந்தனர். இதில் என்ன துன்பகரமான
விடயம் என்றால் இவர்களுக்கான நிதிகளை புலம்பெயர்ந்த சில ஆதரவாளர்களும் புலிகளும் அனுப்பியுதவினர்
என்பதே ஆகும் (திரு. தயாமோகனின் வாக்குமூலத்தின்படி).

தயாமோகன் வந்தபின்னர் திரு கே.பி அவர்கள் தயாமோகனிற்கு தனியாக வீடு எடுத்து கொடுத்து சகலவசதிகளையும் செய்து கொடுத்தார். தனது ஆதரவுக்காக தயாமோகனை பாவித்த கேபி அவர்கள் தயாமோகனூடாக கருணா, இலங்கை அரசு ஆகிய தொடர்புகளையும் ஏற்படுத்தி விரும்பியோ விரும்பாமலோ
இராணுவத்தினரால் நடாத்தப்படும் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கு ஏற்ப நடந்துகொண்டார். இதேவேளை இந்திய றோ அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திய கே.பி, அவர்கள் ஊடாக தனது பாதுகாப்பினையும் உறுதி செய்து
கொண்டார்.

இவர்களது தயாரிப்பில் உருவான திட்டங்களின்படி கே.பி புலம்பெயர்ந்த மக்களையும் அணிதிரட்டும் முயற்சியிலும், நாடுகடந்த அரசு போன்ற சில திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கும் நேரத்தில் கே.பி க்கும் ஏனைய சில புலிகளுக்கும் இடையே முரண்பாடுகள் வலுத்தமை உங்களுக்கு தெரியும்.

இந்த முரண்பாடுகளை பயன்படுத்தி புலம்பெயர் மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் பலர் இவர்களுள் புலிகளின் முக்கிய பொறுப்பில் முன்பு இருந்தவர்களும் உள்ளடங்குவதுடன் புலிகளால் தண்டனை
வழங்கப்பட்டவர்களும் சேர்ந்துகொண்டனர். கூடவே முக்கியமாக சில இணைய தளங்கள், ஊடகவியலாளரும் அடங்குவர். உதாரணமாக கே.பி தலைமையிலான முதலாவது ஒற்றுமை படுத்தல் கூட்டத்தில் அது இரகசியமானது
என்றும் முக்கியமானவர்களே பங்கு பற்றலாம் என்றும் கூறப்பட்டதாம்.

ஆனால் முக்கிய புலி உறுப்பினர் ஒருவர் தனது ஸ்கைப் ஊடான கூட்டத்தில் டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்களையும் கூட வைத்துக்கொண்டே கூட்டத்தை
நடாத்தி இருக்கின்றார் என்பது அண்மையில் தான் கசிந்துள்ளது. வாழ்த்துக்கள் அந்த புலி உறுப்பினரின் வெளிப்படை தன்மைக்கு.

இவ்வாறு இந்த காலப்பகுதிக்குள் கே.பி மற்றும் உறுப்பினர்கள் முறுகல் நிலையினை எட்டினாலும் தேச நன்மை கருதி பிரிந்து செல்லும் நிலையினை தோற்றுவிக்க கூடாது என சிலர் மெளனமாகவே ஆமா
போட்டுகொண்டு இருந்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் மிக சாதூரியமாக இந்திய ரோவினையும் ஏமாற்றி தன்னால் நடாத்தப்படும் புலிகள் அமைப்பின் ஒருபகுதியூடாக சூட்சுமமாக தகவல்களை திரட்டி கே.பி இனை
கடத்தி சென்றமை (அழைத்து சென்றமை) நடந்து முடிந்த நிலையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிப்பொறுப்பாளர்கள் இலங்கையில் உள்ள புலிகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

திரு. ராம்

ராம் அவர்கள் நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் பழகி புலம்பெயர்ந்தவர்களிடம் நம்பிக்கையினை ஏற்படுத்தி,
இரக்கத்தினை ஏற்படுத்தி மாதாந்தம் நிதிகளை பெற்றுவந்தார். கூடவே தலைவர் தனக்கு இறுதியாக பல கட்டளைகளை பிறப்பித்ததாகவும் அதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் அனைவரிடமும் நம்பிக்கையினை
ஏற்படுத்தி பல வேலைகளை ஆரம்பித்தார்.

1 இலங்கையில் ஆங்காங்கே உள்ள போராளிகளின் தொடர்புகளை தரும்படி கேட்டு அதனை பெற்றுகொண்டு அதன்படி போராளிகள் இருக்கும் இடங்களை கண்டுபிடித்தார்.
2 அவர்களூடாக இருக்கும் ஆயுத கிடங்குகள் இ தகவல்களை திரட்டினார்
3 போராளிகளை பாதுகாத்து வைத்திருக்கும் பொதுமக்கள் இடங்களையும் சிலரிடம் பெற்று கொண்டார்.
4 புலம்பெயர் நாடுகளில் பல பொறுப்பாளர்கள், அமைப்புக்கள் ஆகியோரிடம் இருந்து தகவல்களை பெற்றுக்கொண்டார்.
5 தலைவர் உண்மையில் இறந்து விட்டதாகவும் அதனை தனக்கு தலைவரின் ஆட்களும் சூசையும் சொன்னதாகவும் கூறி சிலரை நம்பவைத்தார்.
6 புலம்பெயர் நாடுகளில் நிதி வரவு விபரங்கள், ஆயுத கொள்வனவுகள் பற்றிய விடயங்களையும் கேட்டறிந்து
கொள்ள முற்பட்டார்.

ஆனால் இவை அனைத்தையும் இவர் மிகவும் இலாவகமாக எங்கிருந்து செய்தார் என்பது உங்களுக்கு மட்டுமல்ல ஏமாந்த புலிபொறுப்பாளர்கள் சிலருக்கும் தெரியாது. உண்மையில் இவை அனைத்தையும் திரு இராம் அவர்கள்
எங்கிருந்து மேற்கொண்டார் என்றால் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமில் இருந்துதான்.
இவை அனைத்தையும் இராணுவத்தின் வழிநடாத்தலில் மேற்கொண்டார். இந்த விடயம் புலிகளில் உள்ள சிலருக்கு தெரியும் அதாவது நாட்டில் இருக்கும் புலிகளின் மிக முக்கியமானவர் சிலருக்கும் வெளி நாட்டில் இருக்கும்
சிலருக்கும் ஏற்கனவே தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர். ஏன் என்று தெரியவில்லை.

நாட்டில் இருக்கும் புலனாய்வு துறை, இம்ரான் பாண்டியன் படையணி, ராதா வான் காப்பு அணி, கரும்புலிகள் அணி மற்றும் புலிகளின் இராணுவ புலனாய்வு அணிகள் திரு இராம் அவர்களிடம் தமது விபரங்களை ஒப்படைக்காது
அதே நேரம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவது போன்று நடித்துள்ளனர். ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் புலிகளின் சில பொறுப்பாளர்கள் திரு இராம் அவர்களுடன் கதைக்கும்படி தொடர்புகளை ஏற்படுத்தி
கொடுத்த வண்ணம் இருந்தனர்.

இது இவ்வாறு இருக்க இவரின் உண்மைதன்மை எங்கு இருக்கின்றார் என்பதனை கண்டறிய இரு கரும்புலி அணிகளை சேர்ந்தவர்களும் அதே நேரம் புலிகளின் புலனாய்வு அமைப்பும் பல பக்கங்களில் செயற்பட்டனர்.
இறுதியாக சில கரும்புலி உறுப்பினர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கினர். திரு இராம் அவர்களுடன் நேரடியாக பேசி வெளி நாட்டில் உள்ள ———- என்பவர் நீங்கள் தான் படையணிகளுக்கு பொறுப்பு என்று கூறியதாகவும்
சாமான்களையும் ஆட்களையும் பற்றி கதைக்கவேண்டும் என கூறியபோது திரு. இராம் அதற்கான திகதி நேரம், இடம் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். அந்த போராளி அங்கு சென்றார். ஆனால் செல்லும்போது அவர் தனது
கைத்தொலை பேசியில் கூறும்போது “ரோட் கிடங்கும் பள்ளமுமாக இருக்கு” என சங்கேத மொழியில் கூறினார்.

இறுதியாக கூறும்போது “வந்திட்டன் ஆனால் மை போல கிடக்கு” என கூறினார். அதன்பின்னர் தொடர்பு இல்லை. ஆனால் திரு இராம் அவர்கள் பின்னர் வெளிநாட்டில் உள்ளவர்களிடம் பேசும்போது அவங்கள் ஆமியோட கூட்டு
மற்ற மாதிரி என பேச்சினை முடித்துகொண்டார்.

அடுத்த சோதனையாக இவர் நிதி அடிக்கடி அனுப்பசொல்வது வழமை ஆகவே இந்த நிதி வங்கி கணக்கிற்கு அல்லது உண்டியல் அல்லது மணிகிறாம் ஊடாக பெற கூடியவாறு விபரங்களை திரு இராம் அனுப்பியுள்ளார்.
இவ்வாறு புலம்பெயர்ந்த நாடு ஒன்றில் இருக்கும் ஒரு புத்திசாலி புலி அங்கிருக்கின்ற ஆதரவாளர் மற்றும் சில புலி அங்கத்தவர்களுடன் பேசி குறிப்பிட்ட ஒரு நகரத்தினை சொல்லி இந்த இடத்தில இந்த நாள் நீங்கள் போய்
நில்லுங்கள் காசு எடுக்கவருவார்கள் என்ன மாதிரி என்று பார்த்து சொல்லுங்கள் என தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இராம் அவர்களின் உதவியாளருக்கும் தகவல் வழங்கப்பட்டது அதாவது வழமையான இடத்தில் இந்த திகதியில் போய் எடுக்கலாம் என அறிவித்துள்ளார்கள். சொன்னதன்படி இராம் அவர்களின் உதவியாளர் வந்தார்
ஆனால் சும்மாவா வந்தார் இரண்டு பீல்ட் பைக்கில்ஸ் உடன் பாதுகாப்பாக வந்து சிறிது தூரத்தில் இறக்கிவிடப்பட்ட பின்னர் குறிப்பிட்ட நபர் பணத்தினை எடுத்து சென்றிருக்கின்றார்.

அடுத்ததாக இவரிடம் வழங்கப்பட்ட தகவல்களின் படி சில போராளிகள் பிடிபட்டனர், ஆயுத கிடங்குகள் பிடிபட்டன.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போராளிகளும், புலம்பெயர் புலிகள் சிலரும் கேட்டபோது அது பழைய சாமான்கள் கருணாவோட காலத்தில செய்தது இப்ப எடுக்கிறாங்கள் என்று கூறியுள்ளார். சில நேரம் நம்மட பிடிபட்டவங்க
காட்டி கொடுக்கிறாங்க என்று சமாளித்துள்ளார். ஆனால் போராளிகளின் கருத்துப்படி இவர் ஆயுத விபரங்களை கேட்டபோது அவர்கள் உண்மையான இடத்தினை சொல்லாது சில ஆயுதங்களை புதிய இடங்களில் பதுக்கி வைத்து
விட்டே தகவல்களை வழங்கி இருக்கின்றனர். இதன்படி முன்பு பிடிபட்ட போராளிகளுக்கு அந்த விடயங்களே தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் இங்கு புலிப்பொறுப்பாளர்களுடன் கதைக்கும் போது தமக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை என்றும் போன் சார்ச் பண்ண முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறுவார். ஸ்கப் வசதி நமக்கு இல்லை போனிலதான்
பேசவேண்டும் என்று கூறும் இவர் அதே நாள் சில மணித்தியாலங்களில் தனக்கு நெருங்கிய நண்பரிடம் ஸ்கைப்பில் பேசியுள்ளார். என்னதான் நடக்குது என்று குழம்பிபோயினர் சில புலிகள்.

அடுத்ததாக சில பெண்போராளிகளை அம்பாறை, மட்டகளப்பு போன்ற இராணுவ முகாம்களில் வைத்து சித்திரவதை செய்து அவர்களூடாகவும் பணம் பெறப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட யாழ் மாவட்டத்தை சேர்ந்த போராளி இவ்வாறு நிர்க்கதியாகி இவர்களின் திட்டத்திற்கு அமைவாக செயற்பட்டார்.

இதன்படி தான் காயப்பட்டு இருப்பதாகவும் தனக்கு அப்பா அம்மா சகோதரங்கள் யாரும் இல்லை என்றும் தான் இந்தியா செல்ல இராம் அண்ணா ஒழுங்குபடுத்தி
இருப்பதாகவும் 10 இலட்சம் ரூபா உடன் தேவை என்றும் வெளிநாடுகளில் காசு கேட்டுள்ளார். சிலர் இரக்கம் பார்த்து பணம் அனுப்பினர். ஆனால் பின்னர்தான் தெரிய வந்தது அந்த பெண்போராளிக்கு அப்பா அம்மா உட்பட
சகலரும் இருக்கின்றார்கள் மட்டுமன்றி சகோதரன் கூட வவுனியாவில் உள்ளார்.

மாவீரர் நாள் உரை

இதே நேரம் இவ்வருட மாவீரர் நாள் உரை நான் தான் விடப்போகின்றேன். நான் வீடியோவிலும், வொஇஸ் கட் இலும் தருவேன் அதனை போடுங்கள் ஒரு எஃப் ரி பி இல போட்டு தருவோம் நீங்கள் அதனை பிரசுரியுங்கள் என நேற்று பல இணைய தளங்களுக்கு கூறியுள்ளார். திரு. இராம். அது மட்டுமன்றி புலிகளின்
தலைவராக தாம் ஒருவரை நியமித்து உள்ளதாகவும் துணைத்தலைவர் தான் என்றும் செயலாளர் அல்லது பேச்சாளர் திரு நகுலன் என்றும் கூறியுள்ளார். (இந்த ஒலிப்பதிவு சில இணைய தள ஆசிரியர்களிடம் பதிவு
செய்யப்பட்டு உள்ளது.)

சிம் காட்டிற்கே வசதி இல்லாம நிற்குறோம் ஐயா என சொன்ன இராம் இந்த நவீன வசதிகளுடன் இப்போது இருக்கின்றார் என்பது சந்(தேக)தோசமாக இருக்கின்றது அல்லவா.

நடந்தது இதுதான்

அம்பாறையில் மட்டகளப்பில் இருந்த ———- என்ற புலிபொறுப்பாளர் ஏற்கனவே
கருணா ஊடாகவும், இராணுவத்தினரின் பராமரிப்பில் இருந்துவந்துள்ளார். இவர் வன்னியில் போர் உகிரமடைந்து வருகையில் மணலாற்று காட்டுப்பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தார். தலைமையின் சொல்லை கேட்பது போன்று
இராணுவமும் இவரை மண்கிண்டி மலை பகுதிக்கு அனுப்பியது.

பின்னர் நகுலன் அவர்களையும் இவர் ஊடாக வரவழைக்கப்பட்டபோது நகுலனும் இராணுவத்தினர் போட்ட வலையில் சிக்கினார். தொடர்ந்து நகுலன் மற்றும் மட்டு பொறுப்பாளர் அவருடன் இன்னுமொரு முக்கிய பொறுப்பாளர் எல்லோரும் சேர்ந்து ராம் அவர்களை அழைப்பது போன்று வரவழைத்து இராணுவம் போட்டதிட்டத்தில் சிக்கி கொண்டனர். இவர்களுடன் ஒரு
கொம்பனி போராளிகளும் உள்ளடங்குவர்.

இவர்களை வைத்தே இப்போது இராணுவம் இயக்கம் ஒன்றை நடாத்தி வருகின்றனர். இந்த அடிப்படையில். வெளி நாட்டில் இருக்கின்ற சில பொறுப்பாளர்கள். நாடு கடந்த அமைப்பின் முக்கியஸ்தர்களும் நாட்டில் இருந்து
வந்த சில பொறுப்பாலர்கள் தயா மோகன் உட்பட எல்லோரும் சேர்ந்து மாவீரர் நாள் அறிக்கை தயரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த அறிக்கையில் தலைவர் பிரபா இறந்துவிட்டதாகவும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி இயக்கத்திற்கு புதிய தலைவர், துணை தலைவர், செயலர் ஆகியோரை நியமித்து அறிக்கை வரவுள்ளது.

தலைவராக கே.பி அல்லது இராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஒரு புலிதலைவர் (இது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது ஆனால்
திகைப்பூட்டும் வகையில் அந்த பெயர் இருக்கலாம்) நியமிக்கப்படுவர்.

இந்த அறிக்கையில் தமிழீழம் என்ற இலட்சியத்தினை விடுத்து அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஒருங்கிணைந்த இலங்கைகுள் கூட்டு
அரசியலை நோக்கிய திட்டம் ஒன்று அறிவிக்கப்படலாம். புலம்பெயர் மக்களை ஏமாற்ற நாடுகடந்த அரசுக்கும் ஆதரவு தருமாறும் அறிக்கை வரலாம்.

அண்மையில் திரு இராம் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி வந்திருந்தமை உங்களுக்கு தெரியும்.

ஆனால் இதுதான் நடந்தது.

ராம் நகுலன் ஆகியோர் இராணுவத்திடம் இருக்கின்றனர் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டதைன தொடர்ந்து பலர் அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டனர். இதனால் திட்டம் பிசக போகுது என்று அறிந்த
சிங்கள இராணுவம் ராம் அவர்கைள தப்பி ஓடுவது போல விட்டு பின்னர் பிறிதொரு இடத்திற்கு மாற்றினர்.

ராம் அவர்களும் முன்னேற்பாடாக இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் எனக்கு கொஞ்சம் சிக்கலாக இருக்கு சில நேரம் மெடிக்ஸ் தேவைப்படலாம் ஆட்கைள ஒழுங்கு பண்ணுமாறு வடபகுதியில் உள்ள போராளிகளிடம்
கேட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னர் உடனடியாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் அங்குள்ள சில போராளிகளுக்கும் சொல்லியுள்ளார்.

சிக்கல்தான் ஒருமாதிரி உடைத்து கொண்டு வந்திட்டன் இப்போ
முன்பு இருந்த இடத்தில் இருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் இன்னொரு புதினம் இவர் இராணுவத்திடம் ஏற்கனேவ மாட்டியுள்ளார் என நம்பிக்கையாக தெரிந்த ஒரு பொறுப்பாளருக்கு சொல்லியுள்ளார். நான் மாட்டிதான் இருந்தனான் ஆனால் இப்போ நல்ல பிள்ளைளேபால் நடித்து வெளியே தப்பி வந்திட்டேன் என்று கூறியுள்ளார்.

ம்ம்ம் என்னதான் நடக்குது !!!??

எது எப்படி இருப்பினும் மக்களே உசாராக இருங்கள்!!

கிழக்கில் இருந்த 200 மேற்பட்ட போராளிகளும் ராம் நகுலன் என்பவர்களும் அரச இயந்திரத்தினால் நடாத்தப்படும் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்பதைன மனதில் கொண்டு செயற்படுங்கள்.

தேசிய தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது.

தமிழீழ தேசிய தலைவர் மேததகு வே.பிரபாகரன் அவர்கள் இறுதி வரை யுத்தத்தில் ஈடுபட்டார்.

16 ம் திகதி அதிகாலை முள்ளிவாய்க்கால் கடற்கைர வழியாக ஒரு விசேட கொமாண்டோ அணி உடைத்து ஊடறுத்துக் கொடுக்க தேசிய தலைவர் கரும்புலி அணிகேளாடு வெளியேறினார்

முன்பு சென்ற அணி கெப்பாபுலவு ரோட்டில் இருபக்கமும் பொக்ஸ் அடித்து அதனூடாக தலைவரின் அணியை வெளியேற்ற உதவியது என தகவல்.
அணியின் தலைவராக கேணல் லக்ஸ்மன் செயற்பட்டார்.

லக்ஸ்மன் அவர்களின் இறுதி செய்தி “நான் கடந்திட்டேன் ஆனால் காயப்பட்டுவிட்டேன்” என்பேத ஆகும். ஆனால் அவர் தலைவைரப்பற்றியோ
தன்னைப்பற்றியோ இதுவரை எந்த செய்தியினையும் சொல்லவில்லை.

அதன்பின்னர் தொடர்பு ஒருவருக்கும் இல்லை என்பது எனது அனுமானம்.
தலைவர் சொல்லும் போது போராளிகள், சாரதி, தொலைத்தொடர்பாளர், மருத்துவர்என அனைவரையும் விட்டுவிட்டு கரும்புலிகள் அணியுடந்தான் சென்றார்.

அவர் சென்றது சில முக்கியமான தளபதிகளுக்கு கூட தெரியாது.

இதே நேரம் கேணல் சூசை மற்றும் திரு பொட்டு அம்மான் உட்பட பலர் 17 ம் திகதி காலை வரை முள்ளிவாய்க்கால் உட்பகுதியிலேயே சண்டை பிடித்துகொண்டு நின்றார்கள் என்பதும் உண்மை.


நன்றி
இ.மாறன்

Posted by aaivu

நாளை ரொரன்ரோவில் எங்கள் இறகுகளைக் கட்டாதீர்கள்‏

தமிழீழத்தின் பிள்ளைகள் தமிழீழத்தை அழித்தவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு

sivanathan_mahindaதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதேவேளை சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷும் நேற்றைய தினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தெரிவித்ததுடன் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பிறந்ததின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Labels

அமெரிக்கா அம்பலம் அரச பயங்கரவாதம் அரசியல் சாக்கடை அறிக்கைகள் ஆய்வுகள் ஈழம் உலக ஆதிக்கம் உலகம் ஐ.நா ஒட்டுண்ணி அழிப்பு ஒலிவடிவம் கண்டனங்கள் கனடா கருணாநிதி கருத்துக் கணிப்பு காங்கிரஸ் எதிர்ப்பு காணொளிகள் சிறிலங்கா புறக்கணிப்பு சீமான் சுத்துமாத்துக்கள் சுப. வீரபாண்டியன் செய்திகள் ஜெகத்கஸ்பர் ஜெயலலிதா டி.ராஜேந்தர் தமிழக தேர்தல் 2009 தமிழகம் தமிழருவி மணியன் தமிழர் பேரவை. தமிழினத்துரோகம் தமிழினத்துரோகி தமிழீழ நாடு கடந்த அரசு தமிழீழநாடு கடந்த அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ்தேசியம் தமிழ்வீரம் திருமா நாடுகடந்த தமிழீழ அரசு நாம் தமிழர் இயக்கம் நிகழ்ந்தவை நினைவுப் பகிர்வு பகுத்தறிவு பச்சோந்திகள் படுகொலைகள் பரப்புரைகள் பழ.நெடுமாறன் பாரதிராஜா. புதிய வெளியீடுகள் புறக்கணிப்பு புலம் புலம் பெயர் அரசியல் பொதுவானவை மக்களவைத் தேர்தல் மாவீரர் நாள் யாழ் இணையம் ராமதாஸ். ரொறன்ரோ வணங்கா மண் வதைமுகாம் வன்னி அவலம் வரும் நிகழ்வுகள் வானொலி கலாதரன் விடுதலைப் புலிகள் வேண்டுகோள்