தமிழ்த்தேசிய ஊடகம் என்று சொல்லும் யாழ் இணையம் என்ன செய்கிறது ?
சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோக பூர்வ இணையத்தின் தொடர்பாளராக அல்லவா செயற்படுகிறது
-கிளிநொச்சி நகருக்கு இன்னும் 15 கிலோமீற்றர்களே உள்ளது. - படைத்தரப்பு.-
இதோ BBC யில் வந்த செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அதற்கு நீங்கள் வழங்கியுள்ள தலைப்பு பொருத்தமானதாக தோன்றவில்லை.!
BBC யின் கட்டுரையில் சிங்கள படைத்தரப்பு தருகின்ற செய்தி முற்று முழுதாக நம்பத்தகுந்ததல்ல என்ற கருத்தும் சேர்ந்துள்ளது!
இருட்டடிப்புச் செய்தி ஒரு நேயரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
-மன்னார் - முழங்காவில் பகுதி சிறீலங்கா இராணுவத்தினரின் வசம்! -
-கல்விளான் படையினர் வசம்-பாதுகாப்பு அமைச்சகம் -
-கள்ளித்துறை இறங்குதுறையும் இராணுவத்தால் வல்வளைப்பு -
-மல்லாவி மேற்கும் போட்டுதாம் -
இது எல்லாவற்றையும் விட விசமத்தனமானது
-வன்னிச் சண்டை 11 போராளிகள் வீரமரணம்.-
வன்னியில் மணலாறுக் களமுனையில் ஆண்டாங்குளத்துக்கு கிழக்கே முல்லைத்தீவை நெருங்கி நடந்த சண்டையில் 7 போராளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்களும் ஆயுத தளபாடங்களும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை பாலமோட்டையில் நடந்த சண்டையில் இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இரு போராளிகளின் உடலங்களும் ஆயுத தளபாடங்களும் இராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே கிளாலியில் படையினர் திடீர் தாக்குதல் நடத்தி போராளிகளைக் கொன்றுவிட்டு மீண்டும் தமது நிலைக்குத் தரும்பியுள்ளனராம்.
என்று படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
போராளிகள் வீரமரணம் என்று தலைப்பில் இராணுவத்தின் செய்தி
இச் செய்திக்கு பல நேயர்கள் வீரவணக்கமும் செலுத்தியிருந்தார்கள்
அப்படியானல் இராணுவத்தின் செய்திகளை இவர்கள் அப்படியே நம்புகிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது
இராணுவத்தின் செய்திகளுக்கு யாழ் இணையம் ஒரு காவியாக செயற்படுகிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது
விடுதலைப் புலிகளால் போராளிகள் வீரமரணச் செய்திகள் அறிவிக்கும் போது இப்போது அது பற்றிய விபரங்களை தவிர்த்து வருகிறார்கள்
அதிலும் ஒரு உளவியல் இருப்பதாகத் தெரிகிறது
இன்னுமொருவர் தேசியத் தலைவரின் சிந்தனையுடன் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்புப் படங்கள்
ஆனால் இந்த விசமிகள் மிகவும் சாதுரியமாக வீரமரணம் என்று சொல்லிக் கொண்டு இராணுவத்தின் செய்தியை தான் ஒரு புலி ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டு பரப்பி வருகிறார்கள்
இவற்றை யாழ் இணைய நிர்வாகமும் உறுப்பினர்களும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை ????
அப்படியானல் யார் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பது ????
ஆதாரமற்ற தகவல்களை அப்படியே நம்பிவிடும் மனநிலையிலிருந்து விடுபட்டு பகுத்தறியும் திறன்கொண்ட மக்களாக நாம் இருக்க வேண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அன்பிற்குரிய தமிழீழ மக்களே!
எதிரி தனது முப்படைகளையும் கொண்டு தமிழர் தாய் மண் மீது ஒரு கொடிய போரை ஏவிவிட்டுள்ளான்.
மூர்க்கமான இப்போரின் மூலம் தமிழரை அடிமைப்படுத்த முயலும் எதிரி தனது சூழ்ச்சிகரமான உளவியல் போரையும் தொடுத்துள்ளான்.
உளவியல் போரின் இலக்காக மக்களை தேர்ந்தெடுத்திருக்கும் எதிரி, மக்களிடையே வதந்திகளை பரப்பி மனங்களை குழப்பி வருகின்றான்.எமது விடுதலைப் போராட்டத்தின் பலமாக திகழ்வது மக்கள் சக்தியே. இந்த மக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதன் மூலம் எமது விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியும் என எதிரி கணக்கிடுகின்றான்.
எனவே, மக்களின் மனரீதியான தைரியத்தை கண்டு சரிப்பதன் மூலம் தமிழர் போராட்டத்தை அழிக்கமுடியும் என எண்ணி வதந்திகளை பரப்பி வருகின்றான்.
இந்த வதந்திகளின் காவு சக்தியாக நாம் இருந்தோமானால், அது நம் இனத்தை பலவீனமாக்கும் செயலுக்கு நாமே துணை போவதாக அமையும்.
எதிரியினால் திட்டமிட்டு பரப்பப்படும் உண்மையை போன்று தோற்றமளிக்கும் பொய்களை ஆய்வு செய்யும் சுய விழிப்பை எமது மக்கள் கொண்டிருக்க வேண்டும்.
நம்பிக்கையீனங்களை உருவாக்கி மக்களின் தன்னம்பிக்கையை உடைத்துவிட முயலும் எதிரியின் எண்ணத்தை முறியடிக்கவேண்டும்.
வதந்திகள் கொடிய பாம்பைவிட ஆபத்தானவை. உண்மை ஊர் சுற்றி முடிப்பதற்குள் வதந்திகள் உலகைச் சுற்றி வந்துவிடும்.
எனவே, ஆதாரமற்ற தகவல்களை அப்படியே நம்பிவிடும் மனநிலையிலிருந்து விடுபட்டு, பகுத்தறியும் திறன்கொண்ட மக்களாக நாம் இருக்க வேண்டும்.
இதுவே எதிரியின் உளவியல் போரை வெற்றிகொண்டு தமிழர் தாய் மண்ணை விடுவித்து பலமான தேசமாக்க துணைநிற்கும்.
"இருள் முடிந்தே தீரும் பொழுது புலர்ந்தே தீரும்"
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No Response to "யாழ் இணையம் சிங்களத்தின் ஊது குழலா ?"
Post a Comment