பழ.நெடுமாறன் போன்றவர்களின் நம்பிக்கைக்குப் பின்னால்....!
சபேசன் அவர்கட்கு
இப்பின்னுட்டம் வேறொரு விடையத்திற்கு நான் எழுதியிருந்தாலும் கூட தாங்கள் எழுதிய கருத்துக்கும் பொருந்தும் என்பதால் இதை இணைக்கிறேன்.
தயவுசெய்து இங்கு கருத்தெழுதுபவர்கள் ஒன்றை மனதில்வைத்துக்கொள்ங்கள்
நெடுமாறன் அவர்கள் இந்தியாவில் இருந்து ஈழத்தமிழர்கட்கு ஆதரவாக தனது அரசியசெயற்பாடுகளை நெறிப்படுத்துபவர். அவரது பின்னால் பல்லாயிரம் தமிழின ஆதரவாளர்கள் அணிதிரண்டுள்ளார்கள் அவர்களை ஒரு போராட்ட மனநிலையில் வைத்திருக்க வோண்டுமெனில் சில கருத்துக்களை அவர்களுக்கு உடன்பாடானதாகவே கூறவேண்டும்.
ஆனால் தமழீழ அரசியலில் நாமே நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் நாமே கொள்கை முன்னெடுப்புக்களை தீர்மானிக்க வேண்டும் அதன் காரணமாகவே சிலவிடையங்களை தற்காலிகமாகவேனும் ஏற்றுக்கொள்ள எம்மை நாம் திடப்படுத்திக்கொள்ள வேண்டும்.
எதிர்காலம் எமது கைகளிலேயே தங்கியுள்ளது எமை எடுத்தெறிந்தவர்கள் ஏளனம் செய்தவர்கள் அனைவரும் நாணும்படி நாம் சாதனைகள் செய்வோம். ஆயுதம் எடுத்துப்போராடி எமது இனவிடுதலைக்கான காரணங்களை ஓரளவுக்கேனும் தெரியப்படுத்தியாயிற்று. அதைவிட புலம்பெயர் தேசத்தின் இளையகமுதாயத்தினையும் அதன்பால் ஈர்த்தாயிற்று. இனிமேல் தாயகத்தில் அரசியல் ரீதியான பலத்தினை உருவாக்கி மேற்குலகம் சொல்லுதே ஜனநாயகவழியிலான போராட்டம் இதற்கான கதவகளை நாம் திறந்திடல் வேண்டும்.
அது தவிர பல்லாயிரக்கணக்கான மக்களை நாசி முகாம்களில் இருந்து வெளியே எடுத்தாகுதல் வேண்டும் காரணம் சிங்களவன் எம்மில் எதிர்பாப்பது ஒரு நலிவடைந்த தமிழினக் குழுமத்தையே நோயினால் உடலளவிலும் மற்றும் மனநேயினால் அறிவியல் ரீதியாகவும் மீண்டுவரமுடியாத ஒரு இனக்குழுமம் வன்னிநிலப்பரப்பில் வாழ்வதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள் அதையே அவன் எதிர்பார்க்கிறான் காரணம் அவர்கள்தான் கேள்விகேட்கமாட்டார்கள் சிங்களக் குடியேற்றத்திற்கு இலகுவாகச் சம்மதிப்பார்கள். கடந்த வாரம் மகிந்த இனிமேல் எல்லைக்கிராமங்கள் என எதுவுமே இருக்காது என்று ஒரு கூட்டத்தில் பேசியதை அவதானித்தவர்க்கு இது புரியும்.
மேலும் அரசியற் போராளிகளும் இராணுவத்தின் பிடியில.; இவர்கள் திரும்பிவந்து தமது கள வேலைகளை மீண்டும் தொடங்க வேண்டும் இதற்கான வேலைத்திட்டங்களை களத்திலும் புலத்திலும் தொடங்க வோண்டும்
தவிர மெத்தப்படித்த கூட்டமொன்று புலம்பெயர் தேசத்தில் உள்ளது இவர்களை உள்வாங்க வேண்டும் காரணம் அவர்கள் தான் உள்ளதை உள்ளபடி சரியான விதத்தில் கூறுவார்கள் என்று மேற்குலக இராஜதந்திர வட்டாரம் அறிந்துவைத்திருக்கின்றது.
மாறாக எமது மண்ணின் வளங்களை சுரண்டுவதற்கு அனேகர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் அதை முறியடிக்க எம்மத்தியில் கல்வியறிவாளர்கள் பொருளாதார மேம்பாட்டுச் சிந்தனையுடையவர்களை ஒன்றிணைக்க வேண்டும் அதன் மூலம் புலம்பெயர் தேசத்தில் தமிழர் முதலீட்டு வங்கி எனும் பெயரிலேயோ அன்றேல் அதற்கிணையான ஏதாவது பெயரிலேயோ அரசியல் சாராத வல்லுனர் குழுவினை உருவாக்கி புலம்பெயர் தேசத்தில் தமிழர்களிடம் பெட்டிகளில் உறங்கிக்கிடக்கும் பணத்தினை முதலீடாக மாற்ற வேண்டும் அதற்கு முன்பு அவர்களிடம் இதுவிடையமான நுர்றுவீத உண்மைத்தன்மையுடைய நம்பிக்கையை வளர்க்க வேண்டும். இம் முதலீடுகள் எல்லாம் எம் தேசத்தில்பால் திருப்பிவிடல் வேண்டும். இவை படிப்படியாக நிறைவு செய்யும் காலமே உலகசமுதாயம் தமிழினத்தின் மேன்மையினை ஏற்றுக் கொண்டு எமது விடுதலையை அங்கீகரிக்கும்.
அவ்வேளை இந்தியா எனும் தேசம் உலக வரைபடத்தில் இருக்காது மாறிவரும் புறச்காரணிகளால் துண்டுதுண்டாகி சிறிய இனக்குழும நாடுகளின் கூட்டமாக மாறியிருக்கும்.
சபேசன் நீங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகி விட்டீர்கள்
தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றாரா ? இல்லையா ? இரண்டு விதத்திலும் யாரும் நிரூபிக்கவில்லை சிறிலங்கா கூட எல்லாமே ஆய்வுகளாகவே இருக்கின்றது
விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறை என்று விட்ட அறிக்கையில் கூட தமக்கு கால அவகாசம் தேவைப்பட்டது என்று சுட்டிக் காட்டியது
ஆனால் அதற்கு முன்னமே அவர் இல்லை என்று விடுதலைப்புலிகள் சார்பிலும் சார்பு இல்லாதவர்களும் ஆதாரங்கள் இல்லாமலே ஆணித்தரமாக பிரச்சாரம் செய்தது ஏன் ?
தான் உயிரோடு இருப்பதாக நம்பி, போராட்டத்தை தமது கையில் எடுக்காது, தனக்காக தமிழர்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகத்தான் தேசியத் தலைவர் தன்னுடைய உடலை எதிரியின் கையில் அகப்படும்படி செய்தாரோ தெரியவில்லை.
ஆனால் சில தமிழர்கள் அந்த உடலை ஆராய்ந்து தமக்கு ஆறுதல் தரக்கூடிய முடிவை எடுத்து விட்டு "தேசியத் தலைவர் வருவார்" என்று காத்து நிற்கிறார்கள்
நீங்கள் இறந்த உடலைப் பார்த்தீர்களா ??
எப்படி உறுதியாக சொல்கின்றீர்கள் ?
செய்தாரோ தெரியவில்லை.
நீங்கள் உங்களது ஊகங்களை ஆதாரமாக காட்ட முட்படுவது ஏன் ??
புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகளிடமும் தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றாரா? இல்லையா? என்பதில் இன்றைக்கு கருத்து வேறுபாடுகள் இல்லை.
அவர் இல்லை என்பதை மக்களிடம் சொல்வதா? வேண்டாமா என்பதில்தான் ஒருமித்த முடிவுக்கு வரமுடியாமல் நிற்கின்றார்கள்.
இவை எல்லாம் கூட உங்கள் ஊகம் தான்
ஆனால் தமிழ்நாட்டின் சில தலைவர்களும், ஊடகங்களும் உறுதியான முறையில் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக கூறி வருகின்றார்கள்.
மே மாதம் 17ஆம் திகதி இரவுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைமையிடம் இருந்து எந்த ஒரு தகவலும் யாருக்கும் வரவில்லை
யாருக்கும் வரவில்லை என்று எப்படி அடித்துக் கூறுகின்றீர்கள்
அப்படி அனுப்பியிருந்தால் தகவல் கிடைத்தவர்கள் எல்லாம் உங்களுக்கு கீழ் வேலை பார்ப்பவர்களா ??? எதற்காக உங்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் ???
இது வரை தலைவர் நேரடியாக யாருக்காவது தகவல் அனுப்பியது உண்டா ??? மாவீரர் உரையைத் தவிர
நக்கீரன் தேசியத் தலைவர் எப்படித் தப்பித்து வெளியேறினார் என்று கண்ணால் கண்டது போன்று ஒரு கதையை எழுதியது.
ஆய்வு எழுதுபவர்கள் உங்களையும் சேர்த்து யாரும் நேரில் கண்டு ஆய்வு செய்வதில்லை அப்படி யாராவது இருந்தால் சொல்லுங்கள் எல்லோரும் கம்புயூட்டர் ஜெரனல்கள் தான் இதுவே நீங்கள் செய்த ஆய்வின் பொய்த்தன்மை வெளிப்பட்டு விட்டது
பழ. நெடுமாறன், தேனிசை செல்லப்பா போன்றவர்களும் தேசியத் தலைவரின் மறைவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். "மனதின் விருப்பம்" என்கின்ற காரணத்தோடு ஜேர்மனியில் வாழ்கின்ற பெங்களுரைச் சேர்ந்த அந்த நபர் இவர்களின் நெருங்கிய நண்பர் என்கின்ற காரணமும் இருக்கின்றது.
என்ன புது கதை
நீங்கள் திரைக்கதை வசனம் சபேசன் என்று இறுதியில் எழுத மறந்து விட்டீர்கள்
இந்த ஆய்வாளர்களின் வெத்து வேட்டு ஆய்வுகளால் தான் புலம்பெயர் தமிழினம் சுயமாக சிந்திக்கும் திறனற்ற முடமானது
மீண்டும் மீண்டும் உங்கள் ஆய்வுகளால் தமிழர்களை முடமாக்கியது போதும்
இனியாவது சிறிலங்காவின் வலைப்பின்னலுக்குள் முடங்கி கிடக்காமல் தமிழர்களை சுயமாக சிந்திக்க விடுங்கள்
படைத்துறை ஆய்வாளர் அருஷ் ஈழமுரசிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில்
கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு தாமே சீருடையை அணிவித்ததாக சிறீலங்காவின் 53 ஆவது படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா தெரிவித்துள்ளது தொடர்பாக?
பதில்: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக சிறீலங்கா அரசு தெரிவித்துவரும் கருத்துக்களும், புகைப்படங்களும், நடைபெற்ற சம்பவங்களும் ஒன்றுக்கு ஒன்று பல முரண்பாடுகளை கொண்டவை. அதாவது சிறீலங்கா அரசின் பின்னைய தகவல்கள் அவர்களின் முன்னைய தகவல்களை பொய்யாக்கி வருகின்றன.
விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சீருடையை இராணுவம் அணிவித்திருந்தால் அவரின் கைத்துப்பாக்கி அங்கு எவ்வாறு வந்தது என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. மேலும் விடுதலைப் புலிகளின் தலைவரின் கைத்துப்பாக்கி என காண்பிக்கப்பட்ட துப்பாக்கியும் அவருடைய பிரத்தியோக துப்பாக்கியல்ல.
வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரினது கைத்துப்பாக்கிகள் தனித்துவமானவை. அவை லேசர் மூலம் வழிநடத்தப்படும் துVரங்களை கணிப்பிடும் கருவிகளை கொண்டவை. நீங்கள் முன்னைய புகைப்படங்களில் இருந்து அவற்றை ஆராய்ந்து கொள்ளலாம்.
அது மட்டுமல்லாது அவரின் துப்பாக்கி உறையும் உலோகத்திலானது. அதாவது பட்டனை அமுக்கியதும் துப்பாக்கியை வெளியே தள்ளும் பொறிமுறை கொண்டது. ஆனால் காண்பிக்கப்பட்டவை சாதாரண 9 மி.மீ கைத்துப்பாக்கியும், உறையும் தான். இவ்வாறு நுVறு காரணங்களை முன்வைக்க முடியும். அவற்றை இங்கு கூறுவதாக இருந்தால் அது பல பக்கங்களை நிரப்பிவிடும்.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை சிறீலங்கா அரசு தனது பிரச்சாரத்திற்கு பல ஒப்பனைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதுடன் பல தகவலகளை மறைக்கவும் முற்படுகின்றது. ஆனால் அவற்றின் நோக்கம் ஒன்று தான், அது தமிழ் மக்களின் விடுதலைப் போரை முற்றாக மழுங்கடித்து விடுவதேயாகும்.
http://tamilthesiyam.blogspot.com/2009/06/...-post_6508.html
5ம் ஈழப்போர் வரும் என்று கற்பனையில் வாழ்பவர்களினால்
இது தமிழ்நாட்டு உணர்வாளரால் சொல்லப்பட்டது இதற்குள் புலம்பெயர் தமிழர்களை இழுத்து விடுவது உங்கள் பாணியாக்கும்
இனிவரும் போர் ராஜ தந்திரப்போர் ஒழிய ஆயுதப் போரல்ல அதனுடைய ஆரம்பபம் தான் நாடு கடந்த தமிழீழ அரசு
இவை எல்லாம் எப்போதோ வரையப்பட்ட தலைமையின் வெவ்வேறு உத்திகள் என்று சில வட்டாரங்கள் கூறுகின்றன
தலைமை பற்றிய விவாதங்களை விட்டு விடுவோம் அவருடைய இலட்சியத்தினைத் தொடருவோம்
தலைவரை சாகடிப்பதனூடாக எதையுமே சாதிக்க முடியாது
பழ.நெடுமாறன் போன்றவர்களின் நம்பிக்கைக்குப் பின்னால்....!
இதை சபேசன் போன்றவர்களின் நம்பிக்கைக்குப் பின்னால்....! என்று மாத்துங்கள் அதுவே பொருத்தமானது
அதே புலனாய்வுத்துறை தானே பிறகு கொஞ்ச நாளுக்கு முன்பாக தலைவர் வீரமரணம் என்று மீண்டும் அறிக்கை விட்டது. ஏன் முன்பு சொன்னதற்கும் தற்பொழுது சொன்னதுக்கும் விளக்கம் கொடுத்தது. அறிவழகனின் அறிக்கையை வாசிக்க வில்லையா?
நக்கீரனுக்கு வியாபாரம் முக்கியம் இந்தத்தமிழீழ அபிமானிகளுக்கு வருமானம் முக்கியம்.
நக்கீரனுக்கு வியாபரம் முக்கியம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பழ. நெடுமாறனைப் பற்றி தாங்கள் சொல்வது அவ்வளவு சரியாகப் படவில்லை. ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவாகக் கதைப்பவர்களில் பலருக்கு பொருள் உதவி, அரசியல் நாற்காலி போன்ற ஆசைகள் இருப்பதை மறுக்கமுடியாது.
நீங்கள் இறந்த உடலைப் பார்த்தீர்களா ??
எப்படி உறுதியாக சொல்கின்றீர்கள் ?
இதே கேள்வி கேட்கும் நீங்கள் 17ம் திகதிக்கு பிறகு தலைவரைப் பார்த்தீர்களா? எப்படி உறுதியாக தலைவர் இருக்கிறார் என்று நம்புகிறீர்கள்
தலைமை பற்றிய விவாதங்களை விட்டு விடுவோம் அவருடைய இலட்சியத்தினைத் தொடருவோம்
இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
கீழே உள்ள படத்தினை பார்த்து பலகொணங்களில் ஆராச்சிசெய்தாவது இவரை யாரென்று சொல்லுங்கள்....அப்பவாவது ஏதாவது ஒரு முடிவு வருகிதா பார்க்கலாம்..
இந்த நவீன தொழில் நுடபகாலத்திலும் படத்தை வைத்து எதுவும் செய்யலாம் அதன் வைத்து ஆராச்சி செய்து தான் முடிவுக்கு வரவேண்டும் என்று சொல்லாதீர்கள் வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்
அதே புலனாய்வுத்துறை தானே பிறகு கொஞ்ச நாளுக்கு முன்பாக தலைவர் வீரமரணம் என்று மீண்டும் அறிக்கை விட்டது. ஏன் முன்பு சொன்னதற்கும் தற்பொழுது சொன்னதுக்கும் விளக்கம் கொடுத்தது. அறிவழகனின் அறிக்கையை வாசிக்க வில்லையா?
நீங்கள் தான் வாசிக்கவேண்டும்
புலனாய்வுத்துறை என்ற சொன்னவர்களுக்கே ஒரு மாதம் எடுத்திருக்கும் போது உங்களுக்கும் சாத்திருக்கும் எப்படி உடனேயே முடிந்தது
அதுவும் சாத்திரி வியாபாரியால் விழுந்தது அது மட்டும் அல்ல முகாமில் இருக்கும் மக்களுக்கு இதால் பாதிப்பு வருமாம்
தலைவரின் உடல் டிஎன் ஏ எல்லாம் ஒத்துவந்து நீருபனம் ஆயிருந்தால் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் உறுதி செய்தாகி விட்டது
ஆக புலம்பெயர் தமிழர்கள் சொன்னால் தான் சிறிலங்காவும் இந்தியாவும் மேற்குலமும் நம்பும் என்பது போல் நீங்கள் எல்லாம் எழுதுவது தான் வேடிக்கை
நீங்கள் எல்லாம் எதற்காக இதை மற்றவர்களின் மேல் திணிக்க முயல்கின்றீர்கள் ????
முதலில் வந்த அறிக்கையும் பின்னர் வந்த அறிக்கையும் ஒருவரால் தான் வந்ததா ??? யாரிடம் ஆதாரம் இருக்கின்றது
அல்லது அப்படி ஒருவர் இருக்கின்றாரா ???
நான் கூட நாளை ஒரு அறிக்கை விடலாம் யாழ் புலனாய்வுத்துறை என்று
இப்போது தலைமைச் செயலகம் ஒன்று இல்லாத போது எதுவும் யாராலும் நீருப்பிக்க முடியாது
இதே கேள்வி கேட்கும் நீங்கள் 17ம் திகதிக்கு பிறகு தலைவரைப் பார்த்தீர்களா? எப்படி உறுதியாக தலைவர் இருக்கிறார் என்று நம்புகிறீர்கள்
தலைவர் என்ன தொடர் நாடகத்திலா நடித்துக்கொண்டிருந்தார் ???
17 ம் திகதிக்கு முன்னர் நீங்கள் தலைவரை பார்த்திருக்கின்றீர்களா ??
புலிகள் இயக்கத்தில் இருப்பவர்களில் கூட சிலர் தலைவரை நேரில் பார்த்தது கிடையாது நீங்கள் வேறு
நாங்கள் எல்லாம் தலைவனைத் தேடவில்லை அவரும் போராளிகளும் நலமாக இருக்கவேண்டும் என்ற அவாவில் தான் அவர்கள் எங்காவது நலமாக இருக்கட்டும் என்று தான்
ஆனால் சிலர் இதன் மூலம் தலைவர் தலை காட்ட வேண்டும் அப்போது பிடித்துக்கொடுக்கலாம் என்பது போல் அல்லவா இவர்கள் அங்கலாய்க்கின்றார்கள்
சபேசன் நீங்களும் பச்சோந்தி ஆகி விட்டீர்கள்
யாராவது தலைவரைக் கண்டு பிடித்துக் கொடுங்கள் என்று உங்களிடம் கேட்டார்களா ????
நீங்கள் உண்மையில் தமிழர்களின் மேல் அக்கறை உடையரவரா ?? அல்லது புலிகளையும் தலைமையையும் நேசிப்பவரா என்றால் இல்லை என்று தான் அடித்து சொல்ல வேண்டும்
QUOTE
நெடுமாறன் போன்றவர்களிடம் தற்பொழுது இருப்பது நம்பிக்கைகள் மட்டுமே!
அது கூட உங்களிடம் கிடையாது
முதலில் பழநெடுமாறன் அய்யாவை பற்றி விமர்சிப்பதற்கு உங்களுக்கு தகுதி கிடையாது அவரைப் போன்ற தலைமயில் ஈழத்தில் பற்று உள்ளவர்கள் எங்களிலேயே கிடையாது
நீங்கள் பொறாமையில் எழுதுகின்றீர்கள் என்பது உங்கள் வரிகளில் தெரிகின்றது
தலைமையை நேசித்திருந்தால்
அவரை தூற்றி வந்த கட்டுரைகளுக்கு எதிர்த்து விவாதித்திருக்க வேண்டும் அப்படி ஒன்றும் நீங்கள் ஒரு வரி கூட எழுதவில்லை
அதை விடுவோம் நக்கீரன் இது வரைக்கும் தலைமையைத் தூற்றி எழுதவில்லை போற்றியே எழுதுகின்றது அது உங்களுக்கு எரிச்சலைத் தருகின்றதா ???
நீங்கள் உங்கள் ஆய்வுத்தொழிலை வைத்திருப்பதற்கு உங்கள் நண்பக ஊடக கூட்டங்களுக்கு விசுவாசமாக இருப்பதற்கு யாரையும் எதிர்த்து எழுதவில்லை
பரபரப்பு ரிசி முதற்கொண்டு புதினம் வரை விமர்சிக்கலாமே ??
உங்களுக்கு வருமானம் இல்லாத நக்கீரனையும் பழநெடுமாறனும் உங்களுக்கு துரோகிகள் மற்றவர்கள் எல்லாம் தமிழ்த்தேசிய வாதிகள்
இப்போதுள்ள தமிழர்களின் அரசியல் போராட்ட நகர்வுகளை ஆராய்ந்திருக்கலாம் நாடு கடந்த தமிழீழ தனி அரசு பற்றி அப்படி எதுவும் செய்யவில்லை
பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன.
புலம் பெயர் தமிழர்கள் சற்று ஒய்ந்த நேரத்தில் மீண்டும் நீங்கள் கிழறி விடுவது சந்தேகத்தை கிளப்புகின்றது
மக்களை அவர்களின் வழியிலேயே விடுங்கள் அவர்களே முடிவு எடுக்கட்டும்
நீங்கள் ஆய்வுகள் என்று சொல்லி முடமாக்கி முகாங்களுக்கும் முடக்க வேண்டாம் ???
பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன.
பழ நெடுமாறனையும் நக்கீரனையும் சபெசன் தாழ்த்தி ஒன்றை நிரூபிக்க முற்படுவதேன் ???
அவரிடம் என்ன ஆதாராம் இருக்கின்றது இல்லை என்று இவருக்கு எப்படித் தெரியும் ???
அவரது நகர்வுகளைக் கண்காணிக்கும் ரோவில் இவர் வேலை செய்கின்றாரா ???
படத்தை வைத்து ஆராய்வது வேறு இது என்ன ஆராச்சி ??
ஒருவர் எழுதுவதெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மந்தைகளா நாம் ???
நீங்கள் ஆய்வுகளை செய்துகொண்டிருங்கள்
இனி சுரக்காய்க்கு உப்பில்லை என்று ஒரு ஆய்வு எழுதாலாமே ???????????????
இது சபேசன் எப்படி ஆதாரபூர்வமாக ஆராயாமல் மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளை போல் யாரோ சொல்லிக் கொடுத்ததை சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்பதற்கு இப்படி எழுதுகின்றேன்
நான் எழுதுவது எப்படி விசமத்தனமாக இருக்கின்றதோ அதுபோலவே சபேசன் எழுதுவதும்,,,,,,,,,
Quote
தேசியத் தலைவர் இறந்து விட்டார் என்பதில் எந்த ஒரு மர்மமும் இல்லை. அவர் எப்படி இறந்தார் என்பதில்தான் நிறைய மர்மங்கள் இருக்கின்றன.
சபேசன் விலை போகிவிட்டார் என்பதில் எந்த ஒரு மர்மமும் இல்லை. அவர் எப்படி விலை போனார் என்பதில்தான் நிறைய மர்மங்கள் இருக்கின்றன.Quote
தலைவர் எப்படி இறந்தார் என்பதில் உள்ள மர்மங்களை அவர் உயிருடன் உள்ளார் என்ற வாதங்களுக்கு பலர் பயன்படுத்திகிறார்கள்.
சபேசன் எப்படி விலை போனார் என்பதில் உள்ள மர்மங்களை அவர் தேசியவாதியாக இருந்ததனால் வாதங்களுக்கு பலர் பயன்படுத்திகிறார்கள்.Quote
தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக வாதிடுபவர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்தும் இதற்குள் உட்பட்டதே.
சபேசன் தேசியவாதியாக இருப்பதாக வாதிடுபவர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்தும் இதற்குள் உட்பட்டதே.Quote
இல்லாத தலைவரை இருப்பதாக சொல்வதன் மூலம் அடுத்த கட்ட நகர்விற்கு பெரும் இடையூறை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்படுத்துகிறார்கள் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இருக்கின்ற தலைவரை இல்லை என்று சொல்வதன் மூலம் அடுத்த கட்ட நகர்விற்கு பெரும் இடையூறை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்படுத்துகிறார்கள் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.-----------------------
சரி இதை இவரை விடுவோம்
இதற்கு ஒரு வழிதான் இருக்கின்றது தலைவர் இருக்கின்றார் என்றால் அவர் நேரில் வந்தால் தீரும் அதே போல் இல்லை என்றால் அவரின் ஆவி வந்து சொன்னால் தான் தீரும் அது வரை இது யாராலும் தீர்க்க முடியாத மர்மாகவே இருக்கும்
அதற்குள் இந்த ஆய்வுத் தொல்லைகளை தருபவர்கள் நிறுத்தவேண்டும்
இதுவரை இந்த ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகள் ஏதாவது நடந்திருக்கின்றதா ???
புலம்பெயர் மக்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி இவர்கள் ஊனமாக்கி விட்டார்கள்
தமது சுயலாபங்களுக்காகவும் வரட்டுகவுர ஆய்வுக்காகவும் தாங்கள் எழுதியவை அனைத்தும் பொய்யான பின்னும் இவர்கள் ஆய்வு என்ற பெயரில் இன்னும் எங்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்
இப்போது தேசியத்தலைவரை வியாபாரப்பொருளாக்கி தமது ஆய்வை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள் இவர்களுக்கு உண்மையான ஈழபற்றிருந்தால் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்காமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருப்பார்கள்
தேசியத் தலைவர் பற்றிய ஆய்வு புலம்பெயர் மக்களிடையே ஓய்ந்திருக்கின்றது மீண்டும் இவற்றை கிளறிவிடுபவர்கள் தான் அடுத்த கட்ட நகர்வுக்கு பங்கம் விளைவிக்கிக்க முயலுகின்றார்கள்
தமிழர்களின் அடுத்தகட்ட நகர்வுக்கு நாடு கடந்த தமிழீழ தனி அரசுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் உங்கள் ஆக்கங்களை எழுதுங்கள்
நன்றி
இதற்கு மேலும் தொடர விரும்பவில்லை தொடரவிரும்புவர்கள் தொடருங்கள்
No Response to "யாழ் இணையத்தில் ஒரு ஆய்வுத் தொல்லையின் வாசகர்களின் கருத்துக்கள்"
Post a Comment