வன்னியில் பல்லாயிரக் கணக்கானோர் படுகொலை - பேராசிரியர் பியரே பியுடெற்

Posted on 6:19 PM by எல்லாளன்

வன்னியில் இறுதிக்கட்டப் போரில் தமிழ் மக்கள் பாரிய அளவில் இன அழிப்புச் செய்யப்பட்டுள்ளதாக, கனடா கியூபெக் மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் பியரே பியுடெற் தெரிவித்துள்ளார்.

உலக அரசியல், மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாடு என்பவற்றை ஒப்பிட்டு ஆய்வுப் பத்தி எழுதியுள்ள இவர், உலகில் இடம்பெறும் போர்களில், அனைத்துலகப் போரியல் விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை எனவும், ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு முரணான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

வன்னியில் இறுதிக்கப்பட்டப் போரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறும் இவர், வான்வழி வானூர்தித் தாக்குதலால் மட்டுமன்றி, கண்ணில் பட்ட மக்களை தரைப்படையினர் சுட்டுக் கொன்றதன் ஊடாகவும், இன அழிப்புச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கின்றார்.

கனடா கியூபெக் மாநிலத்தைச் சேர்ந்த சமூக அறிவியல் பேராசிரியரான பியரே பியுடெற், ஓல்ரனேரிவ்ஸ் (Alternatives) என்ற அரச சார்பற்ற மனித நேய அமைப்பின் நிறுவனராக இருப்பதுடன், அனைத்துலக ஒருங்கிணைந்த சமூக அமைப்பிலும் அங்கம் வகித்து வருகின்றார்.

No Response to "வன்னியில் பல்லாயிரக் கணக்கானோர் படுகொலை - பேராசிரியர் பியரே பியுடெற்"