கடும்பாதுகாப்பின் மத்தியில் முதலாவது கரும்புலித்தாக்குதல் இடம்பெற்ற நெல்லியடி மத்திய மகாவித்தியாலயப் பகுதியில் மலர் மாலைகள் வீசப்பட்டுள்ளன

Posted on 12:03 PM by எல்லாளன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகன் இன்று அனுஸ்டிக்கப்பட வேண்டிய நிலையில் முதல் தாக்குதல் இடம்பெற்ற நெல்லியடி மத்திய மகாவித்தியாலயப் பகுதியில் சர்ச்சைக்குரிய முறையில் இன்று இரவு பூமாலைகள் வீசப்பட்டுக் காணப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அப்பகுதியில் படையினரும் காவற்துறையினரும் குவிக்கப்பட்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் 1987 ஆம் ஆண்டின் யூலை 5ம் திகதி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயப் பகுதியில் இடம்பெற்றிருந்தது. கரும்புலி கப்டன் மில்லர் என்பவர் இத்தாக்குதலை நடத்தியிருந்தாh.; இதன் பிறகு விடுதலைப் புலிகள் ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தை கரும்புலி தினமாக கொண்டாடுவதும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலத்தில் பெருமெடுப்பில் இத்தினத்தில் நிகழ்வுகளை நடாத்துவதும் குறிப்பிடத்தக்கதாகும்

எனினும் சமாதான காலத்தின் போது விடுதலைப்புலிகளின் வெளியேற்றத்தை அடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கரும்புலி மில்லரின் சிலை முற்றாக இடித்து நொருக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் படையினரின் நெருக்குவாரத்தின் மத்தியிலும் அங்கு கரும்புலி தினத்தன்று ஏதாவது அசம்பாவிதம் இடம்பெறுவதே வழமையாகும். இந்த நிலையில் கடந்த ஆண்டும் குறித்த பகுதியில் மலர்மாலைகள் வீசப்பட்டிருந்தன. படையினரின் கண்காணிப்பையும் மீறி இவ்வாறு மலர்மாலை வீசப்பட்டமை படைத்தரபிபற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இன்றைய தினமும் குறித்த பகுதியைச் சுற்றி பெருமளவு படையினர் பகல் முழுவதும் பதுங்கி காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் படையினரின் காவலையும் மீறி கரும்புலித் தாக்குதல் இடம்பெற்ற இரவுவேளை குறித்த பகுதியில் மாலைகள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த சிலரே மாலைகளை வீசிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. படையினர் கண்மூடித் திறக்கும் முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லியடி வதிரி வீதியில் அமைந்திருக்கும் இந்தப் பாடசலைக்கு அண்மையில் வதிரிச் சந்தியிலும் நெல்லியடியிலும் படையினரின் முகாம்கள் அமைந்திருக்கும் நிலையில் எவ்வாறு இவர்கள் தப்பிச் சென்றார்கள் என்பது குறித்து படைத்தரப்பு விசாரணைகளை நடத்தி வருகின்றது

No Response to "கடும்பாதுகாப்பின் மத்தியில் முதலாவது கரும்புலித்தாக்குதல் இடம்பெற்ற நெல்லியடி மத்திய மகாவித்தியாலயப் பகுதியில் மலர் மாலைகள் வீசப்பட்டுள்ளன"