யேர்மனியில் சிறீலங்காத் தூதுவர் நியமனத்தை இரத்து செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

Posted on 9:54 PM by எல்லாளன்

யேர்மனியில் சிறீலங்காதுணைத் தூதராக பொறுப்பதிகாரியாக சிறீலங்கா இராணுவத்தளபதியாக நியமிக்கப்படுவதைக் கண்டித்து பிராங்போட் மற்றும் பெர்லின் நகரங்களில் தமிழ்மக்களால் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



நேற்று காலை 11.30 மணியளவில் பிராங்போட் நகரில் ஆரம்பமான கண்டன பேரணியில் தமிழ் இனப்படுகொலைகளுக்கு காரணமாக இருந்த 57வது படையணியின் தளபதி மனிதஉரிமைகளுக்கு மதிப்பளிக்கும் யேர்மனிய நாட்டில் சிறீலங்கா தூதுவாரக பணியாற்ற தகுதி அற்றவர் என்றும் இராணுத்தளபதியாக இருந்த காலத்தில் அவர் மேற்கொண்ட இனப்படுகொலைகளின் விபரங்கள் அடங்கிய பாதாதைகள் தமிழ்மக்களால் எடுத்துச்செல்லப்பட்டதுடன் அவற்றை விளக்கும் யேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுரங்களும் யேர்மனிய மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.


அத்துடன் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி பிராங்போட்டில் உள்ள பிரித்தானிய மற்றும் அமெரிக்க தூதரகங்களிடம் மகஐர்களும் தமிழ்மக்களால் கையளிக்கப்பட்டன.

இதே வேளை பேர்லின் நகரில் பேர்லின் மாநகரில் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட சிறிலங்கா படைத்தளபதிகளுள் ஒருவரான ஜென்ரல் மேஜர் ஜெகத் டயஸ் யேர்மனியில் சிறிலங்காத் துணைத் தூதரகத்தின் பிரதித் தூதுவராக நியமனம் பெறுவதைக் கண்டித்தும், முகாம்களில் பெரும் அவலத்தை சந்தித்துக்கொண்டிருக்கும் 3 இலட்சம் மக்களை விடுவிக்கக்கோரியும், அவர்களை சொந்த இடங்களில் குடியேற்ற வலியுறுத்தியும் யேர்மனிய வெளிவிவகார அமைச்சுக்கு முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யேர்மனிய அரசாங்கம் மௌனத்தை கடைப்பிடித்தது போதும்!

ஓர் போர் குற்றவாளிக்கு உன்னுடைய மௌனம் மூலம் ஒத்துளைப்பு வழங்காதே!

இவ்வாறான கோசங்கள் அங்கே கூடியிருந்த தமிழ் மக்களால் எழுப்பப்பட்டதுடன் தமிழ் இளையோர்களால் ஓர் மனுவும் கொடுக்கப்பட்டது.

No Response to "யேர்மனியில் சிறீலங்காத் தூதுவர் நியமனத்தை இரத்து செய்யுமாறு ஆர்ப்பாட்டம்"