வணங்கா மண் கப்பல் மூலம் பணம் கொள்ளையிட நினைக்கும் இலங்கை அரசு

Posted on 9:47 AM by எல்லாளன்


சமீபத்தில் கொழும்புத் துறைமுகத்தை சென்றடைந்த கொலராடோ என்றழைக்கப்படும் கப்பலில் வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் கண்டெய்னர்களில் இருந்தது. சுங்கத் திணைக்களத்தின் சோதனையின் பின்னர் அவற்றை அனுமதிப்பதாகக் கூறிய இலங்கை அரசு தற்போது சுங்க வரியாகவும் ஏனைய செலவுகள் என சுமார் 60,000 அமெரிக்க டாலர்களை கோரியுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பொருட்களை எடுத்துச் செல்ல இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஒப்புக்கொண்டபோதும், இறுதி நேரத்தில் 20,000 அமெரிக்க டாலர்களை செலுத்தப்பட்டவேண்டி இருந்தது.

தற்போது மேலதிகமாக 60,000 அமெரிக்க டாலர்களை இலங்கை அரசு கோரியுள்ளமையானது, பெருந்தொகையான பணத்தை கொள்ளையிட அரசு முயற்ச்சிப்பதையே காட்டி நிற்கிறது. சமீபத்தில் இலங்கையில் செயல்படும் அனைத்துத் தன்னார்வு தொண்டு நிறுவனங்களிடம் இருந்து 0.9% வரி அறவிடப்படும் என அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No Response to "வணங்கா மண் கப்பல் மூலம் பணம் கொள்ளையிட நினைக்கும் இலங்கை அரசு"