இலங்கை செல்ல அகதிகளுக்கு நெருக்கடி!

Posted on 1:00 PM by எல்லாளன்



லன்புரிமையங்கள் என்ற பெயரில் வதை முகாம்களை உருவாக்கி 3 லட்சம் ஈழத்தமிழர்களைத்திறந்தவெளி சிறையில் அடைத்திருக்கிறது இலங்கை அரசு. தங்கள் எதிர்காலம்என்ன என் பதை உணரமுடியாமல் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும்சித்திரவதைக்குள்ளாகி யிருக்கிறார்கள் ஈழத்தில் உள்ள தமிழர்கள். எப்போதுவெளியே வருவோம் எனத் தெரியாமல் அவர்கள் தவித்துக்கொண் டிருக்க,தமிழகத்தில் உள்ள அகதிமுகாம் களில் இருக்கும் ஈழத்தமிழர்களோ, தங்களைமீண்டும் இலங்கைக்கு அனுப்பிவிடுவார்களோ என்ற பதற்றத்தில் உள்ளனர்.

போர்முடிந்துவிட்டதால் மற்ற நாடுகளில் உள்ள தமிழர்களை இலங் கைக்குக் கொண்டு வரமுயற்சி செய்வோம் என்று ராஜபக்சே அரசாங்கம் தெரிவித் திருப்பதுதான் இந்தபதற்றத்திற்கு காரணம். தமிழக அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் தங்கள்தாய்மண்ணுக்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், ஈழத்தந்தை செல்வாவின் மகனும் அகதிகள் நலனுக்காகஆஃபர் என்ற அமைப்பை நடத்துபவருமான சந்திர ஹாசன் திருச்சி, புதுக்கோட்டைமற்றும் சில மாவட்டங்களில் உள்ள அகதி முகாம் களுக்கு ஜூன் 19, 20தேதிகளில் சென்றார். வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படாத இந்தமுகாம்களுக்கு க்யூ பிரிவு போலீ சாரின் பாதுகாப்புடன் சென்ற சந்திர ஹாசன்,அங்குள்ள ஈழத்தமிழர்களின் மனநிலை என்ன என்பதை கேட்டுக் கொண்டதுடன், "நாடுதிரும்ப விரும்பு கிறீர்களா?' என்றும் கேட்டிருக்கிறார்.

அவர்விசிட் செய்த சில முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் நம்மிடம் விரிவாகப்பேசினர். ""ஆஃபர் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள், முகாம்களில் உள்ளமுக்கியமான ஆட்கள் உள்ளிட்டவர்களோடு ஆலோசனை நடத்தியபிறகுதான் சந்திரஹாசன்எங்களை சந்திக்க வந்தார். இங்கே எங்களுக்கு வசதிகள் எப்படி இருக்குன்னுகேட்டார். என்னத்தைச் சொல்றது. கக்கூசுகூட ஒழுங்கா இல்லைங் கிறதைச்சொன்னோம். நாங்க தங்க வைக்கப்பட்டிருக்கிற முகாம்களின் நிலைமையையும்சொன்னோம். அதோடு, எங்களை ஈழத்துக்குத் திரும்பச் சொல்லி கியூ பிராஞ்ச்அதிகாரிகள் டார்ச்சர் பண்ணுறதையும் சொன்னோம்.

எல்லாவற்றையும்பொறுமையா கேட்டுக்கிட்ட சந்திரஹாசன், இலங்கையில் உள்ள முகாம்களில்இருப்பவங்களுக்கே ஒழுங்கான வசதிகள் இல்லை. அவங்களுக்கான பாதுகாப்பைஏற்பாடு பண்ணிட்டு அப்புறமா உங்களை பாதுகாப்பா கூட்டிட்டுப் போறேன்.ஒன்றரை வருடத்துக்குள்ளே இது நடக்கும்னு நினைக்கிறேன். சுயநிர்ணயஉரிமைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துக்கிட்டா பயமில்லாமப் போகலாம்னுசொன்னாரு. அதோடு, எங்க எல்லோரையும் சென்னையில இருக்கிற இலங்கை பேங்க்குலகணக்கு தொடங்க ஏற்பாடு பண்ணச் சொன்னாரு'' என்றனர்.

சந்திரஹாசன்விசிட் குறித்து ஈழத்தமிழர்களிடம் பலவிதமான கருத்துகள் எதிரொலிக்கின்றன.யாரையும் பகைத்துக் கொள்ளாமல் சுமுக உறவை விரும்புபவரான சந்திரஹாசனுக்குஇந்திய உளவுத் துறையான ரா அமைப்புடன் தொடர்பு உண்டு என்றும், அகதிமுகாம்களுக்கு வருவதற்கு முன்பாக, ரா ஏற்பாட்டில் இலங்கை அமைச்சர் டக்ளஸ்தேவா னந்தாவை சந்தித்துவிட்டுத்தான் வந்திருக் கிறார் என்றும் சொல்லும்முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் சிலர், ""மே 25, 26 தேதிகளில் இந்தியஅதிகாரிகள் எங்ககிட்டே வந்து, போர்தான் முடிஞ்சிடிச்சில்ல. நீங்க உங்கநாட்டுக்குப் போங்கன்னு சொன்னாங்க. நாங்க மறுத்தப்ப, கண்டிப்பா போய்த்தான்ஆகணும்னு வற்புறுத்துனாங்க. நாங்க உறுதியா மறுத்துட்டோம். அதனாலதான் இப்பசந்திரஹாசனை வச்சு எங்களை கிளப்பப் பார்க்குறாங்க. இங்கே கஞ்சியோ கூழோகுடிச்சிக்கிட்டு ஓரளவு கௌரவமா இருக்கோம். இதுவும் இருக்கக்கூடாதுன்னுஅதிகாரிகள் நினைக் கிறாங்கபோல'' என்கிறார்கள் வேதனை யுடன்.

அகதிகள்நலனுக்கான ஆஃபர் அமைப்பினரோ, ""முகாம்களில் உள்ள மக்களின் அடிப்படைத்தேவைகள் என்ன, தாயகம் திரும்ப விரும்புகிறார்களான்னு பார்க்கத்தான்சந்திரஹாசன் வந்தார். பல வருடங்களுக்குப் பிறகு சந்தித் திருக்கிறார்.இப்ப உள்ள நிலைமையில் அங்கு போனால் எந்த உரிமைகளும் கிடைக்காது. அதனால,இலங்கை அரசோடு இந்திய அரசு ஒரு ஒப்பந்தம் போட்டு, அதை அமல்படுத்தணும்ங்கிறதுக்கான ஏற்பாடுகளை செஞ்சிக்கிட்டிருக்கிறார்'' என் றார்கள்.

எனினும்,அகதி முகாம் களில் இருப்பவர்கள் இலங்கை வங்கியில் கணக்கு தொடங்கினால் அதைவைத்து அவர்களுக்கு இலங்கையில் வாக்குரிமையைப் பெற்று, அதன் மூலமாக வடக்குபகுதியின் அரசப் பிரதிநிதியாக சந்திரஹாசன் திட்டமிட்டிருக்கிறார் என்றும்தகவல்கள் உலவத் தொடங்கியுள்ளன.

தமிழகஅகதி முகாம்களை பார்வையிட்டுவிட்டு சென்னை திரும்பிய சந்திரஹாசனிடம்பேசினோம். ""இங்குள்ள முகாம்களில் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு வகையில்இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இலங் கைக்குத்திரும்புவது பற்றி தயக்கம் உள்ளது. இலங்கை நிலவரம் குறித்து அவர்களிடம்மிகைப்படுத்திச் சொல்லப் பட்டுள்ளது. அங்கே உரிய அரசியல் தீர்வுகண்டபிறகுதான் இங்குள்ளவர்களை அனுப்புவது பற்றி முடிவெடுக்கப்படும்.இந்திய மத்திய அரசு ஒரு வாக்குறுதியை இலங்கை அரசிடம் பெற்றிருக்கிறது.

6மாதங்களுக்குள்ளாக ஈழத்தமிழர்களை பழையபடி சுதந்திரமாகக் குடியேற்றவேண்டும்என்ற வாக்குறுதியை பெற்றபிறகுதான் ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவான நிலையைஇந்தியா மேற்கொண்டது. இது தெரி யாதவர்கள்தான் இந்திய அரசைக் குறைகூறுகிறார்கள். கம்பி வேலிக்குள் சுதந்திரமின்றி இருக்கும் இலங்கை அகதிமுகாமில் உள்ள தமிழர்களை வெள்ளாமை காலம் முடிவதற்குள் அவர்கள் நிலத்தில்குடியமர்த்த வேண்டும்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் "நாடுகடந்த தமிழீழம்' சாத்தியமானதாகத் தெரியவில்லை.அரசியல் தீர்வுதான் முக்கியமானது. நாங்கள் அரசில் பங்கு பெறாமல் மாந்த நேயபணிகளைச் செய்கிறோம். இனியும் அவ்வாறே செய்வோம். இலங்கை அரசே சொன்னாலும்அரச பதவிகளை ஏற்கமாட் டோம். அனைத்து பிரமுகர்களையும் வாய்ப்பினைப்பொறுத்து சந்திக்கிறோம். டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்க வாய்ப்புகிடைக்கவில்லை. சம்பந்தனை சந்தித்தேன். ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளுக்குவிடிவு விரைவில் கிடைக்கும்'' என்றார் சந்திரஹாசன்.

-பகத்சிங்

No Response to "இலங்கை செல்ல அகதிகளுக்கு நெருக்கடி!"