தமிழருவி மணியன் இன்று புதிய இயக்கம் தொடங்குகிறார்

| |

இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து பெப்ரவரி மாத இறுதிப்பகுதியில் விலகியவரும் ஈழத் தமிழர்களின் ஆதரவாளருமான 'தமிழருவி' மணியன் புதிய இயக்கம் தொடங்கவுள்ளார்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள ஜெமினி மேம்பாலம் அருகில் அமைந்திருக்கும் பிலிம் சேம்பர் அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு 'காந்திய அரசியல் இயக்கம்' எனும் புதிய இயக்கத்தின் தொடக்க விழா நடைபெறவுள்ளது.

சமூக ஆர்வலர் மதுரை ஏ.போஸ் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் இறைமுதல்வன் வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கணுக்கு இயக்கத்தினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற, சட்டவாளர் அருள்மொழி வாழ்த்துரை வழங்கவுள்ளார்.

இயக்கம் குறித்த விளக்கவுரையினை 'தமிழருவி' மணியன் வழங்க, நன்றி உரையினை துறையூர் கணேசன் வழங்கவுள்ளார்.

நாட்டு நலனில் நாட்டம் உள்ளவர்களே வருக! வருக! என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

புதிய இயக்கம் தொடங்குவது தொடர்பாக தமிழருவி மணியன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் "இது அரசியல் இயக்கம் அல்ல, எங்கள் இயக்கத்தின் கொடி வெள்ளை நிறத்தில் இருக்கும். அக்கொடியில் காவி வண்ணத்தில் வட்டமும், கைராட்டினமும் இருக்கும்" என்றார்.

Posted by எல்லாளன் on 8:20 PM. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response