தமிழ்நாடு, இராசபாளயத்தில் தமிழ் தமிழர் இயக்கத்தினரின் மாவீரர்நாள்

| |

தமிழ் நாடு இராசபாளயத்தில் தமிழ் தமிழர் இயக்கத்தினர் மாவீரர்நாளை உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழீழத்தில் இம்முறை மாவீரர் நாளை நினைவுகூர முடியாவிட்டாலும், அதற்கீடாக தமிழர் வாழுமிடமெங்கும் நிகழ்த்தப்பெற்று, ஆக்கிரமிப்பாளர்களுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், உலகின் பல மூலைகளிலும் பரந்து வாழும் தமிழர்களும் தக்க பதிலை தெரிவித்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரர்நாள் இனிவரும் காலங்களில் தமிழர்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதுடன், தமிழர்களுக்கு போராடும் ஆத்மபலத்தையும் இம்முறை மாவீரர் நாள் கொடுத்துள்ளது என தமிழகத்தின் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மாவீரர்நாளை முதல்வர் அவர்கள் கருத்தில் கொண்டு, மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தமிழர் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திரு.பொன்.இளங்கோவன் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


























Posted by எல்லாளன் on 11:07 AM. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response