புலி முத்திரை குத்தப்படுகையில் வன்னி மக்கள் எவ்வாறு அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவது? - மனோ கணேசன் எம்.பி. கேள்வி

வன்னியிலுள்ள மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுகின்ற அதேவேளை, அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய அங்குள்ள மக்களை புலிகள், என முத்திரை குத்துகிறது. எனவே, வன்னியிலுள்ள மக்கள் எவ்வாறு அரசாங்கத்தின் பாதுகாப்பு வலயங்களுக்குள் வருவார்கள்?

என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.
தமிழ் அரசியல் தலைமைகளுக்கும், மக்களுக்கும் உபதேசம் செய்யும் சர்வதேசம் தமிழ் மக்களை கொன்று குவிப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

இத தொடர்பாக மனோ கணேசன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில், உலகுக்கே அஹிம்சையை போதித்த கௌதம புத்தரின் பெயரால் வெட்கமில்லாமல் கட்சி நடத்தும் இனவாத அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவை தம்முடன் இணைத்துக் கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைப்பார்களென்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதை விடுத்து தமிழ்த் தøலமைகளுக்கும் மக்களுக்கும் சர்வதேச சமூகம் உபதேசம் செய்து கொண்டிருப்பதால் தமிழர் இனச் சுத்திகரிப்பை தடுக்க முடியாது. அரசாங்கத்தின் அறிக்கைகளையும் செய்திகளையும் வரவேற்கும் சர்வதேசம், உண்மைகளை தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டாமை கவலையளிக்கிறது.

அரச பாதுகாப்பு வலயங்களுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதனை நம்பி தமிழ் மக்கள் எவ்வாறு வருவார்கள்?

அரசாங்கத்துடன் இணைந்துள்ள அரசியல் கட்சி வன்னி மக்களை புலிகளென்று முத்திரை குத்துவதன் மூலம் அம் மக்களை கொலை செய்வதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.



| | Read More »

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி சிறுபான்மை இனத்தின் வீழ்ச்சி: மனோ கணேசன்

விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடைந்தால் அது தமிழர்களின் அரசியல் உரிமைகளுடன் வீழச்சியடைந்தமைக்குச் சமனாக அமையும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறினார்.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியானது ஒட்டுமொத்தத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மாத்திரமன்றி, அனைத்து சிறுபான்மை இனத்தினதும் வீழ்ச்சியாக அமைந்துவிடும் என கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் மனோ கணேசன் தெரிவித்தார்.

“இதுதான் நடைமுறை. சிங்கள, பௌத்தவாதிகள் சிறுபான்மை இனத்தவரை தோற்கடிக்க வேண்டமென ஏற்கனவே கூறி வருகின்றனர். தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள, பௌத்தவாதிகள் அனைத்து இலங்கையும் தமக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டுமென விரும்புகின்றனர்” என அவர் குறிப்பிட்டார்.

மோதல்களை நிறுத்திப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த மனோ கணேசன், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்டபோதும், தற்பொழுது தமிழர்களின் அபிலாசைகளை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.

“தற்பொழுது நடைபெறுவது அரசியல் மோதல். எதிரிகளை களத்தில் தோற்கடிப்பதற்கு இராணுவ நடவடிக்கை உதவும். ஆனால், இதன்மூலம் அரசியல் எதிரிகளை ஒழிக்கமுடியாது” என மனோ கணேசன் தனது செவ்வியில் குறிப்பிட்டார்.

அதேநேரம், விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தால் தமிழர்களின் அபிலாசைகள் பூர்த்தியாக்கப்பட்டுவிடுமென புதுடில்லியுள்ள சிலர் கருதுவதாக அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, வன்னிப் பகுதியில் நடைபெறும் மோதல்களில் சிக்குண்டிருக்கும் மக்களைப் பாதுகாப்பது விடுதலைப் புலிகளினதும், இலங்கை அரசாங்கத்தினதும் கடமையெனக் குறிப்பிட்ட மனோ கணேசன், பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற இரு தரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கைவிடுத்தார்.



| | Read More »

ஈழத்துத் தமிழ் பெண்ணுக்கு ஆஸ்கார் விருது பரிந்துரை:ஸ்லம்டாக் மில்லியனர்

சமீபத்தில் வெளியாகி ஆஸ்கார் வரை சென்றுள்ள திரைப்படமான "ஸ்லம்டாக் மில்லியனர்" (Slumdog Millionaire) திரைப்படத்தில் வரும் 'ஓ சயா' என்ற பாடலை எழுதி பாடியவர் மாயா.

இவருக்கு ஆஸ்கார் விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் தமிழனின் வேதனை உணர்த்த தக்க சமயத்தில் மாயா என்ற தமிழ் பாடகிக்கு ஆஸ்கார் மற்றும் மிகவும் உயர்ந்த பாடகர் விருதான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் வ‌சிக்கும் ஈழ‌த்து த‌மிழ்பெண் ‘மாயா’ மாத‌ங்கி அருள்பிர‌காச‌ம் இவ‌ர் இங்கிலாந்தில் புக‌ழ் பெற்ற‌ பாட‌ல் ஆசிரிய‌ர், ராப் பாட‌க‌ர். த‌மிழ் ஈழ‌த்தில் 17 ஜுலை 1977-ல் க‌லா ம‌ற்றும் அருட்பிர‌காச‌ம் த‌ம்ப‌தியின‌ருக்கு பிற‌ந்த‌வ‌ர். இவ‌ர‌து த‌ந்தை அருட்பிர‌காச‌ம் தீவிர‌ ஈழ ஆத‌ர‌வாள‌ர் ம‌ற்றும் அப்போதையை த‌மிழ் ஈழ‌ மீட்பு போர்ப்ப‌டை (த‌ற்போது த.ஈ.வி.புலிக‌ள்) ப‌ணியாற்றிய‌வ‌ர். முத‌லாம் உள்நாட்டு போரில் சிங்க‌ளப்‌ப‌டைக‌ள் த‌மிழ‌ர்க‌ளை குடும்ப‌ம் குடும்ப‌மான‌ கொலை செய்த‌போது த‌ன‌து தாயுட‌ன உயிர் பிழைத்து சென்னைக்கு வ‌ந்தார். சென்னையில் த‌ங்கிருந்த‌ இவ‌ர் சில‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து மீண்டும் த‌ன‌து த‌ந்தையைக் காண‌ யாழ்ப்பாண‌ம் சென்றார்.

அங்கு த‌ன‌து வீடு ம‌ற்றும் ப‌டித்த‌ ப‌ள்ளிக்கூட‌ம் முழுவ‌தும் இல‌ங்கை இராணுவ‌த்தின‌ரால் சூரையாட‌ப்ப‌ட்டுகொண்டிருந்த‌து. அவ‌ர‌து த‌ந்தையும் இல‌ங்கை இராணுவ‌த்துட‌ன் போராடிக்கொண்டிருந்த‌ கார‌ண‌த்தால் இராணுவ‌ம் இவ‌ரையும் இவ‌ர‌து தாய் ம‌ற்றும் இவ‌ர‌து இர‌ண்டு ச‌கோத‌ர‌ர்க‌ளையும் தேடிக்கொண்டிருந்த‌து. உயிருக்கு ப‌ய‌ந்து மீண்டும் த‌மிழ‌க‌ம் வ‌ந்த‌ இவ‌ர்க‌ள் உற‌வின‌ர் இருவ‌ரின் ஆத‌ர‌வால் ல‌ண்ட‌ன் நோக்கி ப‌ய‌ண‌ம் ஆனார்கள்.

மாயாவிற்கு வ‌ய‌து 11 ல‌ண்ட‌னில் அக‌தியாக‌ த‌ன‌து வாழ்க்கையை துவ‌ங்கிய‌வ‌ர். ல‌ண்ட‌னில் உள்ள‌ சென்ட்ர‌ல் செயிண்ட் மார்சியல் ஆர்ட் அகேடமியில் த‌ன‌து க‌லைப் ப‌ட்டப்‌ப‌டிப்பை முடித்தார். ப‌ட்டப்‌ப‌டிப்பு முடிந்ததும் இவ‌ர் த‌னி இசைப்பாட‌ல்க‌ள் இய‌ற்றுவ‌தும் தானாக‌வே ஆல்ப‌ங்க‌ள் த‌யாரிக்கும் ப‌ணியில் ஈடுப‌ட்டார். இவ‌ர‌து பாட‌ல்க‌ள் இங்கிலாந்து ம‌ட்டுமின்றி அமெரிக்க‌ நாடுக‌ளிலும் பிர‌ப‌ல‌மான‌து. த‌னி இசை ஆல்ப‌ம் இங்கிலாந்தில் மிக‌வும் பிர‌ப‌ல‌மான‌து. 2005-ஆம் ஆண்டில் ‘ஆல்ப‌ம் ஆப் த‌ இய‌ர்’ என்ற‌ விருதை பெற்றுத்த‌ந்த‌து. இந்த‌ வ‌ருட‌ம் பேப்ப‌ர் ப்ளேன்ஸ் (Paper Planes-2008), சகா லைக் அஸ் என்ற‌ இர‌ண்டு ஆல்ப‌ங்க‌ளுக்கு மிக‌ உய‌ரிய‌ விருதான‌ கிராமிவிருது இவ‌ருக்கு ப‌ரிந்துரை செய்ய‌ப‌ட்டுள்ள‌து.

மேலும் ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்தில் வரும் 'ஓ சயா' "O' Saya"(இந்த பாடலை எழுதி பாடியவர் இந்த ஈழத்தமிழ் பெண்) என்ற பாட‌லுக்காக‌ இவ‌ருக்கு ஆஸ்கார் விருதுக்கு ப‌ரிந்துரை செய்ய‌ப‌ட்டுள்ள‌து. இவரை அறிமுகம் செய்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்தது இல்லை. ஆனால் ரஹ்மானுடைய ஸ்டுடியோவில் பல முறை மாயா தனது ஆல்பத்திற்கான பாடல் பதிவுகளைச் செய்திருக்கிறார். இவ்வாறு அறிமுகம் ஆன மாயா ஸ்லம்டாக் மில்லியனர் மூலமாக பாலிவுட் படத்திற்கு அறிமுகம் ஆனவர். இதில் ரஹ்மான், மாயா இருவருமே தமிழர்கள் என்பது சிறப்பம்சம்.

இவ‌ரிட‌ம் ச‌மீப‌த்தில் இல‌ங்கையில் த‌ற்போது ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ளை ப‌ற்றி பேட்டி க‌ண்ட‌ போது "இல‌ங்கையில் த‌ற்போது ந‌டைபெறுவ‌து போராளிக‌ளை அழிப்ப‌த‌தாக‌ கூறிக்கொண்டு அங்கிருக்கும் த‌மிழ‌ர்க‌ளை குடும்ப‌ம் குடும்ப‌மாக‌ அழிக்கும் செய‌லில்தான் இற‌ங்கி வ‌ருகிற‌து இல‌ங்கை ராணுவ‌ம், இல‌ங்கையில் இருந்து முற்றிலுமாக‌ த‌மிழ‌ர்க‌ளை அழிக்கும் இன‌ அழிப்பிற்காக‌த்தான் த‌ற்போது அப்பாவி ம‌க்க‌ள் மீது குண்டு ம‌ழை பொழிந்து வ‌ருகிற‌து. இத‌ற்கு பிற‌ நாடுக‌ளும் உத‌வி வ‌ருகிற‌து.

இல‌ங்கை அர‌சு விடுத‌லைப்புலிக‌ள் என்றாலே இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ள் என்ற‌ மாயை உல‌கெங்கும் ஆக்கிவிட்ட‌து. அத‌னால் ப‌ல‌ நாடுக‌ள் உண்மை தெரியாம‌ல் இருக்கிற‌து. இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளை அழித்துவிட்டு சிங்க‌ள‌ர்வ‌ர்க‌ளை குடிய‌ம‌ர்த்தும் ப‌ணியில் மிக‌வும் ந‌ரித்த‌ன‌மாக‌ ந‌ட‌ந்து உல‌க‌ நாடுக‌ளை ந‌ம்ப‌வைத்துள்ள‌து. இந்திய‌ அர‌சும் சில‌ கார‌ண‌ங்க‌ளால் இல‌ங்கைக்கு த‌ன‌து முழு ஆத‌ர‌வை த‌ந்து வ‌ருகிறது. மேலும் த‌மிழ‌க‌த்தில் உள்ள‌ சில‌ பிரிவு மக்க‌ளிடையே மூளைச்ச‌ல‌வை செய்து ஈழ‌த்தில் ந‌ட‌க்கும் அனைத்து செய‌ல்க‌ளுக்கு புலிக‌ளே கார‌ணம் என்ப‌து போல் காண்பித்துவ‌ருகிற‌து. உண்மையில் இல‌ங்கையில் ந‌ட‌ப்ப‌து பார‌ம்ப‌ரிய‌மும் பூர்வ‌ குடிக‌ளான‌ த‌மிழ‌ர்க‌ளை அழிக்கும் தீவிர ‌ந‌ட‌வ‌டிக்கையில் இற‌ங்கி வ‌ருகிற‌தே அன்றி இல‌ங்கையில் த‌மிழ‌ருக்கு என்று சுயாட்சி ம‌ற்றும் ச‌லுகை போன்ற‌ அறிவிப்பு எல்லாம் இல‌ங்கை அர‌சு உல‌கை ஏமாற்ற‌ போடும் வேச‌ம்” என்று கூறினார்.

இந்த‌ வ‌ருட‌ம் த‌மிழ‌ர்க‌ளின் உரிமைக்குர‌லை உல‌க‌நாடுக‌ளுக்கு கொண்டு செல்லும் இவ‌ர‌து இந்தப் பேட்டி பெரிய படிப்பினை. மேலும் உல‌க‌ம் முழுவ‌தும் உள்ள‌ இந்த‌ த‌லைமுறை த‌மிழ‌ர்க‌ளுக்கு இல‌ங்கையில் ந‌ட‌க்கும் உண்மைக‌ளை வெளிக்கொண்டுவ‌ருவ‌தாக‌வும் இவ‌ர‌து பேட்டி அமைந்துள்ள‌து.

இசையின் மூல‌ம் த‌மிழ‌ர்க‌ளின் உண‌ர்வுக‌ளை வெளிக்கொண்டுவ‌ந்த‌ ‘மாயா’ என்ற‌ மாத‌ங்கி அருள்பிர‌காச‌த்திற்கு அதிகாலை வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

M.I.A பிரபல தமிழ்பொப் பாடகி சிறிலங்காவின் இனப்படுக...
மாயா (MIA) பாடல் கிரம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது



| | Read More »

முத்துக்குமார் மரணமும் -சில …லாம்களும் சில வேண்டும்களும்!

அரசும் சட்டமும் தத்தமது கடமைகளைச் செய்யத் தொடங்கியுள்ளன…

தமிழகம் கொதித்தெழுந்திருக்கிறது..!

முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்திற்குப் பிறகு, ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாய இளையத் தலைமுறையும் வெகுண்டெழுந்துள்ளது.

அரசியல் நோக்கத்தை மறந்து… இலங்கையிலுள்ள தொப்புள் கொடி உறவுகளின் உயிரைக் காத்திட பல தலைவர்களையும் ஒன்றினைத்துள்ளது, முத்துக்குமாரின் தீம்பிழம்பு!

இவ்வேளையில், மாநில அரசும் சட்டமும் தத்தமது கடமையைச் செய்ய முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

மறு உத்தரவு வரும் வரை கல்லூரிகள், விடுதிகள் மூடப்பட்டுள்ளன; பிப்ரவரி 4 முழு அடைப்புக்கு அரசின் எச்சரிக்கை…. தொடர்கிறது கடமைகள்!

சில ……லாம்கள்!

* முத்துக்குமார் மூட்டிய தீ… போராட்டமாக மாநிலம் முழுவதும் மேலும் பரவாமல் இருக்க தடுக்கப்படலாம்.

* இலங்கைத் தமிழருக்கான போராட்டத்தின் வீரியத்தை இருட்டடிப்புச் செய்யுமாறு ஊடகங்களின் ஓனர்களிடம் கேட்டுக்கொள்ளப்படலாம்.

* ஊடகங்களின் ஓனர்கள் சிலரும் தங்களது எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஒப்புக்கொள்ளலாம்!

* கொதிப்புடன் உண்மையை எடுத்துச் செல்லும் ஊடகவியலாளர்களின் பேனாக்களும், கீ போர்டுகளும் முடக்கப்படலாம்!

* ‘அமைதிப்படை’ பாணியில் வேறு பிரச்னைகள் உருவாக்கப்பட்டு, இப்போதைய முழுமுதற் பிரச்னையின் வீரியம் குறைக்கப்படலாம்!

சில ……வேண்டும்கள்!

* முத்துக்குமார் மூட்டிய தீயை பாதகமற்ற நிலையில் ஏந்திச் செல்ல வேண்டும்.

* முத்துக்குமாரின் நோக்கத்தை நிறைவேற்ற முனைப்புடன் செயல்பட வேண்டும்.

* இந்தியச் சுதந்திரத்துக்காக இளைஞர்கள் மத்தியில் புரட்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகவே பகத்சிங் உயிரை துச்சமாக மதித்து, தப்பிக்காமல் அதைப் போக்கிக் கொள்ள முனைந்தாரே தவிர, அவரைப் போலவே இளைய சமுதாயம் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அதுபோலவே, இலங்கைத் தமிழருக்காக தமிழக இளைஞர்களிடம் இருந்து புரட்சி வெடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே முத்துக்குமார் தன்னை மாய்த்துக் கொண்டார் என்பதை உணர்ந்து ஆரோக்கியமான முறைகளில் செயல்பட வேண்டும்.

* ஆங்காங்கே சிதறிச் செயல்படுவது பலமல்ல; ஒன்றிணைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

* இயன்றவரையில், தனித்து இயங்காமல் நல்லதொரு வழிகாட்டுதலை நாடவேண்டும்.

* அரசியல் ஆதாயங்களைக் கழட்டிப் போட்டுவிட்டு (தற்காலிகமாக என்றாலும் ஏற்றுக் கொள்ளலாம்) ஒன்றிணையும் தலைவர்களின் வழிநடத்தலைப் பின்பற்ற வேண்டும்.

* உணர்வுகள் தூண்டப்பட்டாலும், சிலிர்த்தெழாமல் செயல்பட வேண்டும்.

* வன்முறைகளில் ஈடுபட்டு பலவீனமடையாமல் செயல்பட வேண்டும்.

* மொத்தத்தில், இன்றைய காலக்கட்டத்திலும் அறப்போராட்டத்துக்கு வல்லமை உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும்

தமிழ்ஸ்கை



| | Read More »

கிழட்டு நரிக்கேன் இந்த கிறுக்குத்தனம் , கலைஞரே யார் நீர் ?

திருத்த முடியாத தி.மு.கவின் போக்கு

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சிக்குண்டு, யுத்தப் பேரழிவை எதிர்கொண்டு, அவலப்படும் பல லட்சம் சிவிலியன்கள் தொடர்பான விடயத்தில் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்திருக்கும் உணர்வெழுச்சியை மழுங்கடிக்கும் விதத்தில் தமிழகத்தின் ஆளும் தி.மு.க. அரசு நடந்து கொள்வது உலகம் வாழ் தமிழர்களைப் பெரும் வேதனைக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், வேதனைகளையும் பொறுக்க இயலாது தாங்க முடியாது முத்துக்குமரன் என்ற இளைஞன் தனக்குத் தானே தீ மூட்டி, நெருப்பில் வெந்து செத்திருக்கிறான்.

கவிஞர் புதுவை இரத்தினதுரை குறிப்பிடுகின்றமை போல முத்துக்குமரன் எரிந்தவன் அல்லன். விரிந்தவன். அவன் ஈழத் தமிழர் குறித்து தன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தான். அந்த சோதிப் பெரு வெளிச்சம் ஈழத் தமிழருக்கு நிச்சயம் சக்தி தரும். நெருப்பில் எரியும் தேசத்தை எண்ணி நெருப்பில் எரிந்தவன் அவன்.

அக்கினியில் வெந்து தன்னுயிரைத் தியாகம் செய்ய முன்னர் தான் எழுதிய கடித வடிவ அறிக்கையிலே ஈழத் தமிழர்களின் இன்றைய அவல நிலையைப் போக்கு வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் வரிசையிலே தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி யையும் தியாகி முத்துக்குமரன் வெளிப்படையாகவே அடையாளம் காட்டியிருந்தான்.

அவன் குறிப்பிட்டமை போல ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகம் கொந்தளிக்கும் இந்தச் சமயத்தில் மக்களின் கோபத்தை எதிர்கொள்ளப் பயந்து தமிழக முதல்வர் வைத்தியசாலையில் போய் ஒளிந்து கொண்டிருக்கின்றார் என்பது உண்மையோ எனத் தெரியவில்லை.

ஆனால், தமிழக முதல்வர் வைத்தியசாலையில் படுத்திருப்பதால், அவரது இடத்துக்கு சட்டசபையில் மூத்த தலைவராகச் செயற்படும் தமிழக நிதி அமைச் சரும், தி.மு.க.பொதுச் சாயலாளருமான அன்பழகன் இவ் விடயங்களைக் கையாளும் முறைமை

முத்துக்கு மரன் போன்ற தியாகிகளின் உயிர் ஈகத்துக்குப் பின்னரும் கூட அதையொட்டி தமிழகத்தில் கிளர்ந்திருக்கும் பேரெழுச்சியின் பின்னரும் கூட

இலங்கை விடயத்தில் தி.மு.க. திருந்தவேயில்லை,

திருந்தவேமாட்டாது என் பதைத் திட்ட வட்டமாகத் தெளிவுபடுத்துகின்றது.

வன்னியில் சிக்கியுள்ள தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு 48 மணிநேரத்துக்குள் வெளியேறு வதற்குபாதுகாப்பான வசதிகளும், ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி அறிவித்தும்
அதைத் தம்பாட்டில் இரண்டு நாள் யுத்த நிறுத்தம் என்று சட்ட சபையில் அர்த்தம் பண்ணுகின்றார் அன்பழகன்.

ஆனால் இலங்கை அரசோ இது யுத்த நிறுத்த அல்லது மோதல் நிறுத்த அறிவிப்போ அல்ல என்பதைத் திட்டவட்டமாகவும் உறுதியாகவும் தெளிவுபடுத்தி விட்டது.

"யுத்த நிறுத்தம் செய்தால் புலிகள் அதைப் பயன்படுத்தி மீள ஒன்றுபட்டு விடுவார்கள். அதனால் யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. புலிகளின் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்கு பாதுகாப்பான பாதை ஒழுங்கு செய்து கொடுக்கப்படும் என்று மட்டுமே இலங்கை அரசு அறிவித்துள்ளது'என்று இலங்கையின் மூத்த அமைச்சர் ஒருவரே நிலைமையைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

ஆகவே இது அமைச்சர் அன்பழகன் தமிழக சட்ட சபையில் அறிவித்தமை போன்று யுத்த நிறுத்தமே அல்ல.

எனவே அப்படி இல்லாத யுத்த நிறுத்தம் குறித்துப் புலிகள் பிரதிபலிப்புக் காட்டாதமை குறித்து வெள்ளியன்று காலை சட்டசபையில் அன்பழகன் தெரிவித்த விசனப்போக்கு அர்த்தமற்றது.

அத்தகைய யுத்தநிறுத்தமோ, அல்லது சிவிலியன்களுக்கான பாதை வசதி பற்றிய அறிவிப்போ இலங்கை ஜனாதிபதியால் வியாழன் மாலை கொழும்பில் உள்ள ஊடகங்களுக்கு வெளியிடப் பட்டதே தவிர, உரிய தரப்புகள் ஏதேனும் ஊடாக புலிகளின் பக்கத்துக்கு அறிவிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

மிகக் குறுகிய பிரதேசத்துக்குள் பொதுமக்களுடன் சேர்ந்து புலிகளும் சிக்குண்டுள்ள நிலையில்

இலங்கை ஜனாதிபதி அறிவித்த 48 மணி நேரக் காலக்கெடு எப்போது ஆரம்பித்து, எப்போது முடிகின்றது என்பது கூடத் தெளிவில்லாத நிலையில் முதல் நாள் இரவு இலங்கை ஜனாதிபதி விடுத்த அறிவிப்பு வன்னிக் காட்டில் யுத்த நெருக்குதலில் சிக்குண்டுள்ள புலிகளுக்கு கிட்டியதா என்பது கூடத் தெரியாத நிலையில் அந்த அறிவிப்புக்குப் புலிகள் உரிய பிரதிபலிப்பைக் காட்டவில்லை என்று குறிப்பிட்டு, அடுத்த நாள் காலையில் சட்டசபையில் அமைச்சர் அன்பழகன் விழுந்தடித்து விசனம் தெரிவித்தமை அர்த்தமற்றது.

கலைஞர் கருணாநிதியும் அவரது தி.மு.க.அரசும் ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான விடயத்தில் விட்டேத்தியாகவே நடக்கும் நிலை நீடிக்கின்றது என்பது இப்படி அமைச்சர் அன்பழகன் விழுந்தடித்து விசனம் தெரிவித்ததன் மூலம் மீண்டும் ஒரு தடவை உறுதியாகி யிருக்கின்றது.

அவ்வளவே.
இவர்கள் திருந்த மாட்டார்கள். திருந்துவர் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தம் இல்லை.

[இன்போதமிழ்]

| | Read More »

வீரத் தமிழ் மகன் முத்துக்குமாரனுக்கு கிறபுண்டன் வாழ்தமிழ் மக்களின் வீரவணக்கம்

01.02.09 அன்று கூர் இல் மதியம் 12.00 மணியளவில் நடைபெற்ற வீரத் தமிழ் மகன் முத்துக்குமாரனின் வீரவணக்க நிகழ்வில் கிறபுண்டன் ஆலயத்தின் ஆன்மீகக் குருவாக பணியாற்றும் திரு. கஜேந்திர குருக்களால் முத்துக்குமாரனின் படத்திற்கு மலர்மாலை அணிவித்து ஈகைச்சுடரினையும் ஏற்றி வைத்தார்.

இதனை தொடர்ந்து குருக்கள் ஆற்றிய உரையில், முத்துக்குமாரனின் அஞ்சலி வணக்கத்தில் கலந்து கொண்டதில் நிறைவடைவதாகவும் தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் செய்வதறியாது திணறிய வேளையில் முத்துக்குமாரனின் வீரச்செயல் அரசியல் தலைவர்களையும் 15 லட்சம் ஈழமக்களின் மனதிலும் புதியதோர் உணர்வைத் தூண்டியுள்ளது. நல்ல தலைவன் கிடைக்காமையால் முத்துக்குமாரன் தனது உண்ர்வை இவ்வாறான ஒரு முடிவை கொடுத்ததாகவும்


நல்ல தலைவன் கிடைத்ததால் ஈழமக்கள் எத்துன்பத்திலும் சிரித்தபடி இருப்பதாகவும் இந்தியப்படையில் ஓய்வு பெற்ற உளவுத்துறை ஆராய்வாளரால் பிரபாகரன் மீண்டும் எழுந்து நின்றால் அது மந்திரச் செயல் என்றும் ஆனால் பிரபாகரன் என்ற சொல்லே ஒரு மந்திரச் சொல் என்றும் கூறி இருந்தார்.


இத்தாலி தொலைக்காட்சியில் 2 நிமிடம் ஈழமக்கள் பிரச்சனை பற்றி கூறியதாகவும.; 20 நிமிடம் எங்கள் பிரச்சனை பற்றி கூற இருப்பதாகவும் சொன்னார். ஏந்தத் தடவையும் இல்லாத ஒரு நெருக்கடியான அரசியல் பிரச்சனை தலைவர் அவர்களை இம்முறை சூழ்ந்திருப்பதால் எங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பால் இம்முறை கூடி
எங்களின் ஆதரவை தரவும் தனது 32 வருட அரசியல் தொடர்பில் மேடையில் தனது கருத்தையும் ஒத்துழைப்பையும் தருவதாக கூறி
தனது உணர்வுபூர்வமான உரையை ஆற்றியிருந்தார்.
குருக்கள் உரையை தொடர்ந்து செல்வி சுருதி அவர்கள் கவிதையில் முத்துக்குமார் அண்ணா எங்கள் ஈழமண்ணின் சொத்து என்ற உணர்வான கவிதையையும் தொடர்ந்து திருமதி சீதா கவிதையின் முத்துகுமாரின் செயல் கரும்புலிகளுக்கு ஒப்பான செயல் எனவும் கவிதையிலும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து திருமதி கௌரி கவிதையில் தாயகமும் தமிழகமும் தாம் இணைந்து போராட வழிவகுத்த வீரமறவனின் செயல் எனவும் தனது கவிதையில் வடித்திருந்தார்.

கிறபுண்டன் மாநிலப் பொறுப்பாளர் திரு. அல்பேட் அவர்கள் வழங்கிய சிற்றுரையில் அன்று சங்கர் சத்தியநாதன் இவ்வாறான செயலின் மூலம் தனது உணர்வை வெளியிட்டார். இன்று இந்த வீரமறவன் தனது செயலால் தமில் மக்கள் மனதில் புதியதோர் உணர்வை தட்டியெழுப்பி உள்ளான். எங்களுக்குக்கென்று ஒரு நாடு கேட்பதில் தவறா? நாங்களும் மற்றவரைகளைப் போல் சுதந்திரமாக வாழவும் எங்களை ஒர் இனமாக அங்கீகரிக்க ஏன் மறுக்கிறார்கள்.

சங்கிலியன் பண்டாரவன்னியன் ஆண்ட எமது மூதாதையர் வாழ்ந்த நாடு. இதனை எமக்கு தருவதில் ஏன் சிங்கள அரசு மறுக்கிறது எனவும் இன்றைய நிகழ்வு வீரவணக்கத்துடன் கூடிய ஒரு நிகழ்வாகவும் ஈழத்தில் வன்னியில் அவதியுறும் மக்களுக்கு உதவும் வகையில் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இதனை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் எனவும் தாழ்மையாகக் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் எல்லாம் எமது கிறபுண்டன் வாழ் மக்கள் எழுந்து நின்று அமைதியான முறையில் தங்கள் உணர்வைக் காட்டியதுடன் முத்துக்குமாரனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி தங்களின் உணர்வையும் அகவணக்கத்தையும் தெரிவித்தனர்.



| | Read More »

"வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் தியாகம் வீண் போகக்கூடாது: சுவிஸ் தமிழர் பேரவை

"வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரின் தியாகம் வீண் போகக்கூடாது என்று சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈழத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக தன்னையே ஈந்து தியாகம் செய்த "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாருக்கு சுவிஸ் தமிழர் பேரவை தனது கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகின்றது.

ஈழத் தமிழ் மக்களின் அவலத்தைக் கண்கொண்டு பார்க்க முடியாமல், பாரத தேசத்தின் பாதகச் செயலால் அவர்கள் நித்தம் நித்தம் கொன்றொழிக்கப்படும் கொடூரத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல், தமிழ் மக்களின் வரிப்பணத்தை சிங்களத்துக்கு வழங்கி சகோதர தமிழ் மக்களை பூண்டோடு அழித்துவிட நினைக்கும் இந்திய நடுவண் அரசின் கபடத்தனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தனது உயிரையே ஈந்து உயர்ந்து விட்டான் அந்த உண்மைத் தமிழன்.

இன்னுமா புரியவில்லை இந்திய அரசுக்கு? தமிழர்கள் அனைவரும் ஓரணியில் இணைந்து விட்டார்கள். பகைவர்கள் யாராயினும் அவர்களை எதிர்க்கத் துணிந்து விட்டார்கள். ஈழத் தமிழன், சொந்தச் சகோதரன், இரத்த உறவுக்காரன் நாளாந்தம் வான்குண்டுவீச்சுக்கும், எறிகணை வீச்சுக்கும் இலக்காகிப் பலியாகும் அவலம் இனியும் தொடர வேண்டாம் எனத் தாய்த் தமிழகத்துத் தமிழன் பறைசாற்றி நிற்கின்றான்.

புரிந்து கொள்ளுமா நடுவண் அரசு? இன்னும் எவ்வாறுதான் எடுத்துரைப்பது? அறிக்கைகள், கோரிக்கைகள், தீர்மானம், கடையடைப்பு, ஊர்வலம், உண்ணாநிலை, எச்சரிக்கை! திமிர் பிடித்த இந்திய ஆட்சியாளர்களுக்கு எதுவுமே புரியவில்லையே! பாலுக்குக் காவலனாய் நடித்துக் கொண்டே, பூனைக்கும் தோழனாய் இருப்பது எத்தனை நாளைக்கு நீடிக்கப் போகின்றது?

சொந்தச் சகோரதரனை அழிவிலிருந்த காப்பாற்ற முடியாத வாழ்வு எதற்கு என்று நினைத்தவனல்ல "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரன்.

தான் இறந்த பின்னராவது தமிழனுக்குப் புத்தி வரட்டும், இந்திய நடுவண் அரசின் கல்மனம் கரையட்டும், நடிப்புச் சுதேசிகளின் சாயம் வெளுக்கட்டும் என்பதே அவனது எதிர்பார்ப்பு.

"வீரத் தமிழ் மகன்" முத்துக்குமாரனை இழந்து வாடும் அவனது குடும்பத்தினரின் சோகத்தில் இணைந்து கொள்ளும் அதேவேளை, அந்த மகத்தான தியாகம் வீண் போகாமல் பார்த்துக் கொள்ளுமாறு தாய்த் தமிழக உறவுகளையும் சுவிஸ் தமிழர் பேரவை வேண்டிக் கொள்கிறது.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



| | Read More »

கனடிய அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா?‏

கனடிய அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா? என்ற தலைப்பிலானா வாக்கெடுப்பு ஒன்றை கனடிய பத்திரிகை ஒன்று ஆரம்பித்துள்ளது.

இந்த கருத்துக் கணிப்பிற்கான வாக்குக்களை கனடிய மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதற்கு வாக்கழிப்பதற்காக கனடிய தொலைபேசி மூலமாகவும் இணையத்தளம் மூலமாக வாக்களிக்க வசதியை செய்யப்பட்டுள்ளது.

கனடா அமெரிக்கா வாழ் உறவுகள் 416 260 4005 என்ற இலக்கத்தில் தொடர்புகொண்டு

ஒன்றை அழுத்தினால் ஆம் என்று அர்த்தம்

வெளி நாட்டு உறவுகள் 001 416 260 4005 என்று அழுத்தி அழைப்பை ஏற்படுத்திகொள்ளலாம்.


http://www.citynews.ca/polls.aspx?pollid=4786


One of Canada's news station is taking a telephone poll on whether Canada should call for cease fire in Sri Lanka. It easy to submit you answer, it takes about 30secs of you time.
1. Call into 1-416-260-4005
2. Listen to the poll question and press 1 for YES and 2 for NO
As I know all of you should be pressing 1 for YES, please hurry I just found out this a few minutes ago and trying to spread the word fast as I don't know how long this poll is for...HURRY.



| | Read More »

வீரத் தமிழ் மகன் முத்துக்குமார் குடும்பத்துக்கு உதவுமாறு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள்

ஜனவரி 30, 2009
ரொறன்ரோ

வீரத்தமிழன் முத்துக்குமரன் குடும்பத்துக்கு நிதியுதவி

வீரத்தமிழன் முத்துக்குமரனுக்கு எமது தலைசாய்ந்த வீரவணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்வின் தென்றலை அனுபவிக்க வேண்டிய இளம் வயதில் தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலையைக் கண்டித்தும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தனக்குத்தானே தீ மூட்டி தன் இனிய உயிரை ஈகை செய்துள்ள முத்துக்குமரனை வாழ்த்துகிறோம்.

அவரது தற்கொடை எம்மை மெய்சிலிர்க்க வைத்தாலும் இளைஞர்கள் தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதை நாம் வரவேற்கவில்லை. மற்றைய இளைஞர்கள் அவர் வழியைப் பின்பற்றக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இருந்தும் முத்துக்குமரனின் அளப்பரிய தற்கொடைக்குப் பின்னால் உள்ள அவரது அப்பழுக்கற்ற தமிழின உணர்வை மதிக்கிறோம். வீரத்தமிழன் முத்துக்குமரனது தற்கொடை தமிழினத்தின் ஒட்டு மொத்த எழுச்சியின் குறியீடாக நினைக்கிறோம். தமிழீழத்தின் வரலாறு மட்டுமல்ல தமிழக வரலாறு எழுதப்படும்போது அவரது பெயர் பொன் எழுத்துக்களால் பதியப்படும்.

வீரத்தமிழன் முத்துக்குமரன் நன்கு படித்தவர். நல்ல எழுத்தாளர். அவர் எழுதி வைத்துவிட்டுச் சென்ற பட்டயம் அதற்குத் தக்க சான்றாக உள்ளது.

வீரத்தமிழன் முத்துக்குமரனின் உடன்பிறப்பு அண்மையில் ஒரு விபத்தில் சிக்கி இறந்திருக்கிறார். திருமணமாகாத அவர் தனது இன்னொரு உடன் பிறப்பு இளவரசியுடன் வாழ்ந்து வந்தார்.

அன்னாரது குடும்பத்துக்கு எந்த நலிவும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் அவரது குடும்பத்துக்கு நிதிதிரட்டி அனுப்ப தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் முன் வந்துள்ளது. இந்த நிதிக்குக் கழகம் 500 டொலர்களை வழங்கித் தொடக்கி வைக்கிறது.

இந்த நிதி திரட்டலுக்கு தமிழ்த் தேசியத்தை உளமாரக் காதலிக்கும் உணர்வாளர்கள், அங்காடி உரிமையாளர்கள், துறைசார் வல்லுனர்கள், பொதுமக்கள் அனைவரும் முடிந்தளவு உதவுமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறோம். நிதியளிப்பவர்கள் பெயர்ப் பட்டியல் இங்கு வெளியாகும் செய்தித்தாள்களில் வெளியிடப்படும்.

உங்கள் பங்களிப்பை காசோலை அல்லது பணமாக வழங்கலாம். காசோலையை TCWA,என்ற பெயருக்கு எழுதிக் கீழ்க்கண்ட முகவரிக்கு அன்புகூர்ந்து அனுப்பி வைக்கவும்.

TCWA,
56 Littles Road

Scarborough, ON.
M1B 5C5


என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும். அல்லது கீழ்க்கண்ட கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு வரவு வைக்கவும்

TD Canada Trust Branch No. 1033
Account No.0663 – 5214579



மேலும் கீழ்க்கண்ட அங்காடிகளிடம் ஒரு உறையில் உங்கள் பெயர், தொ.பே. எண், தொகை இவற்றைக் குறித்து காசோலையை அல்லது பணத்தைக் கையளிக்கவும்.

1) Babu Catering and Take Out, 4800 Sheppard Avenue East #201 Scarborough

2) Uthayas Super Market, 5010 Steels Ave. West # 14 Etobicoke (Kipling and Steels)


3) Vijaya’s Silk, 27 Dundas Street East, Mississauga.


4) SP Importers, 2853 Lawrence Ave East in Scarborough.


5) AGR Financial Services and Jewellary, 2637 Eglington Ave East, Scarborough.

தொடர்பு: தொ.பேசி -
(416) 281 1165
(416) 335 9462
(905) 949 0824


தொலைப்படி -
(416) 261 6745


மின்னஞ்சல் - tcwacan@yahoo.ca




'உன்னத இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்து விடுவதில்லை. எமது தேசத்தின் வரலாற்றில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு.'

-தலைவர் பிரபாகரன்-



| | Read More »

பொது வேலை நிறுத்தம் சட்டவிரோதமானதல்ல: கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் பதில்

பொது வேலை நிறுத்தம் சட்டவிரோதமானதல்ல என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதிக்கு இலங்க தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பதிலளித்துள்ளார்.

இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்ய‌க்கோ‌ரி இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌ம் சா‌ர்‌பி‌ல் எதிர்வரும் புதன்கிழமை (04.02.09) நடத்தப்படவுள்ள முழு அடை‌ப்பு‌ப் போரா‌ட்ட‌ம் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் புற‌ம்பானது எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதற்கு பதிலளித்து பழ.நெடுமாறன் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு அப்பாவித் தமிழர்களின் உயிர்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெப்ரவரி 4 ஆம் நாள் அன்று பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்திருப்பது சட்ட விரோதமானது என தமிழக அரசு தவறான பிரச்சாரம் செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உச்சநீதிமன்றம் முழு அடைப்பு செய்வதற்கு எதிராகக் கூறியுள்ள கருத்தினைத் திரித்துக்கூறி மக்களை மிரட்டுவதற்கு தமிழக அரசு முயல்கிறது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகுதான் மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் சுயவேலை மறுப்புப் போராட்டங்களும் கடையடைப்புப் போராட்டங்களும் நடத்திருக்கின்றன என்பதனை தமிழக அரசின் கவனத்திற்குச் சுட்டி காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், திரைப்படத்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களும் பெப்ரவரி 4 ஆம் நாள் அன்று தங்களுக்குத் தாங்களே சுயவேலை மறுப்புச் செய்து தங்கள் இல்லங்களிலேயே இருக்குமாறு மிக்க பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

பொது வேலை நிறுத்தத்தை முறியடிக்க தமிழக அரசு தவறான பிரச்சாரத்திலும், மிரட்டல் நடவடிக்கையிலும் ஈடுபட்டு இருப்பது அப்பட்டமான ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்துத் தமிழர்களும் பொது வேலை நிறுத்தம் வெற்றிபெற துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

போராட்டங்களின் போது எந்த இடத்திலும் சிறு அளவு வன்முறை ஏற்படாமலும், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் இல்லாமலும் கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.

பொது வேலைநிறுத்தம், கறுப்புக்கொடி ஊர்வலம் ஆகியவற்றை நடத்துவது குறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள், மற்றும் அமைப்புக்களின் மாவட்ட பொறுப்பாளர்கள் அவசரமாகக்கூடித் திட்டங்கள் வகுத்துச் செயற்படுமாறு வேண்டிக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


| | Read More »

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை: அவலநிலை குறித்து உலக சமூக ஒன்றிய மாநாட்டில் ஆராய்வு

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்தும் அங்கு மக்கள் அனுபவிக்கும் அவலம் குறித்தும் பிரேசிலின் பெலம் நகரில் தற்போது நடைபெற்று வரும் உலக சமூக ஒன்றியத்தின் எட்டாவது மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

இந்த மாநாட்டில் உலகின் பல பாகங்களில் வசிக்கும் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

உலகளாவிய ரீதியில் நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டங்களுக்கும், உரிமை கோரி வரும் போராட்டங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாய அமைப்பினால் கொடுக்கப்படும் அங்கீகாரமும் பங்களிப்பும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதை நிவர்த்தி செய்யும் வகையில் 2001 ஆம் ஆண்டில் உலக சமூக ஒன்றிய மாநாடு தொடங்கி வைக்கப்பட்டது.

உலக சமூக ஒன்றியத்தின் எட்டாவது மாநாட்டில் 150-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.





இந்த மாநாட்டில் குறிப்பாக உலகளாவிய ரீதியில் நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டங்கள் மற்றும் உரிமைப் போராட்டங்கள் குறித்து பிரதிநிதிகள் விளக்கமளிப்பர். வட்டமேசை கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்களும் இங்கு நடைபெறும்.

குறிப்பாக அரசுகள் அற்ற தேசிய இனங்களாகக் கணிக்கப்படும் 20-க்கும் அதிகமான தேசிய இனங்களின் பிரதிநிதிகள் அங்கு தமது விடயங்கள், விவகாரங்களுக்கான விளக்கக்கூட்டங்களை இந்த மாநாட்டில் நடத்தி வருகின்றனர்.

பலஸ்தீனியர், மேற்கு சாகரவி, குரூடிஸ்ரன், பாஸ்க், கத்தலோன் போன்ற தேசிய இனங்களின் பிரதிநிதிகளும் இங்கு கலந்துகொண்டு தத்தமது விளக்கக் கூட்டங்களை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



குறிப்பாக இங்கு நடைபெறும் சுயநிர்ணய கோட்பாடு பற்றிய பல கூட்டங்கள், வட்டமேசை கலந்துரையாடல்களில் தமிழ்ப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பும் தற்போது அங்கு நிலவும் அவல நிலை பற்றியும் எடுத்துக் கூறி வருகின்றனர்.

இந்த மாநாட்டில் தமிழர் மனித உரிமை மையத்தினரினால் பல கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புக்கள், சமய, கலாச்சார, மனித உரிமை, கல்வி, அரசியல், விடுதலை அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதாக தமிழர் மனித உரிமை மையத்தினரின் செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பாளரான, அதன் பொதுச் செயலாளர் கிருபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தமிழர் மனித உரிமை மையத்தினரினால் வெளியிடப்பட்ட சிறப்பு அறிக்கை ஒன்றும் இந்த மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.



| | Read More »

துரோகமே உருவான காங்கிரசும் தமிழினமும்


இலங்கையில் போரை நடத்துவது யார் என்ற கேள்வி நம்மில் பலருக்கு தெளிவாகி இருக்கும், வெள்ளைக்காரனுக்கு பிறந்த கள்ளக் குழந்தையான இந்திய தேசிய காங்கிரசு அரசுதான் அங்கே போரை நடத்தி வருகிறது என்பதை பல்வேறு செய்திகளிலிருந்து உறுதிப்படுத்தி கொள்ள முடிகிறது.

நாம் அறிந்து வகையில் திருட்டுக் கும்பலாக நாடு கடத்தப்பட்ட சிங்களர்களுக்கு இப்போது எப்படி இவ்வளவு வலிமை வந்தது என பார்க்கின்ற போது இப்போதுதான் அதன் முழு வெளிச்சம் உலகிற்கு வெளியே வரத் தொடங்கியுள்ளது, அவன பிடிப்பேன், இவன பிடிப்பேன் என கூறும் தமிழக உளவு பிரிவு கூட இதை தெரிந்து கொள்ளவில்லையா? தெரிந்தே தான் இந்த நாடகத்தை தமிழக அரசு நடத்திவருகிறதா? என்றெல்லாம் பார்க்கிற போது இந்த அரசுகள் மக்கள் விரோத அரசாக மக்களை ஏமாற்றுகிற அரசாக மோசடி அரசுகளாக இருப்பதை அனைத்து தமிழ் மக்களும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இந்திய அரசு அவ்வப்போது மெளன காத்தாலும் அடிக்கடி இலங்கை அரசு தான் இந்தியா என்ன எங்களிடம் பேச வருகிறது என்பதை அறிவித்துக்கொண்டிருந்தது. ஆனால் இந்திய அரசு வாய்திரக்கவில்லை. சிவசங்கர் மேனர் இந்தியாவிலிருந்து கிளம்பிய உடன் இந்திய பத்திர்க்கைகள் போர் நிறுத்தம் கேட்டு சிவசங்கர் மேனர் செல்கிறார் என எழுதின ஆனால், இலங்கை அரசோ அது பற்றி அவர் பேசமாட்டார் என அறிவித்தது.

இந்திய அரசு மக்களுக்கு எந்த வித அறிவிப்பையும் கொடுக்காமல் இலங்கை செல்கிறது அல்லது பொய்யான பரப்புரைகளை தமிழக அரசை விட்டு பரப்பிவிட்டு பின்னர் அங்கு வேறு ஏதோ பேசிவிட்டு வருகிறார்கள். இந்திய காங்கிரசு அரசுக்கு தமிழ்மக்களின் வாக்கு தேவையில்லை என அது உறுதி செய்து கொள்கிறது. அல்லது தமிழக அரசியல் வாதிகளின் மோசடிப் போக்கை காங்கிரசு அரசு புரிந்து கொண்டுள்ளது.

இலங்கைக்கு வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் இராணுவ தளவாடங்களை அனுப்பி இருக்க முடியும் ஆனால் தஞ்சையிலிருந்து அனுப்பி வைப்பது தமிழர்களை கேலி செய்கிற ஏளனம் செய்கிற விசயமாகவெ இருக்கிறது.

இந்திய தேசிய காங்கிரசின் இந்த கயவாளித்தனத்திற்கு தமிழக பிற கட்சிகளின் கயவாளித்தனமான கொள்கைகளே காரணமாகும் என்பது உறுதி. இலங்கையில் தமிழினம் அழிந்தாலும் தன் நலம் பாதிக்கக்கூடாது என்ற எண்ணம் தான் இந்திய தேசிய காங்கிரசின் இந்த ஏளமான நடவடிக்கைக்கு காரணமாகும்.

தமிழர்கள் வரிப்பணத்தில் தமிழர்களை கொன்று குவிக்கும் இந்த அரசு ஒரு மக்கள் விரோத அரசு என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. எப்படியும் தாம் அடுத்தமுறை ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதை அறிந்து தான் இந்த கட்சி இப்படி நடந்து கொள்வதாக தெரிகிறது.


தமிழ் மக்களே சிந்தியுங்கள் !
இந்திய அரசுதான் தமிழினத்தின் முதல் எதிரி!
இந்திய காங்கிரசு கொலைவெறி அரசை தூக்கி எறிவோம்!!!
இந்திய மேலாதிக்கத்தை எதிப்போம்!!!!

rajasugumaran.



| | Read More »

ஈழத் தமிழருக்காக தீக்குளித்த ரவியின் செயலை கருணாநிதி கொச்சைப்படுத்துவது

அன்று பக்வத்சலம் கொச்சைப்படுத்தியதற்கு ஒப்பானது: வைகோ சாடல்

ஈழத் தமிழருக்காக தீக்குளித்த ரவியின் செயலை முதலமைச்சர் கருணாநிதி கொச்சைப்படுத்தியது அன்றைய முதலமைச்சர் பக்வத்சலம் கொச்சைப்படுத்தியதற்கு ஒப்பானது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வைகோ சாடியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இன்று காலை மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பள்ளபட்டி ரவியைப் போய்ப் பார்த்தேன். அவர் தீக்குளித்ததால் 80 சதவிகிதம் தீப்புண் ஏற்பட்டு உள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவர் என்னைப் பார்த்தவுடன் வணக்கம் தெரிவித்தார்.

நீங்களும் இதற்கெல்லாம் கஷ்டப்படுகிறீர்கள் அவர்கள் ஒன்றும் நடக்கவில்லையே என்று கூறினார். பின்னர் அவர் தொடர்பு இல்லாமல் வார்த்தைகள் சரியாக வராமல் பேசுவது ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் பேசியது நெருப்பு உடம்பின் பல பகுதிகளை அரித்துவிட்டதால் அவருடைய சிந்தனைத்திறன் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டேன்.

அவருடைய மனைவி சித்ராவிடம் நடந்தது என்னவென்று கேட்டேன். அவர் எப்பவுமே இலங்கைத் தமிழர்களுக்காக கவலைப்பட்டு பேசுவாரு இந்தச் சென்னையில் உள்ள பையன் தீக்குளித்து இறந்த செய்தியை வெளியில்போய் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு வந்து ரொம்ப புலம்பிக் கொண்டே இருந்தார்.

திருமாவளவன் நான்கு நாள் உண்ணாநிலை இருந்தாரு அதிலும் ஒன்றும் நடக்கவில்லையே என்று சொல்லிக்கொண்டு இருந்தார். நம்ம மக்கள் இப்படி இலங்கையில் சாகிறாங்களே நம்மெல்லாம் என்ன பிரயோஜனம் என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.

எங்க வீடு குடிசை வீடு கஷ்டத்தோடு கஷ்டம். நாள் பத்திரிகை வாங்கிப் படிப்பாரு. சாயங்காலம் 6:00 மணியாக இருக்கும். அப்போது தெருக்காரங்க ஓடிவந்து இந்தா உன் புருஷன் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கிட்டான் என்று கூப்பாடு போட்டார்கள். அதற்குப்பிறகு நான் ஓடினேன். அதன் பிறகு நானும் எனது மூத்த பையன் பிரபாகரனும் நிலக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்குள்ள மருத்துவர்கள் மருத்துவம் பார்க்க விரும்பவில்லை.

பிறகு, மதுரை அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டுகிட்டு வந்தோம். அப்பல்லாம் காவல்துறை யாரும் பார்க்கவில்லை. இப்போ நாங்க புருஷன் பொஞ்ஜாதி சண்டை போட்டுக்கிட்டு அதனால அவர் போய் தீக்குளிச்சாருன்னு காவல்துறையினர்களும் சொல்றதாக பத்திரிகையில் போட்டிருப்பதாக சொன்னாங்க.

எங்களுக்குள் எந்தச் சண்டையும் கிடையாது. இது பச்சைப் பொய். ஸ்டவ் வெடிச்சு தீப்பிடிச்சதுன்னு அவர் சொன்னதாக பத்திரிகையில் போட்டிருக்காங்களாம் சத்தியமா அவரு அப்படிச் சொல்லவேயில்லை எங்க வீட்டுல ஸ்டவ் கிடையாது. சிலிண்டரு கிடையாது. காடா விளக்கு சிம்னி விளக்கு தான் வைத்திருக்கிறோம் என்று அழுது கொண்டே கூறினார்.

அவரது மகன் பிரபாகரன் சொன்னதாவது:

எங்க அப்பா அம்மாவுக்கு சண்டையே கிடையாது. இலங்கைத் தமிழருக்காகத்தான் எங்க அப்பா தீக்குளித்தார். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லிவிட்டு தான் உடம்பு எல்லாம் தீப்பிடித்து தெருவில் ஓடியிருக்கிறார் என்று கூறினார்.

ஆனால், காவல்துறையின் உயர் அதிகாரி இராஜேந்திரன் இது தொடர்பாக கூறுகையில்,

பள்ளபட்டி ரவி மனைவியோடு சண்டை போட்டுக் கொண்டு தீக்குளித்தார் என்றும் இலங்கைத் தமிழர்களுக்காக அவர் தீக்குளித்தார் என்று பிரச்சினையாக்க முயன்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளர்.

காவல்துறையினர் இன்னொரு பொய்யைப் பதிவு செய்கின்றனர். பள்ளபட்டி ரவி மருத்துவமனைக்கு வந்தவுடன் ஸ்டவ் வெடித்து உடம்பில் தீப்பிடித்ததாக மருத்துவரிடம் கூறியதாக காவல்துறையினர் பொய்யாக பதிவு செய்திருப்பதோடு மருத்துவர்களை அப்படி சொல்ல வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

மருத்துவமனையில் பள்ளபட்டி ரவிதான் இலங்கைத் தமிழர்களுக்காகத் தான் தீக்குளித்தேன் என்று திட்டவட்டமாகச் சொல்லி உள்ளார். அந்த ஆதாரம் செல்லிடப்பேசியில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆனால், இந்த உண்மையை மூடிமறைத்து பள்ளபட்டி ரவி குடும்பச் சண்டையால் தீக்குளித்தாகவும், அவர்மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். அவர்மீது வழக்குகள் இருப்பதாகவே இருந்தாலும் இந்தத் தீக்குளிப்புக்கும் வழக்குகளுக்கும் என்ன சம்பந்தம்?

ஈழத் தமிழர்களுக்காகத் தன் உயிரையே மாய்த்துக் கொள்ள முடிவெடுத்து தீக்குளித்திருக்கிறார் பள்ளபட்டி ரவி. இப்போது உயிர் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. ஆனால், அந்தச் செயலைக் கொச்சைப்படுத்தி அவரை இழிவுபடுத்த உண்மையைக் குழிதோண்டி புதைத்து, பொய்களைப் புனைந்துரைத்து காவல்துறை அறிக்கை விடுவதற்கு என்ன காரணம்?

முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உத்தரவின் பேரில்தான் காவல்துறையினர் இப்படி இந்த ஈனத்தனமான வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மையாகும்.

ஈழத் தமிழர் படுகொலைக்கு உள்ளாகும் துயரம் குறித்து தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசுக்கு எதிராக மக்கள் மனம் எரிமலையாவதால்தான் இந்தத் தியாகச் செயல்களை கொச்சைப்படுத்தவும் மூடிமறைக்கவும் அரசு முனைந்து உள்ளது என்பதால்தான் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீவிரவாதச் செயல் என்று சொன்னார்.

பள்ளபட்டி ரவி இலங்கைத் தமிழர்களுக்காக தன்னை மாய்த்துக் கொள்ள தீக்குளித்த செய்தியை மூடிமறைக்க காவல்துறையை முதல்வர் ஏவிவிட்டுள்ளார். இது மனிதநேயமற்ற மனிதாபிமானம் செத்துப்போன அக்கிரமான அணுகுமுறை ஆகும்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிங்கத் தமிழன் சின்னச்சாமி தீக்குளித்தபோது அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் வயிற்று வலியால் தீக்குளித்தான் என்று கொச்சைப்படுத்தினார். ஈவு இரக்கமற்ற அதே போக்கினை இன்றைக்கு கலைஞர் கருணாநிதி மேற்கொண்டு உள்ளார்.

மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகம் தீயிடப்பட்டு மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட கொடுமைக்கு மூல காரணமான நபர்மீது எந்தக் காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லையோ அதே காவல்துறைதான் இந்தத் தீக்குளிப்பு சம்பவத்தில் இந்த அநீதியைச் செய்கிறது.

வேறு காரணங்களுக்காக தீக்குளித்த ஒருவரை இலங்கைத் தமிழருக்காக தீக்குளித்தார் என்று கூறுகின்ற, உயிரற்ற உடலத்தை வைத்து அரசியல் செய்கின்ற இழிகுணம் இங்கு எவருக்கும் கிடையாது.

இலங்கையில் தமிழ் இனமே கொலைக்களத்தில் குற்றுயிரும் கொலையுருமாக சாகும்போது தமிழகத்தில் இயல்பாக எழும் ஈழத் தமிழர் ஆதரவை அதிகாரத்தைப் பயன்படுத்தி அக்கிரமமாக தடுக்க மாநில அரசு முனையுமானால் தமிழினத் துரோகிகள் எனும் குற்றச்சாட்டில் இருந்து அவர்கள் தப்பிக்கவே முடியாது.

ஈழத் தமிழர் ஆதரவு உணர்வுகளை நசுக்குவதற்காகவே கல்லூரிகள், பள்ளிகள் காலவரையறையின்றி கருணாநிதி அரசு மூடியிருக்கிறது.

ஈழத் தமிழருக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்துக்கு கலைஞர் கருணாநிதி முழுப்பங்காளி எனும் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



| | Read More »