லண்டன் ஈஸ்காமில் ஈகத்தியாகிகளின் நினைவஞ்சலி நிகழ்வு

சிங்கள இனவாத அரசு ஈழ தமிழனை ஈவிரக்கமின்றி இனசுத்திகரிப்பு செய்வதற்கு இந்திய நாடு மற்றும் உலகநாடுகள் உதவ கூடாது என பலராலும் பலவழிகளில் எடுத்துரைத்தும் பயனற்று. இதன் கடைசி அத்தியாயமாக தம்மையே ஆகுதி ஆக்கி காட்டவேண்டும் என்று முடிவெடுத்து ஆகுதியான முத்துக்குமார் முதல் ஈகத்தியாகிகளின் நினைவஞ்சலி நிகழ்வு நேற்று பிரித்தானிய கிழக்கு வாழ் தமிழ் உணர்வாளர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்திய தமிழர், மலேசிய தமிழர், மொறிசியஸ் தமிழர், ஈழத்தமிழர் அனைவரும் ஒன்றாக நாம் தமிழர் எனற ஒருமைப்பாட்டின் கீழ் பல நூற்றுக்கண்க்கான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்ட்டனர்.

மேடையில் பேசியவர்களும், நிகழ்வில் பங்கேற்றவர்களும், இந்திய, ஈழத்தமிழர்களின் உறவு அன்று முதல் இந்த கணம் வரை ஒன்றாகவே இருக்கின்றது. ஆனால் ஒரு சில அரசியல் தலைவர்களே பிரித்து வைத்திருப்பதாக தமது ஆதங்கங்களை தெரிவித்திருந்தனர்..

ஈழத்த்மிழர் சுதந்திரமாக வாழ இங்கு வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்தால் மட்டும் போதாது. வேற்றின மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து தொலைபேசிக்கூடாகவும் பல உரைகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

| | Read More »

எம்.ஜி,ஆர். தமிழக முதல்வராக இருந்த 1985 களில் ''டெசோ'' கூட்டங்களில் கலைஞர் பேசியதை, தற்போது மற்றவர்கள் பேசினால் சிறையில் தள்ளுவது ஏன்?

ஈழப் பிரச்சினையை முன் வைத்து தமிழக ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று கலைஞர் அறிக்கைகளை விடுகிறார்.

இதே கலைஞர் 1985 ஆம் ஆண்டுகளில், ‘ஈழத் தமிழர் விடுதலை அமைப்பு’ (டெசோ) ஒன்றை உருவாக்கி நாடு முழுதும் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவான பிரச்சார இயக்கத்தை நடத்தியவர்தான். அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மீது ஈழத் தமிழர்களுக்காக மத்திய அரசை வலியுறுத்தவில்லை என்று கலைஞர் குற்றம் சாட்டினார்.

ஈழத்தில் சிங்கள இராணுவம் இந்தியாவின் பேருதவியோடுதான் போரை நடத்துகிறது. விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று அறிவித்து விட்டார்கள். போரை நிறுத்த மாட்டோம் என்கிறது சிங்களம். புலிகள் இராணுவத்தைக் கலைத்துவிட வேண்டும் என்று சிங்களர் விதிக்கும் நிபந்தனையை தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள தி.மு.க.வும் ஏற்று ‘இருதரப்பு போர் நிறுத்தம்’ என்ற கருத்தை முன் வைத்து மனித சங்கிலியை நடத்தியுள்ளது.

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதாலும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாலும் ஈழத் தமிழின உரிமைப் போராட்டத்தை நசுக்கிடும் இந்திய அரசை எதிர்க்காமல் சமரசம் செய்து கொள்ளத் துடிக்கிறது. ஈழப் பிரச்சினையை முன் வைத்து தமிழக ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று தமிழக முதல்வர் கலைஞர் அறிக்கைகளை விடுகிறார்.

இதே கலைஞர் ‘ஈழத் தமிழர் விடுதலை அமைப்பு’ (டெசோ) ஒன்றை உருவாக்கி நாடு முழுதும் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவான பிரச்சார இயக்கத்தை நடத்திய பொழுது தாங்கள், இப்பிரச்சினையை வைத்து அரசியல் நடத்தவில்லை என்றார். தமிழனுக்கு என்று நாடு வேண்டும் என்றார். தமிழக இளைஞர்களும் ஆயுதம் ஏந்திப் போராடும் காலம் வரும் என்றார். அதே கருத்தினை இப்போது சீமான் பேசினால், மற்றவர்கள் பேசினால், ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக வழக்குப் போட்டு அதே கலைஞர் சிறையில் தள்ளுகிறார்.

ஆனால், அன்று எம்.ஜி.ஆர். ஆட்சியோ, இத்தகைய நடவடிக்கைகளை கலைஞர் எடுத்ததில்லை என்பதே உண்மை. கடந்த காலங்களில் கலைஞர் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களிடம் பேசிய கருத்துகளையே இப்போது தமிழின உணர்வாளர்கள் பேசினால் கலைஞர் ஆட்சியில் சட்டம் பாய்கிறது. இப்போது மூன்றாவது முறையாக இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டு, புதுவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அன்று கலைஞர் பேசிய “வீர முழக்கத்தில்” கால்பங்கைக் கூட பேசிடாத சீமான் இப்போது சிறையில்!

இளம் தலைமுறையினருக்கு கலைஞரின் அந்த உரைகளை நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம். ஈழத் தமிழர்களுக்காக தமது கடந்தகால தியாகங்களை கலைஞர் பட்டியலிடும்போது நாம் அவரது கடந்த கால உரைகளையும் இளம் தலைமுறையினருக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

1985 அக்டோபர் 3, 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கலைஞர் ஆற்றிய உரையைத் தொகுத்து தி.மு.க. தலைமையகமே ஒரு நூலை 1985 ஆம் ஆண்டில் வெளியிட்டது. ‘தமிழனுக்கு ஒரு நாடு தமிழ் ஈழ நாடு’ எனும் தலைப்பில் தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் மறைந்த சி.டி.தண்டபாடி முன்னுரையோடு வெளியிடப்பட்ட அந்த சிறு வெளியீட்டிலிருந்து கலைஞர் உரையின் சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்:

தமிழனாகப் பிறந்ததைத் தவிர வேறு குற்றமென்ன?

மொராக்கோ நாட்டில் நடைபெறும் கொரில்லாப் போராட்டத்திற்கு இந்திய அரசு அங்கீகாரம் அளித்திருக்கிறது. இதனால் மொராக்கோ கோபம் கொண்டு இந்திய அரசுடன் தனது உறவுகளை துண்டித்துக் கொண்டது.

அதேபோல பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இந்திய அரசு அங்கீகாரம் அளித்திருக்கிறது. பாலஸ்தீன இயக்கத்தின் விடுதலை முகாமை இஸ்ரேல் விமானங்கள் டுனீஷியா நாட்டில் தாக்கின; அரபாத்தைக் கொல்ல முயன்றது நல்லவேளை அரபாத் காப்பாற்றப்பட்டு விட்டார். அந்த விடுதலை முகாம் அழிக்கப்பட்டது.

உடனடியாக இந்திய அரசு “இது மனித நாகரிக வளர்ச்சிக்கு விடப்பட்ட சவால். இதை இந்தியா கண்டிக்கிறது” என்று அழுத்தம் திருத்தமாக ஆவேசமாக தன்னுடைய மனப்பாதிப்பை வெளியிடுகிறது.

நான் கேட்பதெல்லாம், மொராக்கோவில் போராடுகின்ற கெரில்லாக்களுக்கு தரப்படுகின்ற அங்கீகாரத்தை பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு தரப்படுகின்ற அங்கீகாரத்தை - இலங்கையிலே போராடுகின்ற தமிழர்களுக்கு ஏன் தரவில்லை? நாங்கள் தமிழனாகப் பிறந்ததைத் தவிர வேறு என்ன குற்றம் செய்தோம்?

தமிழனாகப் பிறந்தது குற்றமா? கேவலமா? அப்படியென்றால் தமிழ் நாட்டை இணைத்து ஆள்வது உங்களுக்குக் கேவலமல்லவா? அனுப்பி விடுங்களேன். வெளியே எங்களை என்று கேட்க மாட்டோமா? இப்படிக் கேட்பதால் கருணாநிதி பிரிவினைவாதம் பேசுகிறார் என்று காங்கிரஸ் நண்பர்கள் சொல்வார்களேயானால் நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

இன்றைக்கு பிரிவினைக் கொடியை பிரிவினை கீதத்தை காஷ்மீரில் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகன் மத்தியிலே உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில் “காஷ்மீரில் நடைபெறுகின்ற ஷா அரசு (காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் துணையோடு நடை பெறுகின்ற அரசு) பிரிவினை வாதத்திற்கு துணை போகிறது; உதாரணம் தேவை என்றால், ஆகஸ்டு 14 ஆம் நாள் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த நாள்!

ஆகஸ்டு 14 ஆம் நாள் காஷ்மீர் மாநிலத்தில் 50 இடங்களில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததை காஷ்மீரில் உள்ளவர்கள் கொண்டாடினார்கள். இது மாநிலத்தில் உள்ள ஷா அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று எழுதியுள்ளார். அப்படிப்பட்ட அரசை அங்கே முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்தி பரூக் அப்துல்லாவுக்கு எதிராக அதை உருவாக்கியவர்கள் யார்?”

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் மத்தியிலே உள்ள இந்திரா காங்கிரஸ் தலைமையும்தான்.

இவர்களுக்கு பிரிவினையைப் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது? என்ன யோக்கியதை இருக்கிறது?

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி ஏற்றுவதைத் தடுக்க வகையில்லை, வக்கு இல்லை; தெம்பில்லை; திராணியில்லை. முன்கூட்டி தெரிந்திருந்தும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதுபற்றி கவர்னர் மத்திய அரசுக்கு எழுதியிருந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்கிக் கொண் டிருக்கிறது. எனவேதான் இவர் களுடைய தேசியம், வேறு யார் எதிர்த் தாலும் அங்கெல்லாம் விசுவரூபம் எடுக்காது.

இந்தப் பாவப்பட்ட தமிழன் இருக்கிறானே - தமிழன் என்று சொன்னால் - தமிழ் இனம் என்று சொன்னால் - தமிழனுடைய உரிமை என்று சொன் னால் - அங்கே தான் அந்த தேசியம் வேகமாக வந்து பாய்ந்து குதறும். தமிழனுடைய உரிமையை நிலை நாட்ட பக்கத்து நாட்டிலே அழிந்து கொண்டிருக்கின்ற தமிழினத்தை காப்பாற்று என்று சொல்வது தேசியத் திற்கு விரோதம் என்று காங்கிரஸ் நண்பர்கள் சொல்வார்களேயானால், இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற நானோ பேராசிரியரோ, வீரமணியோ, நெடுமாறனோ, அய்யணன் அம்பலமோ ஆதீனகர்த்தரோ மற்றவர்களோ, பாடு படுவது இராஜ துரோகம் என்று சொன்னால், நாங்கள் அந்தக் குற்றத்தை செய்து கொண்டேயிருக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

நாங்கள் மாத்திரம் அல்ல தமிழ்ச் சமுதாயமே தயாராயிருக்கிறது என்பதை தெரிவிக்கத்தான் நாம் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- இப்படி அன்று ஒருமைப் பாட்டுக்கு தேசியத்துக்கு சவால்விட்ட கலைஞர், அதே உணர்வை இப்போது வெளிப்படுத்தும் சீமான்களை சிறையில் அடைப்பது ஏன்?

நன்றி - பெரியார் முழக்கம்


| | Read More »

தமிழ்நாட்டில் தொடரும் கைதுகள் இன்று காலை பெரியார் திக தலைவர் கொளத்தூர் மணி கைது

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணியை திண்டுக்கல் காவல்துறையினர் இன்று காலை 7.30 மணிக்கு சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அவரது பொன்னகர் வீட்டில் வைத்து கைது செய்தனர்.

பெப்ரவரி 26ம் திகதி திண்டுக்கல்லில் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக 3 பிரிவுகளின் கீழ் திண்டுக்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் விசாரணை செய்வதற்காக அதிகாலை 3 மணியளவில் திண்டுக்கல் காவல்துறையினர் கொளத்தூர் மணி வீட்டுக்கு வந்தனர்.

அப்போது அவர், நான் ஓய்வு எடுக்கவேண்டியிருக்கு. காலை 7மணிக்கு வாருங்கள் என்று சொல்லியனுப்பினார். கொளத்தூர் மணியை விசாரனைக்கு அழைத்து செல்லவிருக்கும் விடயம் அவரது ஆதரவாளர்களுக்கு தெரியவர அதிகாலை முதலே அவர் வீட்டுமுன் குவிந்துவிட்டனர்.

அவர் வீட்டுமுன்பு பாதுகாப்பிற்காக அதிகளவு காவலர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இன்று காலை 7.30 மணிக்கு அவர் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

தனது தோட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்ததற்காகவும் , கர்நாடகவாழ் தமிழர்களுக்காக போராடியதற்காகவும் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர். சில நாட்களுக்கு முன்புதான் ஈரோடு நிகழ்வில் பேசியதற்காக ஒரு மாதம் சிறை சென்று வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

| | Read More »

ஈழத்தமிர்கள் பற்றி கவலைப்படவில்லை பிரபாகரனை பிடிப்பதில்தான் காங்கிரஸ் முனைப்பு - நாஞ்சில்

ஈழத்தமிர்கள் பற்றி காங்கிரஸ்காரர்கள் கவலைப்படவில்லை பிரபாகரனை பிடிப்பதில்தான் முனைப்பு காட்டுவதாக ம.தி.மு.க. மாநில கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நாகர்கோவில் பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் நடைபெற்ற அரசியல் விளக்கமளிக்கும் பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

உலக நாடுகள் அனைத்தும் போரை நிறுத்துங்கள் என்று வலியுறுத்துகின்றன. ஆனால் இந்தியா மட்டும் நேரடியாக போரை வலியுறுத்துமாறு சொல்லவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி தமிழ் ஈழத்தை தவிர வேறொன்றுமில்லை.

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் பேசவே மறுக்கிறார். போரை நிறுத்துமாறு மத்திய அரசை நிர்பந்திக்க கருணாநிதியால் முடியவில்லை. ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அடிக்கடி புலம்புகிறார்.

மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த கோட்சே சுட்டுக் கொன்றவுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒருவன் செய்த தவறுக்காக ஒரு இயக்கத்திற்கு தடை விதிப்பது சரியல்ல என நினைத்த அப்போதைய காங்கிரஸ் உள்துறை அமைச்சர் வல்லபாய்பட்டேல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்க அரும்பாடுபட்டார். அதே போல் விடுதலைபுலிகள் மீதான தடையை நீக்க இன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முயற்சி எடுப்பாரா?

அங்கே ஒரு இனம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே இருப்பவர்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள் என்கிறீர்கள். ஆயுதத்தை கீழே போட்டு விட்டால் அடுத்து விநாடியே அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டுவிடுவார்கள்.

காங்கிரஸ்காரர்களின் ஒரே நோக்கம் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்பதுதான் தவிர இலங்கை தமிழர்களை பற்றி கவலைப்படவில்லை. பிரபாகரனை பிடித்தால் இலங்கையே அழியும். அதில் சந்தேமே இல்லை.

| | Read More »

தமிழர் பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்காக புரூஸ் பின் லண்டனுக்கு விஜயம்

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்காகவும் தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்வதற்காகவும் அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்ட மா புரூஸ் பின் லண்டனுக்கு விஜயம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெற்று வரும் சிவில் யுத்தம் குறித்து புரூஸ் பின் விசேட உரையாற்ற உள்ளதாகவும், தற்போது இடம்பெற்று வரும் யுத்த நிலவரம் குறித்து பிரித்தானிய அரசியல்வாதிகள் புத்திஜீவிகள் மற்றும் சிவிலியன்களுடன் புரூஸ் பின் கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகனின் ஆட்சி காலத்தில் புரூஸ்பின் பிரதி சட்ட மா அதிபராக கடயைமாற்றிய இவர் இலங்கை பிரச்சினையில் கூடிய கவனம் எடுத்துள்ளதுடன் அமெரிக்க பிரஜையாக இருந்து கொண்டு இலங்கையில் தமிழ் மக்கள் மீது போர் தொடுக்கும் சரத் பொன்சேக்கா, மற்றும் ஜனாபதிபதியின் சகோதரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரி்கை தாக்குதல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புரூஸ் பின் கலந்து கொள்ளும் கூட்டங்களில் பெருமளவு இலங்கைத் தமிழர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


| | Read More »

யேர்மனியில் நூறன்பேர்க், லண்டோ நகரங்களில் ஊர்வலங்கள் முன்னெடுப்பு.

தமிழ்இன அழிப்பை நிறுத்துவதற்கு யேர்மனிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி தமிழ்கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தால் நேற்று சனிக்கிழமை யேர்மனி நூறன்பேர்க் நகரில் கண்டன ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஊர்வலத்தில் தமிழ்மக்கள் சிறீலங்கா அரசபடைகளால் கொல்லப்படுவதை எடுத்துக்காட்டும் பதாதைகள் மற்றும் தமிழீழத்தேசியத் தலைவரின் படங்கள் தமிழீழத் தேசியக்கொடி என்பவற்றை மக்கள் தாங்கிச் சென்றதுடன் ஊர்வல முடிவின் யேர்மனி அரசுத்தலைவருக்கான மகஐர் வண.பிதா அன்ரனி பாலா அவர்களால் நூறன்போர்க் நகர முதல்வரிடம் கையளிக்கப்பட்டது

இதே வேளை லண்டோ நகரமக்களாலும் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்படதுடன் நகரமுதல்வரிடம் மகஐர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.


| | Read More »

மும்பையில் 25 கிலோமீற்றர் நீளத்திற்கு மனித சங்கிலி – கட்சி பேதமின்றி அனைவரும் பங்கேற்பு

ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்கள் மீதான தாக்குதலை சிறீலங்கா அரசு நிறுத்த வேண்டும், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும், தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும், இந்தியா துரோகத்தனத்தை நிறுத்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் இதே முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பிற்பகல் 3:00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் அரசியல், மதம், சாதி பேதங்கள் இன்றி 25,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழின முன்னேற்றம், விடுதலை, சுய மரியாதை போன்ற அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு கடந்த 3 மாதங்களின் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மும்பையின் “வழித்தெழு இளைஞர் இயக்கம்” இந்த மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த மனித சங்கிலியில் கட்சிகளின் பதாகைகள், துண்டுகள் மற்றும் அடையாளங்கள் சகிதம் கலந்துகொள்ள முற்பட்ட சிலர் மக்களால் அகற்றப்பட்டு அங்கிருந்து நீக்கப்பட்டதுடன், சுயநல இனத்துரோகிகள் என மக்களால் குற்றம் சுமத்தப்பட்டனர்.

மூன்று மாதங்களின் முன்னர் இனமத பேதமின்றி ஆரம்பிக்கப்பட்ட தமது “விழித்தெழு இளைஞர் இயக்கத்தால்” கட்சி பேதமின்றி மக்களின் உணர்வுகளை வெளிக்கொண்டுவர முடியும் என்றால், அரசியல் கட்சிகள் இதனை உதாரணமாகக் கொள்ள வேண்டும் என, “வழித்தெழு இளைஞர் இயக்கம்” அழைப்பு விடுத்துள்ளது.


| | Read More »

முன்னாள் போராளி சாத்திரியுடன் ஒரு பேட்டி

விடுதலை புலிகள் இயக்கத்தில் பங்காற்றிய அனுபவம் உள்ள பதிவர் திரு. சாத்திரி அவர்களுடன் ஒரு பேட்டி காண வேண்டும் என்று நெடுநாளைய ஆவல் எனக்கு இருந்தது. தமிழ் சசியின் பேட்டியுடன் ஒரு போராளியின் பேட்டியையும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். போராட்ட கால அனுபவங்களை விசாரித்து விரிவாக பேசியிருக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி ஈழச்சிக்கல் நகர வேண்டிய சூழலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவற்றை கேள்விகளாக கேட்டு பதில் பெறுவதே தற்போதைக்குத் தகும். அரசியல் தீர்வை அடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை போராளிகளை சந்தித்து வீர காவியங்களை சிலாகிப்போம்.

ணிகளுக்கு மத்தியில் எனது வலைப்பூவிற்காக அவர் நேர்முகம் தர ஒப்புக்கொண்டமைக்கும், நேரம் ஒதுக்கியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இப்போதும் இருக்கிறீர்களா? இயக்கத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளீர்களா?

நான் புலிகள் இயக்கத்தில் இப்பொழுது உறுப்பினராக இல்லை. ஆனால் ஈழத்தமிழரின் நியாயமான போராட்டத்திற்கு தொடர்ந்தும் என்னாலான அனைத்து உதவிகளையும் செய்தபடிதான் இருக்கின்றேன்.

போராளி இயக்கத்தில் நீங்கள் இணைந்ததன் பின்னணி என்ன? இயக்கத்தில் இருந்தபோது எம்மாதிரியான பங்களிப்பை செய்தீர்கள்?

போராட்ட இயக்கத்தில் நான் இணைந்ததற்கு காரணம் 83 ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம்தான். எல்லோரையும் போலவே எந்தக்கவலைகளுமற்ற ஒரு பள்ளிமாணவனாக திரிந்தகாலம். இலங்கை அரசியல் பற்றியோ போராட்டம்பற்றியோ எவ்வித அக்கறைகளும் இல்லாமல், படிப்பு, விளையாட்டு, களவாய் படம்பார்த்தலென்று திரிந்த கனாக்காலங்கள் அவை. அப்படித்திரிந்த 83ம் ஆண்டு யூலைமாதம் 24ந்திகதி பாடசாலைக்கு போய்க்கொண்டிருந்தபொழுது வாகனத்தில் வந்த இலங்கை இராணுவதினர் எங்கள் பாடசாலை வாசலில் இறங்கி கண்மூடித்தனமாய் துப்பாக்கியால் சுட்டு விட்டு சென்றார்கள். அதில் எனது பாடசாலை மாணவர்கள் மூவரும் நான்கு பொதுமக்களும் இறந்து போனார்கள்.இறந்துபோன மாணவர்களில் என்னுடைய வகுப்புத்தோழனும் ஒருவன். அதுதான் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. அந்த மாணவனை கொல்லுமளவிற்கு அவன் செய்த குற்றமென்ன? அவனது எதிர்காலத்தை எப்படியெல்லாமோ கனவு கண்ட அவனது தாய் தந்தையர்கள் செய்த குற்றமென்ன? அதில் இறந்து போன மற்றைய பொதுமகள் ஏன் கொல்லப்பட்டார்கள்? இப்படி பல கேள்விகள். அதனைத்தொடர்ந்து யூலை 25-26ந்திகதிகளில் நடந்தேறிய தமிழினப்படுகொலையும் அனைத்து உடைமைகளையிழந்து யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய சம்பவங்களும் காரணமாய் அமைந்துவிட்டது. பின்னர் இயக்கத்தில் இணைந்த பின்பு அதன் உறுப்பினர்கள் என்னென்ன பங்களிப்பினை செய்வார்களோ அத்தனையையும் செய்தேன்.

விடுதலைப் புலிகளின் வரலாறை சுருக்கமாக இங்கு கூற முடியுமா?

விடுதலைப்புலிகளின் வரலாற்றினை ஒரு கேள்வி பதில் பகுதியில் ஒரு பதிலில் சுருக்கமாக கூறிவிடமுடியாது. ஆயுதவிடுதலைப்போரின் ஆரம்பம் பற்றி அதனுடன் சம்பந்தப் பட்டவர்கள் பெரும்பாலானவர்களின் உதவியுடன் ஒரு புத்தகத்தை எழுதும் பணியில் இருக்கிறேன். ஆனால் இயந்திர வாழ்வாகி விட்ட புலம்பெயர் சூழலில் வேறு பல பணிகளையும் செய்துகொண்டு புத்கத்தினையும் எழுதி முடிப்பது சிரமமாகவே உள்ளது. முடிந்தளவு விரைவில் அதனை எழுதி முடிப்பேன் அதில் ஈழப்போராட்ட வரலாறு விரிவாக இருக்குமென நினைக்கிறேன்.

விடுதலைப் புலிகளின் இன்றைய உண்மையான பலம் என்ன? அவர்கள் இப்போது பின் வாங்குவது உண்மையா?

விடுதலைப்பலிகளின் இன்றை பலம் மட்டுமல்ல ஆரம்பகாலத்திலிருந்தே அவர்களது பலம் வெளியில் எவரிற்குமே தெரியாது. அதுதான் அவர்களது பலம். காரணம் அவர்களிடம் ஆட்பலம் ஆயுத பலத்தைவிட ஆன்மபலமே பல சமர்களின் திருப்பு முனையாக அமைந்தது.எனவே ஆன்மபலத்தை அளவிடமுடியாது. அடுத்தது புலிகளின் பின்வாங்கல்கள் இதுதான் முதற் தடைவையல்ல. இதற்கு முன்னரும் பலதடைவைகள் பல இராணுவ அதிகாரிகளும். அரசியல் வாதிகளும் இதுதான் புலிகளின் கடைசிக்காலம் என்று அடித்துச்சொன்னபொழுதெல்லாம். அதிசயிக்கத்தக்க விதத்தில் பாய்ந்திருக்கிறார்கள். இது நானொன்றும் புழுகவில்லை. புலிகளின் உண்மையான வரலாறு.

ர்வதேசத்தில் இழந்த ஆதரவை மீண்டும் பெறக் கூடிய வாய்ப்பு சிறிது ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?

ர்வதேசத்திடம் இலங்கையரசுஆதரவை இழந்து வருகிறதென்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். மற்றபடி சர்வதேசத்தின் ஆதரவு என்பதே அவர்களது பொழுளாதார நலன்களின் அடிப்டையில்தான் என்பது சாதாரண பொதுமகனிற்கும் தெரிந்த விடயம். மனிதவுரிமை என்பதெல்லாம் அடுத்தபட்சம்தான். தமிழர்தரப்பி்ல் சர்வதேசத்திற்கு பெரியளவில் பொருளாதார நலன்கள் எதுவும் கிடையாது. எனவே சர்வதேசத்திடம் ஜயோ என அலறுவதைவிட தமிழன் தன்னுடைய பலத்தினை நிருபித்தால்தான் சர்வதேசத்தின் ஆதரவு எமது பக்கம் திரும்பும் என்பது என்னுடைய கருத்தாகும்.

டேல் - ஹிலாரி சந்திப்பு உண்மையா? அதுபற்றி தகவல்கள் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?

டேல்-ஹிலாரி சந்தித்தது உண்மையல்ல என்று புலிகள் அமைப்பே தெரிவித்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மிழகத் தமிழரின் தற்போதைய ஆதரவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது சரியான திசையில் போகிறதா? அல்லது சரியான தலைமை இன்றி தத்தளிக்கிறதா?

மிழகம் தற்போது மட்டுமல்ல ஈழத்தமிழர்களிற்காக எப்பொழுதுமே ஆதரவாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் சில அரசியல் தலைவர்களினது சர்வாதிகாரப்போக்குகளினாலும், சுயநலஅரசியல் விளையாட்டுக்களினாலும், அதற்கு துணைபோன அதிகாரிகளினாலும், அவை இருட்டடிப்பு செய்யப்பட்டும், அடக்கியும் வைக்கப்பட்டிருந்ததுதான் உண்மை. நீறு பூத்த நெருப்பாயிருந்த அந்த ஆதரவு மீண்டும் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியுள்ளது.ஆனாலும் அதிலும் அரசியல்வாதிகளே குளிர்காயத்தொடங்கியுள்ளனர். ஈழத்திலும் 70களில் இதேபோன்ற நிலைமைதான் இருந்தது. ஆனால் ஈழத்து இளைஞர்கள் அரசியல் வாதிகளின் பின்னால் செல்லாமல் சரியானதொரு சுயநலமில்லாத விலைபோகாத ஒரு தலைமையை தெரிவு செய்து அதன்கீழ் அணிதிரண்டனர். அது போல தமிழகமும் சரியானதொரு தலைமையை அடையாளம் கண்டு அணிதிரளவேண்டும். இல்லாவிடில் தமிழகத்தின் இத்தனை எழுச்சிகளும் குடும்ப அரசியல் நடத்துபவர்களினதும் தமிழனையும் தமிழையும் மிதிப்பவர்களினதும் வாக்கு வங்கியை நிரப்பி விட்டு தமிழனின் உணர்வுகள் அனைத்துமே வீணாகி மரத்துப்போகும் நிலைதான் வரும்.

மிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி உங்கள் கருத்தை கூறுங்கள்

றிய குட்டைகள்தான் வேறு வேறே தவிர எல்லாமே மட்டைகள்தான்.



கோதர படுகொலைகள் என்று ஒருசாரர் கூவிக்கொண்டிருக்கிறார்களே அப்படி என்னதான் புலிகள் செய்தார்கள்? அவர்களின் நியாயம் என்ன?

டுத்ததற்கெல்லாம் மகாபாரதப்போரையும் கீதையையும் உதாரணத்திற்கு இழுத்துவைத்து கதைகதையாய் சொல்லி சிலாகிப்பவர்களிற்கு புலிகளின் யுத்தம் மட்டும் தர்மயுத்தமாய் தெரியாமல் சகோதரப்படுகொலையாய் தெரிகின்றது.சகோதரர்களிற்குள் பகையை வளர்ந்து மோதவிட்டதே இந்திய ஆட்சியாளர்களும்.உளவுத்துறையும்தானென்பதை அவர்களே மறுக்கமாட்டார்கள். தமிழரின் போராட்டம் சிதைந்து போகாமல் தடுப்பதற்காக மற்றைய இயக்கங்களை தடை செய்வதைத் தவிர வேறு வழி புலிகளிற்கு இருந்திருக்கவில்லை.
(சகோதர படுகொலைகள் பற்றி சாத்திரி எழுதிய பதிவு.)

ராஜீவ் கொலையை புலிகள் ஏன் வெளிப்படையாக மறுக்கவில்லை?

ராஜீவ் கொலையில் அவிழக்கப்படாத பல மர்மமுடிச்சுக்கள் ஏராளம் உள்ளது. அவைகள் அவிழ்க்கப்படுவதை இந்தியாவில் உள்ள அரசியல் வாதிகளும் அதிகாரிகளுமே விரும்பமாட்டார்கள். அதனால்தான் புலிகளின் அழித்துவிடுவதன் மூலம் அத்தனை ஆயிரம் கேள்விகளிற்கும் ஒரே வரியில் பதிலை சொல்ல முனைகிறார்கள்.

ழத்தமிழர்கள் அனைவருமே புலிகளை ஆதரிக்கிறார்களா?

ண்மையான மானமுள்ள தமிழர் அனைவருமே புலிகளை ஆதரிக்கின்றார்கள் அது ஈழம். இந்தியா .என்றில்லை உலகம் முழுவதுமே ஆதரிக்கின்றார்கள்.

னிஈழம் தவிர்த்த ஏதேனும் ஒன்று தமிழர் விடுதலையை தரக்கூடுமா? சமாதான பேச்சு வார்த்தை சரியான திசையில் போய்க்கொண்டிருந்த சமயத்தில் புலிகள் ஏற்றுக்கொண்டது தனிஈழம் தவிர்த்த ஏதோ ஒன்று தானே?

மிழனிற்காக சிங்களம் ஒரு மயிரையேனும் தரத்தயாராய் இல்லையென்பதே உண்மை. எனவே தனித்தமிழீழம் ஒன்றுதான் தீர்வு. ஆனால் சமாதானப்பேச்சு வார்த்தை காலத்தில் புலிகள் தரப்பில் புற சுய நிர்ணய உரிமை (சமஸ்டி) அதாவது சமஸ்டி அரசாங்கம் அமைந்தபின்னர் ஒரு வாக்கெடுப்பில் தமிழர்தரப்பின் 90 வீதமான வாக்குகள் விழுந்தால் தனியாகப்பிரிந்து போகும் உரிமையுடனான தீர்வையே கேட்டனர். ஆனாலும் எதுவும் கிடைக்காது என்று தெரிந்திருந்தாலும், புலிகள் பேச்சு வார்த்தையை விரும்புவதில்லை சண்டையையே விரும்புகின்றனர் என்கிற சிறீலங்காவின் பரப்புரையை புலிகள் சர்வதேச சமூகத்தின் முன்னால் தகர்த்திருந்தாலும். சண்டையை மட்டுமே விரும்புகின்ற சிறீலங்காவை இந்தியா தாங்கிப்பிடித்துள்ளது மட்டுமல்ல அதுவே சர்வதேசத்தின் வாயையும் அடைத்துள்ளது.

னிஈழம் தவிர்த்த ஒரு தீர்வு, இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை போன்ற ஒரு மிக பலவீனமான ஏற்பாடு தான் என்பதை எவ்வாறு விளக்குவீர்கள்.

1905 ம் ஆண்டில் இங்கிலாந்து அரசு காலத்தில் இருந்தே தமிழன் ஒவ்வொருவடிவங்களிலும் ஒவ்வொரு சட்டங்களிற்கமையவும் தனக்குரிய உரிமைகளை வன்முறையற்ற அனைத்து வடிவங்களிலும் கேட்டு கேட்டு களைத்து போனது மட்டுமல்ல எமது அத்தனை போராட்டங்களையும் ஆட்சியாளர்கள் வன்முறையை மட்டுமே கொண்டு அடக்கியதால்தான் தமிழனும் தானும் இனி எதிரியின் ஆயுதத்தையே பயன்படுத்தலாமென நினைத்து தனித்தமிழீழத்தில் மட்டுமே தமிழனால் சுதந்திரமாக வாழமுடியும் என்று முடிவெடுத்தும் வன்முறையை 70களில் கைகளில் எடுத்தான். இன்று தமிழகத்து நிலைமைகளும் ஈழத்தின் 70களின் காலத்தைத்தான் நினைவு படுத்துகின்றது

முஸ்லீம்களை அரவணைத்து செல்லாத புலிகள்; தமிழரை வெறுக்கும் சிங்களவர். -ஒப்பிடுங்கள்!

முஸ்லீம்களை புலிகள் அரவணைக்கவில்லையென்று ஒரேவரியில் மறுத்துவிட முடியாது.ஏனெனில் முஸ்லீம்கள் கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழின அழிப்பினை தாராளமாகவே மேற்கொண்டனர்.ஜிகாத் அமைப்பினரால் பல கிராமங்களில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டனர். வந்தாறு மூலை படுகொலைகள். கிழக்குப்பல் கலைக்களகப்படுகொலைகள். கொக்கட்டிச்சோலை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதே நேரம் யாழ்குடாவிலும் இலங்கையரசுடன் சேர்ந்து முஸ்லீம்களின் ஜிகாத் அமைப்பு புலிகள் மீதான தாக்குதலை நடாத்துவதற்கு பலசதித் திடட்டங்களைத்தீட்டியது அதில் பல முஸ்லீம்கள் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.அனாலும் அவர்களது பள்ளிவாசல் உலாமாக்களின் தலையீட்டினால் இனியொருதடைவை இப்படியான செயல்களில் ஈடுபடவேண்டாமென அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டுவினால் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரம் தமிழர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் பொதுஎதிரி சிங்களப்பேரினவாதம். அது முஸ்லீம்களை தமிழர்களுடன் மோதவிட்டு வேடிக்ககை பார்க்கின்றது.எனவே அதற்கு பலியாக வேண்டாமென தொடர்ச்சியாக பலபொதுக்கூட்டங்கள் வைத்தும் துண்டுப்பிரசுரங்கள் மூலமும் புலிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தனர். ஆனாலும் அவர்கள் தொர்ந்தும் இலங்கை இராணுவத்துடன் தொடர்ந்தும் சேர்ந்து இயங்கியது மட்டு மல்ல புலிகளை தாக்குவதற்காக கொண்டுவந்த ஆயுதங்களும் பிடிபட்ட நிலையில் தான் புலிகளின் நிருவாகப் பகுதிகளிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால் அவர்களின் செய்கைகளினால் ஆத்திரமடைந்திருந்த தமிழ்மக்களிற்கும் மேதல் ஏற்பட்டு முஸ்லீம்களிற்கு பாதகமானதாகவே முடிந்திருக்கும். அடுத்ததாய் தமிழரை சிங்களவர்கள் வெறுப்பதற்கு காரணம் சிறீலங்கா அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு சிங்களத் தலைவரும் தாங்கள் சுலபமாய் ஆட்சியைப் பிடிப்பதற்கு சிங்கள மக்களின் பொருளாதாரம் பற்றியோ நாட்டை வளம் படுத்துவது பற்றியோ பேசியதில்லை. இனவாதத்தினையே பேசி சுலபமாய் ஆட்சியை பிடித்துவந்துள்ளதே வரலாறாகும். அவர்கள் பேசிய இனவாதம் இன்று ஒவ்வொரு சிங்களவர் மனதிலும் ஆழமாய் பதிந்து விட்டது. இன்று தங்களிற்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை தமிழனிற்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்று நினைக்கின்ற நிலைமைக்கு சிங்கள மக்ளை ஆட்சியாளர்கள் கொண்டுவந்து விட்டனர். ஆனால் அதன் மோசமான விழைவுகளை ஆட்சியளர்களை விட சாதாரண சிங்கள மக்களே அனுபவிக்கின்றனர்.ஆனால் அவர்கள் அதனை புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.

தாழ்த்தப் பட்டவர்களின் நிலைமை தமிழகத்தை விட ஈழத்தில் மோசம் என்பது உண்மையா?

80களிற்கு முன்னர் இரட்டை குவளை முறை. கோயில்களின் உள்ளே அனுமதி மறுப்பு, பொது இடங்களில் அவமதிப்பு என்று தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை மேசமானதாகவே இருந்ததை மறுக்கமுடியாது.புலிகள் ஆயுதப்போராட்டத்தை எப்படி தீவிரப்படுத்தினார்களோ அதேபோல சாதிய விடயங்களையும் இரும்புக்கரம் கொண்டே அடக்கினார்கள். அவர்களது நிருவாகம் நடந்த பகுதிகளில் சாதியம் முற்று முழுதாகவே ஒழிக்கப்பட்டிருந்ததுஎன்பது உண்மை. ஏனெனில் அவர்கள் நிருவாகம் நடாத்திய காலங்களில் ஒரு சாதிய சண்டையுமே நடைபெறவில்லையென்பதும் சாதியின் பெயரால் எவரும் ஒதக்கப்படவில்லையென்பதுமே அதற்கு உதாரணமாகும்.

க்கள் இல்லாத பகுதிகளை கைவிட்டு மக்களடர்ந்த பகுதியில் புலிகள் போரிடவேண்டிய நிலைமை / காரணம் என்ன?

தாவது மக்களை புலிகள் கேடயமாகப் பயன்படுத்துகிறார்களா என்பதுதானே உங்கள் கேள்வி. இதுவரை காலமும் நடந்த யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் அல்லது காணொளிகளில், படங்களில் மக்களுடன் சேர்த்து புலிகளும் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லாம். அதுமட்டுமல்ல யுத்த களத்தில் நிற்கும் செஞ்சிலுவை சங்கமே அப்படியானதொரு செய்தியையோ ஆதாரங்களையோ வெளியிடவில்லை. இவை தமிழர்கள் மீதான கொலையை இலங்கையரசு நியாயப்படுத்துவதற்கான ஒரு பிரச்சாரமேதான்.

லைவுலகம் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான அச்சு ஊடகங்கள் போன்றவற்றில் இருக்கும் ஈழ ஆதரவு போதுமானதாக உள்ளதா? தமிழகத்தில் இன்னும் ஈழ விழிப்புணர்வு அற்றவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!

மிழகத்தினை பொறுத்தவரை வலையுலகத்தில் அக்கறையாக ஈழம்பற்றி அறிந்துகொள்பவர்கள் எத்தனைவீதம் எனத்தெரியாது. ஆனால் அச்சு ஊடகம் என்று பார்த்தால் அது ஒரு குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் பிடியிலேயே உள்ளது. தமிழனை தமிழில் சிந்திக்கவிடக்கூடாதென்பதே அவர்களது முதல் நோக்கம்.இல்லா விட்டால் தமிழன் தமிழில் வழிபாடு செய்வதற்கும். தமிழ்நாட்டில் தமிழன் தமிழில் கல்வி கற்பதற்காகவும் போராடவேண்டிய நிலை வந்திருக்குமா? இந்த உலகத்தில் எந்த ஒரு சுதந்திர நாட்டிலாவது ஒரு இனம் தன்னுடைய மொழியில் வழிபாடு செய்யவும் தன்னுடைய மொழியில் கல்வி கற்கவும் பேராட்டம் நடாத்தியிருக்கின்றதா? இப்படி தமிழ் நாட்டிலேயே தமிழன் தான் என்ன நிலையில் இருக்கிறானென்று தெரியாத நிலையில். தமிழ்நாட்டு தமிழனிடம் ஈழத்தமிழனின் போராட்டத்தைப்பற்றி என்ன அறிந்து வைத்திருக்கின்றாயென்று கேட்க முடியுமா?

நீங்கள் வாழும் நாட்டில் உள்ள ஈழ ஆதரவு எத்தகையது? புலம் பெயர் தமிழர்களையும் அவர்களின் பங்களிப்பையும் குறிப்பிடுங்கள்.

நான் வாழும் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களிடம் ஈழ ஆதரவு எவ்வளவு தூரம் உள்ளதென்று நான் சொல்லத்தேவையில்லை இங்கு நடக்கும் ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்கள் பற்றிய செய்திகளே போதும். அவர்கள் தங்கள் உறவுகளின் துயர் துடைக்கவும் போராத்தினை தொடர்ந்து நடாத்தவும் அனைத்து உதவிகளையும் வழங்கிக் கொண்டுதானிருக்கின்றார்கள். ஆனால் எதிரிக்கு விலைபோய் தமிழினத்திற்கு எதிராக செயற்படும் ஒருசிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். வரலாறு என்பது உண்மையான வீரத்தை மட்டுமல்ல கோழைத்தனமான துரோகங்களையும் பதிவு செய்துகொண்டுதானே போய்க்கொண்டிருக்கின்றது.அந்த துரோகப் பக்கங்கள் அவர்களது பெயர்களையும் பதிவுசெய்துகொண்டு போய் நாளைய எமது சந்ததிகளின் கைகளில் படிக்கக் கொடுக்கும்.

ங்கள் முழுப்பெயர், சொந்த ஊர், வாழிடம், குடும்பம் மற்றும் முக்கிய பணி கூறுங்கள்.

நான் சாத்திரி என்கிற புனைபெயரில் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் எழுதிவந்தாலும் சொந்தப் பெயர் சிறி ஈழத்தில் மானிப்பாய்க் கிராமத்தை சேர்ந்தவன். தற்சமயம் பிரான்சில் வசித்து வருகிறேன்.

http://mohankandasami.blogspot.com/2009/03/blog-post.html

| | Read More »