பின்லாந்து தலைநகர் கெல்சிங்கியில் மேநாள் ஊர்வலம்

பின்லாந்தின் தலைநகர் கெல்சிங்கியில் அமைந்துள்ள மத்திய பேருந்து தரிப்படத்தின் முன்பாக காலை 10.30 மணியளவில் மேநாள் ஊர்வலம் ஆரம்பமாகியது
பல்லாயிரக்கணக்கான பின்லாந்து மக்களுடன் தமிழ் மக்களும் இணைந்து இவ் ஊர்வலத்தை சிறப்புடன் நடத்தினர்.

இவ் ஊர்வலமானது, மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகி Hakaniemi என்னுமிடத்தில் நிறைவு பெற்றது.

சுமார் 4 கி்.மீ. தூரம் இவ் ஊர்வலம் நகர்ந்து சென்றது. இதன்போது தமிழ் மக்களால் எமது தேசியக்கொடி, தேசியத்தலைவரின் புகைப்படம், இனவழிப்பைச் சுத்திகரிக்கும் பதாதைகள் என்பன தாங்கிச் செல்லப்பட்டன.

சிறிலங்கா அரசே! தமிழின அழிப்பை நிறுத்து!

சிறிலங்கா அரசே! இனச்சுத்திகரிப்பை நிறுத்து!

சர்வதேசமே! தமிழீழத்தை அங்கீகரி!

போன்ற கோசங்கள் தமிழ் மக்களால் எழுப்பிச்செல்லப்பட்டதோடு, செல்லும் பாதையெங்கும் குழுமி நின்ற ஏராளமான மக்களுக்கு எமது போராட்ட விபரங்கள் உள்ளடங்கிய துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. இதனால் பல மக்களினது கவனமும் எம்பால் ஈர்க்கப்பட்டது.

பின்னர் மதியம் 12.00 மணியளவில் இவ் ஊர்வலம் நிறைவு பெற்றது.

| | Read More »

மெல்பேர்னில் நடைபெற்ற மெழுகுவர்த்தி ஊர்வலமும் சர்வமத பிரார்த்தனையும்.

மரணப்பிடியில் சிக்கி தினமும் மாண்டு கொண்டிருக்கும் தமிழ் உறவுகளுக்கு விடிவு வேண்டி ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் இன்று வெள்ளிக்கிழமை ஒளிதீப ஒன்றுகூடலும் அதை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஊர்வலமும் பின்னர் சர்வமத பிரார்த்தனையும் நடைபெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மெல்பேர்ன் நகரின் மத்தியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது உறவுகளுக்கு விடிவு வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

இரவு 7 மணியளவில் அங்கு எழுச்சி உரைகள் இடம்பெற்றன. ஈழத்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தர்மா, தமிழகத்தை சேர்ந்த ஈழத்தமிழ் உணர்வாளர் அசோகராஜன், வணக்கத்துக்குரிய உதயன், செல்வி நர்மதா, மற்றும் ஆஸ்திரேலிய இடதுசாரி கட்சியை சேர்ந்த ட்ரெண்ட் ஆகியோர் எழுச்சி உரைகளை நிகழ்த்தினர்.

இதேவேளை, வழமை போலவே மிகுந்த சனமாட்டம் மிக்க பிரதேசமாக காணப்பட்ட இன்றைய வெள்ளி இரவில் பல்லின மக்கள் பலரும் வந்து இந்த போராட்டம் பற்றி கேட்டறிந்தனர்.

தமது நாட்டு ஊடகங்களில் வெளிவராத தமிழ் மக்களின் இந்த படுகொலை செய்திகளை கேட்டு அதிர்ச்சியுற்றவர்களாக, தமது மின்னஞ்சல் முகவரிகளை தந்து, தாயக நிலைவரம் தொடர்பான செய்திகளை தமக்கு தொடர்ந்து தெரியப்படுத்துமாறு கோரிச்சென்றனர்.

இன்றைய கவனயீர்ப்பு பேரணியிலும் பெருந்தொகையான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. போராட்டத்தில் கலந்தகொண்டவர்கள் ஒரு கையில் மெழுகுவர்த்தியும் மறுகையில் பதாகைகளையும் ஏந்திநின்றனர்.

இரவு 7.30 மணியவில் அங்கிருந்து ஊர்வலாமாக புறப்பட்ட மக்கள் சுவான்ஸ்டன் வீதி வழியாக சென்று கொலின்ஸ் வீதியூடாக நகர்ந்து விக்டோரிய திறைசேரிப்பூங்காவுக்கு பின்னாலுள்ள சென். பீற்றர்ஸ் தேவாலயத்தை சென்றடைந்தனர்.

அங்கு சென்றடைந்த இந்த அமைதிவழி ஊர்வலம் பின்னர் தேவாலயத்தினுள் சென்று சர்வமத பிரார்த்தனையில் ஈடுபட்டது. கத்தோலிக்க திருச்சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரார்த்தனை நிகழ்வில் அனைத்து மத வழிபாடுகளும் இடம்பெற்றன.

மரணத்தின் பிடியில் சிக்கி மாண்டு கொண்டிருக்கும் தாயக உறவுகளுக்கு விரைவில் விடிவு பிறக்கவேண்டும் என்று இந்த பிரார்த்தனைகள் நடைபெற்றன. பிராத்தனையின் இறுதியில் ஆலய பேராயர் ஆசிச்செய்தி வழங்கையில் "துன்பப்படும் தமிழ்மக்களுக்கு நிரந்தரமான விடிவு ஒன்று கிடைக்கும்" என ஆசி தெரிவித்தார்.

இரவு 10.15 மணியளவில் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

| | Read More »

சிறீலங்கா - இந்தியாவின் கூட்டுச்சதி க்கு பதிலடி இராணுவ இணையத்தளம் முடக்கம்

சிறிலங்கா இராணுவத்தினரின் உத்தியோக பூர்வ இணையத்தளம் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளத்தினை திறக்கும் போது, அரசாங்கம் செய்து வந்த இனப்படுகொலைகள் குறித்து விபரிக்கும் புகைப்படங்கள் மாத்திரமே காட்டப்படுகின்றன.

தமிழீழ ஆதரவாளர்கள் சிலரால் இந்த இணையத்தளம் முடக்கப்பட்டு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள இனப்படுகொலை சம்பவங்களை அதில் பிரசுரித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் கடந்த 15 மணித்தியாலங்களில் 5600 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதை செய்தவர்களுக்கு எமது நன்றிகள்

இவ்வாறு தமிழர்களுக்கு எதிரான இணயத்தளங்களையும் செய்து சிறிலங்காவினதும் அதன் அருவருடிகளினதும் பொய் பிரச்சாரங்களை முடக்க வேண்டும்

தமிழ் தேசிய ஊடகங்களை குறிவைத்து அழிக்கும் சிறீலங்கா - இந்தியாவின் கூட்டுச்சதி

| | Read More »

போர் நிறுத்தப்படும் வரை நிறுத்தமற்ற போராட்டம்: நியூயோர்க் ஐ.நா. சபை முன்றலில் தமிழர்களால் முன்னெடுப்பு

சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உடனடிப் போர் நிறுத்தத்ததை ஏற்படுத்தக்கோரி சுழற்சி முறையில் தொடர் நினைவூட்டல் போராட்டம் ஐந்தாவது நாளாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி சூசன் றைசின் ஐ.நா. செயலகத்தின் முன்பாக - தொடர்ந்து இரவு பகலாக - இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது.

நியூயோர்க் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் வசிக்கும் தமிழ் மக்களால் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் இப்போது - அயல் மாநிலங்களிலும் கனடாவிலும் இருந்தும் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.



தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்ட நிலையில் சிறிலங்கா அரசும் - சொல்லிலும் செயலிலும் - போரை நிறுத்தும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என இந்த நினைவூட்டல் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"150,000 மக்கள் சிங்கள இராணுவத்தினால் படுகொலை செய்யப்படும் அபாயத்தில் இருக்கின்றனர்"

"போரின் ஆயுதமாக சிறிலங்கா அரசு பட்டினியைப் பாவிக்கின்றது"

"சுதந்திர ஊடகங்கள் வெளியேற்றப்பட்டு, இனப்படுகொலை இரகசியமாக செய்யப்படுகிறது"

"'பாதுகாப்பு வலயம்' 'கொலைக் களமாக' ஆக்கப்பட்டுவிட்டது"

"தமிழீழ விடுதலைப் புலிகள் எமது சுதந்திரப் போராளிகள்"

போன்ற விடயங்கள் இந்த போராட்டத்தில் வைத்து வழங்கப்படும் துண்டுப் பிரசுரங்களிலும் அங்கு வைக்கப்பட்டுள்ள பதாகைகளிலும் காணப்படுகின்றன.



மேலும் -

- விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் உடனடியானதும் நிரந்தரமானதுமான போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்

- இடம்பெயர்ந்தோர் வாழ்விடங்கள் ஐ.நா அமைப்புக்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும்

- போர் பிரதேசத்திற்குள் செல்ல சுதந்திர ஊடகங்களுக்கும் மற்றும் தொண்டர் அமைப்புகளுக்கும் உடனடியான அனுமதி வழங்கப்பட வேண்டும்

என்பவை இந்த நினைவூட்டல் போராட்டத்தின் பிரதான கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

அமெரிக்காவிலும் கனடாவிலும் பரந்து வாழும் தமிழர்களை இந்தப் போராட்டத்தில் பெருமளவில் வந்து தொடர்ந்து கலந்துகொள்ளுமாறும் அவர்கள் கோருகின்றனர்.

இந்த நினைவூட்டல் போராட்டம் பற்றிய மேலதிக விபரங்கள் இந்த இணைப்பிலே உள்ளது -

http://www.tamilnaatham.com/advert/2009/apr/20090428/USA/




| | Read More »