பிரித்தானியாவில் ரிம் மார்ட்டினின் 13 வது நாள் பட்டினிப் போராட்டமும்; இலங்கையில் தடுப்பு முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதிபலிப்பும்

தமிழ் மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அகற்றி ஒரு காட்டை அழித்து தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான புலம்பெயர் தமிழர் போராட்டத்தில் நேற்று( 30.05.09) பிரித்தானியாவில் பல்வேறு விதமான கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தடுப்பு முகாம்களில் தவிக்கும் தமிழ் மக்களை காப்பாற்றும் நோக்கத்துடன் 4 அம்ச கோரிக்கையை முன்வைத்து 13 வது நாளாக தமிழ் மக்களின் பிரதியான ரிம் மார்ட்டின் அவர்கள் ஆகாரம் அற்ற பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.

இவருக்கு ஆதரவாக 5 தாய்மார்கள் தொடர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரித்தானியா மக்களுக்கு இலங்கையில் தடுப்பு முகாம்களில் வாழும் மக்களின் அவலத்தை பிரதிபலிக்கும் முகமாக இலண்டன் மையப் பகுதியில் ஒன்றான Trafalgar அல்கர் சதுக்கத்தில் இளையோரால் தெரு நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது.

அதிகமான சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியாக அமைந்திருந்ததால் பல சுற்றுலா பயணிகள் இந்த தெரு நாடகத்தை கூர்மையாக உன்னிப்பாக அவதானித்து பார்த்தனர். அவர்களுக்கு தமிழ் மக்களின் அவலத்தை தாங்கிய துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டது.

இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் அமைப்பினரால் சிறிலங்கா போரில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் அவர்களின் உறவினர்கள் மூலம் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் சேகரிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி துருக்கி மற்றும் தமிழ் மக்களின் அவலத்தை அகண்ட திரையின் ஊடாக பிரித்தானிய மக்களுக்கு வெளிக்காட்டினர்.

| | Read More »

இலங்கையில் ஏற்பட்ட தமிழ் பொதுமக்கள் இழப்பிற்கு இந்தியா பொறுப்பேற்கவேண்டும்: இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி

இலங்கையில் சுமார் 20 ஆயிரம் பொதுமக்கள் கடந்த மாதம் வன்னியில் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்டமைக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும் என இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினர் நிலைகொண்டிருந்த போது அதன் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா இலங்கையின் இந்த யுத்தத்தில் இந்தியா பொறுப்பற்ற ரீதியில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தியா பொதுமக்களின் இழப்புகளை தவிர்ப்பதில் தோல்வி கண்டுள்ளதாக இரண்டு சர்வதேச மனித உரிமை குழுக்கள் குற்றம் சுமத்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

களத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே இந்தியா இந்த விடயத்தில் நடத்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 60 மில்லியன் தமிழர்களை புறக்கணித்து இலங்கைக்கு இராணுவ தளபாடங்களும் பயிற்சிகளும் புலனாய்வு ஊக்குவிப்புகளும் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தன.

அத்துடன், சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஈடாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா இலங்கைக்கு ஆயுத விற்பனையை கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வந்ததாகவும் மேத்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

| | Read More »

இத்தாலி மாந்தோவா மாநகரின் கஸ்தல் கோல்ப்ரதோ எனும் இடத்தில் நடைபெற்ற நினைவு அஞ்சலியும் கண்டனப் போராட்டமும்

31-05-2009 ஞாயிற்றுக்கிழமை இத்தாலி மாந்தோவா மாநகரின் கஸ்தல் கோல்ப்ரதோவிலுள்ள பியாட்சா மர்திரியில் காலை 9.35 மணியளவில் நினைவு அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகியது. பொதுச்சுடரினை இத்தாலி மேற்பிராந்திய தமிழர் ஒன்றியத்தின் மாந்தோவா பொறுப்பாளர் திரு. தோமஸ் மரியதுரை அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து எமது மண்ணின் சுதந்திரத்திற்கான வேள்வியில் தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களுக்கும் சிங்கள இனவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எமது கல்லறைப்

பாசறையில் கலந்துகொண்ட அனைத்து மக்களும் மலர்வணக்கம் செலுத்தினர்.

http://farm4.static.flickr.com/3567/3584274673_50b3de3b74.jpg?v=0

http://farm4.static.flickr.com/3365/3585081216_35607b281e.jpg?v=0

நிகழ்வில் அடுத்ததாக வரலாற்று உரை செல்வி ஸிந்து அவர்களால் அளிக்கப்பட்டது. நிகழ்வின் ஆரம்ப உரை திரு. வேலுப்பிள்ளை செந்தில்நாதன் அவர்களால் வழங்கப்பட்டது. அடுத்த நிகழ்வாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அதனிடையே செல்வி ஜோதிகா குகதாஸ் அவர்களால் இத்தாலி மொழியில் நாட்டின் தற்போதைய நிலைகள் விளங்கவைக்கப்பட்டது. அடுத்ததாக செல்வி கஜசிந்திகா லலிதகுமார் இத்தாலி மொழியில் உரையாற்றினார். இந்நிகழ்வில் இறுதியாக திரு. வேலுப்பிள்ளை செந்தில்நாதன் நன்றியுரை வழங்க நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற தாயகப் பாடலுடன் நண்பகல் 12.45 மணியளவில் நிறைவுபெற்றது.

http://farm3.static.flickr.com/2434/3585081320_50d10d0071.jpg?v=0

| | Read More »

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற மாபெரும் பேரணி: 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு

சிறீலங்கா அரசுமேற்கொண்ட தமிழ்இனஅழிப்பிற்கு உரியவிசாரனைகள் ஐ.நாடுகள் சபை மேற்கொண்டு போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரசிற்கு உரியதண்டனை வழங்கவேண்டும் எனக்கோரியும் சிறீலங்கா அரசபடைகளின் தடுப்புமுகாம்களில் உள்ள தமிழ்மக்களை ஐக்கியநாடுகள் சபை பொறுப்பெடுத்து

அம்மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கோரியும் யேர்மன் தலைநகர் பெர்லின் நகரில் மாபெரும் பேரணி ஒன்று தமிழ்மக்களால் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

பேர்லின் வெளிநாட்டு அமைச்சிற்கு முன்பாக நேற்று காலை 11.30 க்கு ஆரம்பித்த பேரணி மதியம் 2.30 மணிக்கு பேர்லினில் பிரசித்தி பெற்ற பிறன்பேர்க்க ரோர் எனும் இடத்தைச் சென்றடைந்தது

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இம் மாபெரும் பேரணி பல கிலோமீற்றர் தூரத்தை மக்கள் வெள்ளமாக நிறைத்திருந்ததது

http://cache.daylife.com/imageserve/04vS08NcYC7bK/610x.jpg

யேர்மனியின் பிரதான வீதிகள் ஊடாக நகர்ந்த இப்பேரணியில் பங்கொண்ட மக்கள் தாயகத்தில் மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படங்கள் மற்றும் அம்முகாம்களில் மக்கள் படும் அவலத்தை விளக்கும் சுலோகங்களைத் தாங்கிச் சென்றதுடன் தேசியக்கொடி மற்றும் தேசியத்தலைவர் ஆகியோரின் படங்களையும் தாங்கிச் சென்றதுடன் கொத்தொலிகளையும் எழுப்பிச்சென்றனர்.

இப்பேரணி முடிவிடத்தை சென்றடைந்ததும் ஈகைச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஈழத்தின் கதை எனும் தலைப்பில் யேர்மனிய மொழியில் இளையோரால் நிகழ்த்தப்பட்ட நாடகம் மக்களை பெரிதும் ஈர்த்திருந்தது

அத்துடன் யேர்மனிய மொழியில் இளையோர்கள் தற்போதைய நிலைமைகள் சம்பந்தமாக உரையாற்றினர். தமிழர்களின் இலட்சியத்தை அடைய நாம் எல்லோரும் என்றும் துணையாக இருப்போம் என்ற உறுதிமொழியுடன் மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

http://cache.daylife.com/imageserve/0eadbQxe12dQt/610x.jpg

http://cache.daylife.com/imageserve/04lI7QY6bh7fy/610x.jpg

http://cache.daylife.com/imageserve/04mtgs0beKgLm/610x.jpg

http://cache.daylife.com/imageserve/07Bs4gz1A76Xi/610x.jpg

| | Read More »