பொப் ரே யும் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாணய நிதியத்திடம் பரிந்துரை

அமெரிக்க காங்கிரஸ் சபை இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கக்கூடாது என திட்டவட்டமான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள இதே நேரத்தில், எரியும் நெருப்பில் எண்ணையை வார்ப்பதுபோல கனடாவின் எதிர்க்கட்சி எம்.பி பொப் ரே யும் பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை சர்வதேசத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்தால் மாத்திரமே கடனுதவி வழங்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் கனடா அரசானது வழங்க இருக்கும் கடனுதவிகள் குறித்தும் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக இவர் விடுத்த அறிக்கையால் இலங்கை அரசு மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க காங்கிரஸ் சபையின் முடிவை பாராட்டியுள்ள பொப் ரே, தொடர்ந்தும் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். கனடாவில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் அனுமதிபெற்று, சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொப் ரே அவர்களை கட்டநாயக்கா விமானநிலையத்தில் 12 மணிநேரம் தடுத்துவைத்திருந்த இலங்கை அரசு இறுதியில் அவரை நாடுகடத்தியது யாவரும் அறிந்ததே.

இவ்வாறு பல விடையங்களை துளியளவேனும் யோசனையின்றி செய்துவரும் இலங்கை அரசிற்கு தற்போது பாடம் புகட்ட தயாராகிவிட்டார் பொப் ரே. சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுக்கவேண்டுமேயானால் கீழ் கானும் நிபந்தனைகள் சிலவற்றிக்கு இலங்கை செவிசாய்க்கவேண்டும் என பொப் ரே கூறியுள்ளார்.

யுத்தக்குற்றம் புரிந்த இராணுவத்தினரை கைதுசெய்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்துதல்

ஜ.நா பணியாளர்களை முகாமிற்குள் அனுமதித்தல் மக்களின் மீள் குடியேற்றம்

ஜ.நா விசாரனை நடைபெறவேண்டும்

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சென்றுவர அனுமதிக்கவேண்டும்

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை மற்றும் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்

என்பன தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் போலி முகத்திரை கிழிந்தது

இலங்கை செஞ்சிலுவைச் சங்கமானது 76 லட்சம் ரூபாவை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியிருந்தது. பொருட்களை இறக்க, அதனை கொண்டு செல்வது போன்ற செலவுகள் எனக் கோரி இந்தத்தொகை கோரப்பட்டிருந்தது. இச்செய்தி காட்டுத் தீ போலப்பரவியதாலும், பல பத்திரிகைகளில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டதாலும் பின்னர் பணம் கோரும் படலம் கைவிடப்பட்டது. அதேசமயம் நேற்றைய தினம் தாம் அவ்வாறு பணம் எதுவும் கோரவில்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் டெய்லி மிரர் இணையத்திற்கு தெரிவித்திருந்தது. DAILY MIRROR LINK

இருப்பினும் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பிய தொலைநகலின் பிரதிகள் தற்போது அதிர்வு இணையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவை இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தாம் பணம் கோரவில்லை என பொய்யான தகவலை வெளியிட்டுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.

இவர்களா இதயசுத்தியுடன் போர் நடைபெற்ற காலங்களில் காயப்பட்ட தமிழர்களுக்கு உதவியிருப்பார்கள். தற்போதும் பல பகுதிகளில் சேவையாற்றிவரும் இவர்களின் பணியை மிகுந்த சந்தேகக்கண் கொண்டே பார்க்கவேண்டியுள்ளது.