உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!"


நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை
வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்

உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!"

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது"
சிங்களப் பேரினவாத பேய்கள்

உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது?

உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.

உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".

உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".

உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".

உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".

உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".

உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".

உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".

உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".

உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".

உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".

உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".

உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".

உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".

உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".

| | Read More »

ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் குரல்வளையை நெரிக்கும் இந்தியா


சிங்கள இராணுவம் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் படக்காட்சிகள் மலேசியத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்களை கொதிப்படையச் செய்துள்ளன

இலங்கையில் நடக்கும் இன அழிப்பு அட்டூழியங்கள் குறித்து தொடர்ந்து மௌனம் சாதிப்பதன் மூலம் இலங்கை அரசுக்கு, மலேசிய அரசாங்கம் உடந்தையாக உள்ளதா என பினாங்கு மாநில துணை முதல்வரும் மலேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பி. இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார். "இலங்கை அரசாங்கத்தை கண்டித்து விடுத்துள்ள அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வசிக்கும் தமிழர்களை கொலைவெறி சிங்கள இராணுவம் மனிதாபிமானமே இல்லாமல் சுட்டுக்கொல்லும் படக்காட்சிகள் இப்பொழுது வெளிவந்துள்ளன.

பல வருடங்களாக இலங்கையில் இந்த அட்டூழியங்கள் நடந்து வருகின்றது என்று கூக்குரலிட்டு கூறி வந்தனர் ஈழத்தமிழர்களின் மீது பரிதாபப்பட்டவர்கள்; தமிழர்களை இன அழிப்பிலிருந்து காக்கவே நாங்கள் ஆயுதம் ஏந்தினோம் என்று வலியுறுத்தி புலிகள் கூறிய பொழுதும், உலக நாடுகளோ, தலைவர்களோ அதனை சட்டைக்கூட செய்யவில்லை. ஈழத்தமிழர்களுக்கு கேடயமாக இருந்து அவர்களை காத்து வந்த புலிகளின் இராணுவ பலம் மழுங்கடிக்கப்பட்டப்பிறகு, சிங்கள வெறியர்கள் தங்களின் இன அழிப்பு அட்டூழியங்களை மீண்டும் விருப்பம் போல் மேற்கொள்கின்றனர்.

தமிழர்களின் காவல் அரணை தகர்த்து விட்டதால் இனி தமிழர்கள் சிங்களவர்களின் அடிமைகள் என்ற போக்கில்தான் செயல்படும் சிங்கள இனவெறி அரசும், இராணுவமும். தற்பொழுது மிக பரப்பரப்பாக பேசப்படும் இந்த படக்காட்சிகளைக்கண்டு, மலேசிய தமிழர்கள் உட்பட உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் ஈழத்து உடன்பிறப்புகளை எண்ணி மனம் வெதும்புகின்றனர்.

இந்த படக்காட்சிகள் வெட்ட வெளிச்சமாக்கியது, சிங்கள இராணுவ அட்டூழியத்தின் ஒரு பகுதி மட்டும்தான். போரால் பாதிக்கப்பட்டு, இன்று முள்வேலிக்குள் அகதிகள் என்ற பெயரில் சிறைக்கைதிகளாக வாழ்ந்துவரும் மூன்று இலட்சம் ஈழத்தமிழர்கள் படும் இன்னல்கள் சொல்லிலடங்கா.

பசியாலும், பட்டினியாலும் படாதப்பாடுப் படுகின்றனர் அந்த தமிழர்கள். தமிழர்களுக்கெதிராக பல்வேறு வகை கொடுர செயல்கள் அகதிகள் முகாம் என்ற அந்த முள்வேலி சிறைக்குள் நிகழ்த்தப்படுகின்றன.

பசியை தமிழர்களுக்கெதிரான வதை ஆயுதமாக சிங்கள இனவெறி அரசு பயன்படுத்துகிறது. அகதிகள் முகாமென்ற அந்த முள்வேலி சிறைக்குள் தமிழீழத்தின் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு பலியாகின்றனர்.

பிச்சைக்காரர்களே இல்லாத சமூகமாக ஈழத்தமிழர்களை வைத்திருந்தார் பிரபாகரன், அவர்கள் இன்று ஒரு வேலை உணவுக்குக் கூட கையேந்தி நிற்கும் சமூகமாக ஆக்கப்பட்டிருக்கின்றனர். வாய்க்கிழிய மனிதாபிமானம் பேசும் உலக நாடுகளின் தலைவர்கள் ஈழத்தமிழர்களின் நிலையைக் கண்டும் பாராமுகமாக இருப்பது ஏனோ? ஈழத்தில் மடிந்துக்கொண்டிருப்பது மனித இனம் அன்றோ? ஏறக்குறைய 20 நாடுகளின் ஆதரவோடு புலிகளுக்கு எதிராக போரை முன்னெடுத்தது இலங்கை.

புலிகளை வெல்கிறோம் என்றுக் கூறிக்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை இராணுவம். ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியாவதை தடுக்க, தங்களது ஆயுதங்களை மௌனப்படுத்தி, அஹிம்சை வழியில் தங்களது போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கிய புலிகளின் தலைமை செயலர் பத்மநாபனையும் அனைத்துலக சட்ட விதிகளை மதிக்காமல் கடத்தியுள்ளது இலங்கை.

நாடுக்கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சிகளை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று முழுமுச்சாக பணியாற்றுகிறது இலங்கை இனவெறி அரசு. தமிழர்களின் குரலை எப்படியாவது அடக்கிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறது இலங்கை. அமைதியான வழியில், தமிழர்களின் போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கிய பத்மநாபன் மலேசிய தலைநகர், கோலாலம்பூர்ரில் வைத்துதான் கடத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் மலேசிய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது ஏன் என்றுதான் புரியவில்லை. பத்மநாபன் கைது தொடர்பாக மலேசியாவின் நெடுநீண்ட மௌனம், ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் குரல்வளையை நெரிக்கும் இலங்கை அரசின் முயற்சிகளுக்கு மலேசிய அரசாங்கமும் உடந்தையா என்ற சந்தேகத்தை வலுக்க வைக்கின்றது.

ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் மதிக்கும் எந்தவொரு நாட்டிலும் இதுப்போன்றதொரு அடிப்படை மனித உரிமையை மீறிய கடத்தல் சம்பவம் அனுமதிக்கப்படாது. பத்மநாபனை கடத்துவதற்கு மலேசிய அரசாங்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவியிருக்குமானால், அந்த சம்பவம் மலேசியாவில் வாழும் தமிழர்களை மதிக்காத செயலாகும்.

மலேசிய அரசாங்கம் ஈழத்தமிழர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் உரிமைப்போராட்டத்தை நசுக்கும் முயற்சிகளை ஆதரித்து, அந்த தமிழர்களுக்கு உபத்திரவத்தை தர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ஆரம்பக்காலம் தொடங்கி இலங்கையில் நடக்கும் மனித பேரவலங்களை தடுக்கக்கோரி மலேசியத்தமிழ்ர்களான நாம் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

போர் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மலேசியத்தமிழர்கள் இலங்கை அரசுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக கண்டனக்கூட்டங்கள் வாயிலாகவும், பேரணிகள் வாயிலாகவும் தெரிவித்தோம்.

மலேசிய அமைச்சரைவையில் அமர்ந்துள்ள மஇகா அமைச்சர் இந்த விவகாரத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்புவதாக உறுதியளித்திருந்தார். அப்படி இந்த விவகாரத்தை அமைச்சரவைக்கூட்டத்தில் அவர் எழுப்பினாறேனில், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு என்ன என்பதையும் அவர் அறிவிக்க வேண்டும்.

போஸ்னியா, கொசோவோ, சூடான் என உலகின் பல கண்டங்களிலும் நடக்கும் மனிதப்பேரவல விவகாரங்களில் முனைப்புடன் குரல் எழுப்பும் மலேசியா, இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகளை ஒருமுறைக்கூட கண்டிக்காததன் மர்மம் என்ன? இலங்கை அரசின் இனவெறிப் போக்குக்கு மலேசிய அரசும் உடன்போகிறதா என்பதை உடனடியாக விளக்க வேண்டும். இலங்கையில் காலங்காலமாக தமிழர்கள் மிக மோசமாக நடத்துப்பட்டுதான் வந்துள்ளனர். ஜெயவர்த்தனே காலம் தொட்டு, இன்றைய மகிந்த இராஜபக்சே ஆட்சி வரை தமிழ் மக்களை சிங்களர்கள் இலங்கையின் குடிகளாக ஏற்றுக்கொண்டது கிடையாது.

தங்களது சொந்த மண்ணிலேயே தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வந்துள்ளனர். ஈழ தமிழர்களின் இன்னலை நீக்கவே பல்வேறான போராளிக் குழுக்கள் இலங்கையின் வடக்கிலும், தெற்கிலும் தோன்றின.

கால ஓட்டத்தில் பல போராளிக்குழுக்கள் தங்களின் சுயநலனுக்காக கொள்கையை கைவிட்டு சிங்கள அரசுகளுடன் கைக்கோர்த்து பண சுகமும், பதவி சுகமும் கண்டன. ஈழத்தமிழர்கள் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்துக்காக இறுதிவரை போராடிய சுதந்திர அமைப்பை அழித்தொழிக்க உலகத்தின் பல்வேறு ஆதிக்க சக்திகளும் இனவெறி சிங்கள அரசுக்கு துணைபோயின. அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் வல்லரசுகளான இந்தியாவும், சீனாவும் தெற்காசியாவில் தங்களின் இராணுவ பலத்தை பெருக்க போட்டிப்போட்டுக் கொண்டு இலங்கைக்கு இராணுவ உதவிகளை வாரி,வாரி வழங்கின.

ஈழத்தமிழர்களின் காவல் அரணாக நின்ற புலிகளை சாய்ப்பதில் இந்தியா காட்டிய முனைப்பை சற்றும் எதிர்க்காமல், உலக தமிழினத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஈழத்தமிழர்களுக்கு இருந்த ஒரேயொரு காவல் அரனையும் தகர்த்து விட்டு இன்று சிங்கள பேரினவாதிகள் நடத்தும் இன அழிப்பு வெறியாட்டத்தை கண்டும் காணமால் போலிருப்பது,

இந்தியாவின் சரித்திரத்தில் இருளடைந்த பாகம் என்றேகூறவேண்டும். இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக முதல்வர் கருணாநிதியோ, இலங்கையில் தமிழர்கள் வாழ்வில் சுமுக நிலை மீண்டு வருகிறது என்று மனசாட்சியே இல்லாமல் ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை மனிதப் பேரவல விவகாரத்தில், தமிழ்நாட்டு முதல்வரின் நிலைப்பாடும், இந்திய மத்திய அரசின் போக்கும், உலகத்தமிழர்களை கடும் வெறுப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றது.

போர் ஓய்ந்து விட்டது என்று கூறிக்கொண்டே, தொடர்ந்தும் ஈழத்தமிழர்களை வதைத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் இனவெறிப் போக்கை மலேசியா உட்பட, உலக நாடுகள் உடனடியாக கண்டிக்க வேண்டும். அகதிகள் முகாமென்ற முள்வேலி சிறைக்குள் அடைந்துக்கிடக்கும் 3 லட்சம் தமிழர்களுக்கு உடனடி தீர்வு ஒன்றை ஏற்படுத்த உலக நாடுகளும், ஐநா போன்ற அனைத்துலக அமைப்புகளும் முயற்சிகளை காலம் தாழ்த்தாமல் எடுக்கவேண்டும்.

மலேசிய அரசு, இலங்கையில் நடக்கும் இனவெறி ஆட்டத்திற்கு எதிராகவும், பத்மநாபன் கடத்தல் சம்பந்தமாகவும் தொடர்ந்தும் மௌனம் சாதித்தால், எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிச்சயம் இந்த விவகாரத்தை தான் எழுப்ப போவதாகவும் பேராசியர் பி.ராமசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்."

| | Read More »

சர்வதேச பாதுகாப்பிற்கான கொள்கை மையத்தின் சதி அம்பலம்

சர்வதேச கூட்டு சதி மீண்டும் ஆரம்பமா ?? இச் செய்திகளை எம்மவர் இணையத்தளங்களும் காவித் துணை போவதேன் ??


இலங்கை அரசை அதிர்ச்சியளிக்க வைத்ததாம் அவர்களிடம் இருந்த நவீன சீன ஆயுதங்கள். இலங்கையின் நட்புறவு நாடான சீன விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதா? இலங்கைக்கு என்றும் நல்ல நண்பனாக இருக்கும் நாடு அப்படிச் செய்யவில்லை. ஆயுத வர்த்தகர்களே விடுதலைப் புலிகளுக்கு அந்த ஆயுதங்களை விற்றனர். இலங்கைப் போரில் பெரும் பொருளீட்டியவர்கள் ஆயுத வியாபாரிகளே. இவர்கள் இப்போது புதுக் கதை கட்டி விட்டுள்ளனர்.

http://www.strategypage.com என்ற இணையத்தளம் ஒரு புதுக் கதையை அவிழ்த்து விட்டுள்ளது:

இலங்கைப் படையினருடனான இறுதி யுத்தத்தில் தப்பிச் சென்ற விடுதலைப்புலி இயக்க உறுப்பினர்கள் தமது இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பார்கள் என்றும், இலங்கையில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து அந்த இணையத்தளம் தெரிவிப்பது: இலங்கை இராணுவத்துடனான இறுதிக் கட்ட யுத்தத்தின்போது சுமார் 30 ஆயிரம் புலி உறுப்பினர்கள் தப்பிப் பிழைத்திருக்கின்றார்கள். அவர்கள் ஆயுதமற்ற புலிகள் ஆவர். ஆனால், மிகவும் ஒழுங்கான கட்டமைப்புக்குள் இயங்குபவர்கள். அவர்கள் தற்போது புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்து இலங்கையில் தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்வதற்கு முயற்சித்து வருகின்றார்கள்.

இவற்றை மட்டுமே பிரசுரித்த பல தமிழ் இணையத்தளங்கள் அந்த http://www.strategypage.com என்றஇணையத்தளத்தை சரியாக வாசிக்காமல் dailymirror இணையத்தளத்தில் இது தொடர்பாக வந்த செய்தியை மட்டுமே வாசித்துவிட்டு எழுதுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை புலிகள் பலமுடன் இருக்கிறார்கள் என்று காட்டினால் மட்டும்போதும். துள்ளிக் குதிப்பார்கள். அந்த இணையத்தளம் ஏன் இப்படி ஒரு தகவலை வெளியிடுகிறது என்று பார்க்கத் தவறிவிட்டனர்.

இறுதிக் கட்டப் போரில் விடுதலைப் புலிகள் எப்படிச் சுற்றி வளைக்கப் பட்டனர் என்பதை மேலுள்ள படம் காட்டுகிறது. அதுவும் டெய்லிமிறர் பத்திரிகையிலேயே வெளிவிடப்பட்டது. அப்படத்தில் இல்லாததும் உண்டு. பக்கத்து நாட்டுக் கடற்படையிரனர் நீர்மூழ்கிக்கப்பல் உட்பட அணிவகுத்து நின்றது மேலுள்ள படத்தில் இல்லை. தாக்குதல் நடத்தக் கூடிய முப்பதினாயிரம் புலிகள் இருந்திருந்தால் அவர்கள் வலிந்த தாக்குதல் செய்திருப்பர். முப்பதினாயிரம் விடுதலைப் புலிகள் இருந்தனர் என்பது அப்பட்டமான பொய்.

http://www.strategypage.com இன் செய்தியின் விளைவிகள் என்ன?
  • முப்பதினாயிரம் தமிழர்களைக் கொல்லலாம்.
  • முப்பதினாயிரம் தமிழர்களை புலிகள் என ஒப்பு வாக்கு மூலம் கொடுக்கச் செய்து மரண தண்டனை வழங்கலாம்.
  • வன்னி வதை முகாம்களில் இருப்பவர்களில் முப்பதினாயிரம் பேரையும் கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லி அவர்களின் விடுதலையை மேலும் தாமதப் படுத்தலாம்.
  • பல்லாயிரம் தமிழர்களை சந்தேக நபர்கள் எனச் சொல்லி வடக்குக் கிழக்கில் கைது செய்து காலவரையின்றிச் சிறையில் அடைக்கலாம்.

http://www.strategypage.com இன்னும் என்ன சொல்கிறது?

The government is negotiating with Pathmanathan to find out where the remaining funds are, and what shape the offshore LTTE organization is in.

இலங்கை அரசு பத்மநாதனுடன் பேச்சுவார்த்தை நடாத்துகிறதாம்!!!!

கடத்திக் கொண்டுவந்து வன்முறை மூலம் தகவல்களை கறப்பது அந்த இணையத் தளத்தைப் பொறுத்தவரை பேச்சு வார்த்தை.

Meanwhile, some atrocities have taken place, but often against Sri Lankans who don't get along with the police. Over more than two decades of terrorism and violence, the national police have acquired an attitude that they are above the law.

இலங்கையில் சில கொடூரங்கள் நடந்தனவாம். 1956இல் குழந்தைகளை கொதி தாரில் போட்டதிலிருந்து நேற்று வன்னி முகாமில் இறந்த குழந்தைகள் வரை எத்தனை குழந்தைகள் இறந்தன என்று கணக்குண்டா? இவை சில கொடூரங்களா? இந்த இணையத்தளம் ஏன் இப்படிப் பொய் கூறுகிறது.

இலங்கையில் நடக்கும் மனித உரிமைமீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஐரோப்பியர்களை அந்த இணையத்தளம் கண்டித்துள்ளது. அதுவே அதன் தலைப்பாகவும் அமைந்துள்ளது. European Racists Close In என்பதுதான் கட்டுரைத் தலைப்பு. ஒரு இனக்கொலைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை இந்த இணையத்தளம் ஏன் இனவாதிகள் என குற்றம் சாட்டுகிறது.

இலங்கையில் இந்தமாதத்தில் கண்டெடுக்கப் பட்ட தற்கொலைதாரிகளின் பட்டியலையும் அது வெளியிட்டுள்ளது.

வன்னிமுகாமில் உள்ள மக்களின் அவலம் பற்றியோ அல்லது அவர்கள் சட்ட விரோதமாகத் தடுத்து வைத்திருப்பது பற்றியோ குறிப்பிடாத http://www.strategypage.com இணையத்தளம் அவர்கள் இப்போதைக்கு விடுவிக்கப் படமாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.

http://www.strategypage.com இப்படிச் சொல்வது ஏன்?

மொத்தத்தில் இந்தக் கட்டுரை எழுதியவர் இலங்கைக்கு வக்காலத்து வாங்குகிறார் என்பதும் இலங்கையில் இன்னும் விடுதலைப் புலிகளால் பேராபத்து உண்டு என்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.

அதாவது இலங்கை இன்னும் ஆயுதங்களை வாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் கட்டுரையின் உள் அர்த்தம் போலத்தான் தெரிகிறது.

ஆயுத வியாபாரிகள் இப்படியும் சதி செய்வார்களா?

| | Read More »