புலி ஊரின் நடந்த மாவீரர் நாள்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26, போரில் உயிரிழந்த புலிகளுக்கு வீரவணக்கம் செய்யும் நாளான நவம்பர் 27 மாவீரர் தினம் ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கடைப்பிடிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு பிரபாகரனும்,புலிகளும் அடியோடு அழித்தொழிக்கப்-பட்டதாகக் கருதப்படும் நிலையில்,தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவாளர்களால் இந்த இரு தினங்களும் சிறப்பாகவே கடைப்பிடிக்கப்பட்டன.

கடந்த 26-ம்தேதி ஈரோடு, திருச்சி போன்ற இடங்களில் பிரபாகரனின் பிறந்த நாளுக்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைக் கிழித்தும், டிஜிட்டல் பேனர்களைச் சேதப்படுத்தியும் தங்களுடைய எதிர்ப்பை காங்கிரஸார் பதிவு செய்தனர். சேலம் போன்ற இடங்களில் காங்கிரஸாருக்கு இந்த சிரமத்தைத் தராமல் போலீஸாரே அந்த கிழிப்பு, உடைப்பு பணிகளைப் பார்த்துக் கொண்டனர். ஆனால், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் எந்த இடையூறுமின்றி வெகு சிறப்பாக பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடி மாவீரர் நாளை அஞ்சலி தினமாக கடைப்பிடித்து அசத்தியிருக்கிறது பெரியார் திராவிடர் கழகம்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கொளத்தூர் பகுதியில் கும்பாரப்பட்டி என்ற சிறு கிராமத்தில் விடுதலைப்புலிகள் தங்கியிருந்து அங்கே ஆயுதப் பயிற்சி மேற்கொண்டனர். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆதரவுடன் இந்தப் போர்ப் பயிற்சி 84-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி நவம்பர் 86-ம் ஆண்டு வரை நடந்தது.

புலிகள் தங்கி போர்ப்பயிற்சி எடுத்ததால், அந்தக் கிராமத்தவர்கள் தங்கள் கிராமப் பெயரை புலியூர் என்று மாற்றிக் கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு புலியூர் எனப்படும் கும்பாரப்பட்டியில் மாவீரர் தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற இருப்பதைக் கேள்விப்பட்டு நாமும் புலியூருக்கு விரைந்தோம்.

கொளத்தூரிலிருந்து சின்னதண்டா செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது புலியூர். 27-ம்தேதி நாம் அங்கு சென்றபோது கிராமமே புதுப்பொலிவுடன் காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் புலிகளின் இயக்க நிறங்களான மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் காகிதத் தோரணங்கள், கொடிகள்.

ஊர் பேருந்து நிலையத்தில், புலிகளால் கட்டித் தரப்பட்ட பயணிகள் நிழற்கூடம் ஒன்று காட்சியளித்தது. ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட சமயத்தில் கொந்தளித்த கொளத்தூர் காங்கிஸார், புலிகள் மீது கோபம் கொண்டு அந்த நிழற்கூடத்தை அப்போது அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அதன்பிறகு அந்த நிழற்கூடத்தைச் செப்பனிட்டு, புலிகளின் தளபதியாக அங்கு தங்கியிருந்த பொன்னம்மானின் பெயரை அதற்குச் சூட்டியிருக்கிறார்கள் மக்கள். புது வண்ணம் பூசப்பட்டிருந்த அந்த நிழற்கூடத்தின் முன்னால்தான் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. நிழற்கூடத்துக்கு நேர் எதிரே புலிகள் பயிற்சி பெற்ற இடத்துக்குச் செல்லும் பிரிவுச் சாலையின் தொடக்கம் `புலியூர் பிரிவு' என்ற பெயர் சூட்டப்பட்டு, அதற்கான பெயர்ப்பலகை திறக்கப்பட தயாராக இருந்தது.

கறுப்பு உடையணிந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்கு கூட்டம் கூட்டமாக தனி வாகனங்களில் வரத்தொடங்கினர். சுமார் நானூறுக்கும் அதிகமானோர் வந்து குவிந்தனர். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுவிட்டதால், அவருடைய சகோதரர் பழனிசாமி இந்த ஆண்டு நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். புலிகள் பயிற்சி பெற்ற காலத்தில் அவர்களுக்கு உதவிய முத்துசாமி என்பவர் புலியூர் பிரிவு பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.

அதன்பின் தமிழீழ மாவீரர்நாள் பேனருக்கு முன்பு பெரியார் திராவிடர் கழக இளைஞர்கள் இருவர் மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்க நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அமைதியாகக் கலைந்து சென்றனர். அங்கு ஒரு போலீஸ்காரர் கூட நம் கண்ணில் தட்டுப்படவில்லை. துளி அசம்பாவிதமோ, இடையூறோ இன்றி திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

முத்துசாமியிடம் பேசியபோது பல சுவையான தகவல்களைத் தந்தார் அவர்.

``புலிகள் இங்கே மூன்றாண்டு காலம் போர்ப் பயிற்சி மேற்கொண்ட காலத்தில் அவர்கள் பேசிய தூய தமிழால் கவரப்பட்டு இன்றும் எங்கள் ஊரைச் சேர்ந்த பலர் தூய தமிழில் பேசி வருகிறார்கள். புலிகள் இயக்க இளைஞர்கள் எங்களிடம் மிகுந்த மரியாதை உள்ளவர்களாக நடந்து கொண்டனர். புலிகளின் மருத்துவ முகாமே எங்கள் ஊர் மக்களுக்கான மருத்துவ முகாமாகவும் பயன்பட்டது. அவர்கள் பயன்படுத்திய ஜீப்பே எங்கள் மக்களின் போக்குவரத்து வாகனமாக உதவியது. நெருங்கிய உறவினர்களைப் போல எங்கள் நெஞ்சத்தில் பசங்கள் (புலிகளை இங்குள்ளவர்கள் இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்) ஒட்டிக்கொண்டார்கள். புலிகள் இருந்த காலத்தில் திருட்டுப் பயமே இருக்கவில்லை.

மொத்தம் மூன்று குழுக்களாக அவர்கள் பயிற்சி எடுத்தார்கள். முதல் குழுவுக்குத் தலைமையேற்றுப் பயிற்சி தந்தவர் பொன்னம்மான். அவருடன் வந்திருந்த புலேந்திரன் ஈழப் போரில் உயிர் நீத்ததைக் கேள்விப்பட்டு எங்களது நெருங்கிய உறவினரை இழந்தது போல கதறியழுதோம்.

பொன்னம்மான் சாதாரணமாக தரையில்தான் பசங்களோடு பசங்களாகப் படுத்துறங்குவார். மூன்று முறை இந்தப் பயிற்சியை மேற்பார்வையிட வந்திருந்த புலிகள் தலைவர் தம்பி பிரபாகரனும்கூட தரையில்தான் படுத்துறங்கினார். அவர்கள் எங்கள் தலைவர் கொளத்தூர் மணியை `அண்ணன்' என்றே பாசத்துடன் அழைத்து வந்தனர். பயிற்சி முடித்து தாயகம் திரும்பிய அவர்களை கலங்கிய கண்கள், கனத்த இதயத்துடன் வழியனுப்பிவைத்தோம்'' என்ற முத்துசாமி, புலிகள் தங்கியிருந்து பயிற்சியெடுத்த வனப்பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்று காட்டினார். தற்போது வனத்துறை வசமிருக்கும் அந்தப் பகுதியில் புலிகள் கட்டியிருந்த ஒரு தண்ணீர்த் தொட்டியும், இரண்டு சிறு காவல்சுவர்களுமே அவர்களது நினைவைச் சொல்ல மிச்சமிருந்தன.

புலியூரில், மாவீரர் தின வீரவணக்க நிகழ்ச்சி நடந்த அதே நாளில் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் `கரும்புலி மில்லர் நினைவரங்கம்' என்ற சிறிய ஹால் ஒன்றை கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன், ராமகிருஷ்ணன் மற்றும் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் ஆகியோர் திறந்து வைத்திருக்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய கொளத்தூர் மணியிடம் பேசினோம். "புலியூர் பகுதி புலிகளின் வீரவரலாற்றில் இடம்பிடித்த ஒரு முக்கிய பகுதி. இங்கு 34 மாதங்களில் ஏறத்தாழ 2000 புலிகள் பயிற்சி பெற்ற போதிலும் ஒருதுளி அசம்பாவிதமும் ஏற்பட்டதில்லை'' என்றார் கொளத்தூர் மணி.

நாம் அங்கிருந்து திரும்பும்போது மேட்டூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த பிரபாகரன் பிறந்தநாள், மாவீரர் நினைவு தின போஸ்டர்கள், கட்டப்பட்டிருந்த பேனர்களை அகற்றச் சொல்லி பெரியார் திராவிடர் இயக்கத்துப் பிரமுகர்களிடம் போலீஸார் தூதுவிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசிவரை பெரியார் தி.க.வினர் அதற்கு அசைந்து கொடுக்கவேயில்லை.

படங்கள்: ஏ.ஏ.ராஜ்

- வை. கதிரவன்

| | Read More »

அமெரிக்கா, நியூயோர்க்கில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாள்

அமெரிக்கா, நியூயோர்க்கில் பலநூற்றுக்கணக்கான மக்கள் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 29.11.2009 அன்று அமெரிக்கா, நியுயோர்க்கில் விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய மாவீரர்கள், பொதுமக்களை நெஞ்சிலே நிறுத்தி மாதிரி நினைவாலயத்தில் பூக்களைத் தூவி தங்கள் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன், எழுச்சிநிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



















| | Read More »

ராமின் மா(கா)வீரர் நாள் அறிக்கை போலி ?

ராமின் மா(கா)வீரர் நாள் அறிக்கை சிலருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அதில் அவர்களே அறியாமல் தாம் யாருக்கு பணிபுரிகின்றோம் என்பதை காட்டிக் கொடுத்துவிட்டார்கள். சிறீலங்காவின் கூலி ஒருவர் அனுப்பியிருந்த ராமின் குரல் பதிந்த ஒலிக்கு “மகாவீர” என்ற சிங்களச் சொல்லை பெயராக கொடுத்துள்ளார்கள். அதைக்கூட கவனிக்காமல் அவர்கள் அனுப்பியிருப்பதானது அவர்களின் எச்சரிக்கையின்மையை காட்டி நிற்கின்றது.

வரிக்கு வரி எழுத்துப்பிழைகளுடன், தமிழனின் உரிமையை ராம் விற்றுள்ளார். என்ன செய்வது? எழுதித் தந்ததை வாசித்தது மட்டும் தான் அவருக்குத் தெரியும்.


இவர் அங்கிருந்து தபேந்திரனுடன் இணைந்து சில நாசகார வேலைகளை புலம்பெயர் மண்ணில் செய்ய திட்டமிட்டிருப்பதாக எமக்கு செய்திகள் கிடைத்திருக்கின்றன. அந்த அடிப்படையில் முதலாவது கட்டமாக தம்மிடம் வயப்பட்டுள்ள இளைஞர்களுக்கு தாம் நேரடித் தொடர்பில் இருப்பதாக “பாவலா” காட்டுவதாகவும், அதன்பின்னர் உண்மையாக பணிபுரியும் பணியாளர்களின் விபரங்களை திரட்டுவதாகவும் எமது புலனாய்வு செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிறீலங்காத் தூதரகங்களுக்கு இப்படியான திரட்டப்பட்ட தகவல்களை குறிப்பிட்ட நபர்கள் சிலர் வழங்கிவருகின்றனர் என எமக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இப்படி வழங்கப்படும் தகவல்களால் கிடைக்கப்பெறும் நிதிகள் மற்றும் தமிழர்களிடம் ஏமாற்றிப் பெறப்பட்ட நகைகள், பணங்களைக் கொண்டு வர்த்தக நிறுவனங்களை பிரான்சிலும் பிரித்தானியாவிலும் ஆரம்பித்திருக்கின்றார்கள். ஏமாறும் மக்களும் தாலிக்கொடி முதல் சங்கிலி வரை கொடுத்து “உதவுவதாகவும்” எமது ஆய்வின் புலனாய்வு தெரிவிக்கின்றது. இவர்கள் சில வீடுகளுக்குச் சென்று அடி வேண்டியதும் உண்டு.

கோத்தபாயவின் செல்லப்பிள்ளை ராமின் அடிவருடிகள் பாரெல்லாம் திரிகின்றன. கவனமாக பாருங்கள். காட்டில் நிற்கும் போராளிகளுக்கு “உதவ வேண்டும்” என தெரிவிக்கும் இவர்கள், தற்போது இயக்கத்தின் பெயரில் பற்றுச்சீட்டு அடித்து மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்கள். இவர்கள் பற்றுச்சீட்டை பரிசில் உள்ள தமிழர்களின் பிரபலமான அச்சகத்தில் அச்சடித்திருக்கின்றார்கள்.

இந்த தமிழர்களின் பிரபலமான அச்சகம் வெளித் தோற்றத்தில் தனியாரின் பெயரில் இருந்தாலும், அதற்கு முதலிட்டது வன்னியாம். வன்னியின் நேரடித் தொடர்பில் அச்சகம் இயங்கியதாகவும், முள்ளிவாய்க்காலின் வீழ்ச்சிக்குப் பின்னர் அச்சகம் தன்னுடையது என அச்சக நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அச்சகத்துடன் இணைந்து பணிபுரியும் “வன்னிக்குரியவர்” தெரிவித்துள்ளார். எது எப்படியிருந்தாலும் தமிழர்களின் பிரபல அச்சகத்தை எப்படி ஆரம்பித்தனர் என்பதை நிர்வாகம் மறந்திருக்க வாய்ப்பில்லை.

பிரான்சின் வெளிமாவட்டமான “செவறன் றிவிறி” என்ற இடத்தில் அண்மையில் தமிழ் வர்த்தகரை மிரட்டி அவ்வர்த்தகருக்கு சொந்தமான கடையை தங்கள் பெயருக்கு மாற்றியதும் இல்லாமல், தமிழ் மக்களுக்கு போக்கு காட்டுவதற்காக அக்கடைக்கு “பொத்தி கமுறூண்” என ஆபிரிக்கப் பெயரில் இயங்குகின்றது. இன்னுமொரு கடை பாரிசுக்கு அண்மையில் உள்ள “மொன்றியல்” என்ற இடத்திலும் திறந்திருக்கின்றார்கள். மேலும் தமிழர்கள் அதிகமாகக்கூடும் லாச்சப்பல் பகுதியில் உணவகம் ஒன்றைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

மக்களே இவையனைத்தும் தப்பிய போராளிகளுக்கும் காயப்பட்டு பராமரிக்கும் போராளிகளுக்கும் என கூறிக்கொண்டு உங்களிடம் பணம், நகையாக பெற்ற நிதிகளிடம் இருந்து ஆரம்பிக்கப்பட்டவை என்பதை மறந்து விடாதீர்கள். மக்களை ஏமாற்றும் சம்பந்தப்பட்வர்களின் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் என்பவற்றை விரைவில் எதிர்பாருங்கள். இன்னும் வரும்…..

ஆய்வு
உண்மைகளின் உயிர்நாடி

| | Read More »

பட்டினியுடன் ராணுவத்தின் வேலைகளைச் செய்ய பணிக்கப்படும் வன்னி மக்கள்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் சமீபத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. அந்த மக்களுக்கு போதுமான உணவு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்டவில்லை. ஆனால் படையினருக்கு தேவையான வேலைகளை செய்யுமாறு அவர்கள் மிரட்டப்படுவதாக வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பகுதிகளுககான உணவு விநியோகத்தை திட்டமிட்டு மட்டுப்படுத்தியுள்ள ராணுவம், மக்களைப் பட்டினி போட்டு துன்புறுத்துவதோடு தமக்கான வேலைகளையும் மக்களே செய்யவேண்டும் என பலவந்தப்படுத்தி வருகின்றது. வன்னியில் மீள்குடியமர்த்தவென கொண்டு செல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அங்குள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் ராணுவம், அவர்களின் நடமாட்டங்களை முற்றாக தடுத்துவைத்துக்கொண்டு, தாம் நினைத்தபோது இவ்வாறு மக்களைத் துன்புறுத்தி வருகின்றது.

அரச செயலக புள்ளி விவரங்களின்படி நவம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை 6,037 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் பகுயிலும், நவம்பர் 17 ஆம் திகதி வரை 2,821 பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம், அக்கராயன்குளம், முழங்காவில், நாச்சிக்குடா ஆகிய பகுதிகளிலும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதுதவிர வலைப்பாடு மற்றும் கிராஞ்சி பகுதிகளிலும் மக்கள் குடியமர்த்தப்பட்டு வருவதாக அறியக்கிடைத்துள்ளது.

இதேவேளை, உலக உணவு திட்ட நிறுவனத்தினரால் அரசின் ஊடாக விநியோகிக்கப்பட்ட உலர் உணவு பொருட்கள் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் ஊடாக விநியோகிக்கப்படுகின்றன, ஆனால் அவை பற்றாக்குறையாக உள்ளதோடு, ஒரு வருடத்திற்கு முன்னர் பழுதாகிய உணவு பொருட்கள் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறியுள்ளார்.

| | Read More »

தமிழ்நாடு, இராசபாளயத்தில் தமிழ் தமிழர் இயக்கத்தினரின் மாவீரர்நாள்

தமிழ் நாடு இராசபாளயத்தில் தமிழ் தமிழர் இயக்கத்தினர் மாவீரர்நாளை உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழீழத்தில் இம்முறை மாவீரர் நாளை நினைவுகூர முடியாவிட்டாலும், அதற்கீடாக தமிழர் வாழுமிடமெங்கும் நிகழ்த்தப்பெற்று, ஆக்கிரமிப்பாளர்களுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், உலகின் பல மூலைகளிலும் பரந்து வாழும் தமிழர்களும் தக்க பதிலை தெரிவித்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரர்நாள் இனிவரும் காலங்களில் தமிழர்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதுடன், தமிழர்களுக்கு போராடும் ஆத்மபலத்தையும் இம்முறை மாவீரர் நாள் கொடுத்துள்ளது என தமிழகத்தின் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மாவீரர்நாளை முதல்வர் அவர்கள் கருத்தில் கொண்டு, மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தமிழர் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திரு.பொன்.இளங்கோவன் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


























| | Read More »