மனிதன் இணையத்தளம் மீது ஈழநாடு ஆசிரியர் சட்ட நடவடிக்கை!

| |


கடந்த 28-10-2010 அன்று ஈழநாடு ஆசிரியர் திரு. சிவகுரு பாலச்சிந்திரன் அவர்கள்மீது அவதூறு விளைவிக்கும் நோக்கில் மனிதன் இணையத்தளத்தினால் பிரசுநிக்கப்பட்ட செய்தி குறித்து, அந்த இணையத்தளம் மீது சட்ட நடவடிக்கைக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

‘பாரசில் பரபரப்பு – பாரிஸ் ஈழநாடு சிவகுரு பாலசந்திரன் பிரான்சுக்கு வருகை தந்த வரதராஜப் பெருமாளுடன் ரகசிய சந்திப்பு’ என்ற தலைப்பில் மனிதன் இணையத்தளம் வெளியிட்ட உண்மைக்குப் புறம்பான செய்தியுடன் ஈழநாடு ஆசிரியர் திரு. சிவகுரு பாலச்சந்திரன் அவர்கள்மீது வேண்டுமென்றே பல அவதூறுகள் விளைவிக்கும் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தனி நபர் அவதூறு செய்தி குறித்து மனிதன் இணையத் தளத்தின் உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பதில் கிடைக்காத பட்சத்திலும், மேற்படி இணையத்தளத்தால் வெளியிடப்பட்ட குறிப்பிட்ட செய்திக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்காத பட்சத்தில், அந்த இணையத்தளம் மீதும், அதன் செய்திப் பெறுப்பாசிரியர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக திரு. பாலச்சந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

[lankasri.jpg]

Posted by எல்லாளன் on 8:39 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response