மீண்டும் தமிழர்களை அழிக்க முனையும் பிரித்தானிய மகாராணி
காலனித்துவ ஆட்சியில் தமிழர்களின் சுயத்தை அழித்து அதை சிங்களவனிடம் தாரை வார்த்தது மகாராணியார் குடும்பம்தன்னை காப்பாற்றும் படி மகிந்தா பிரித்தானியா மகாராணியிடம் மன்றாடினாரா?
இப்போது மீண்டும் தமிழர்களை அழித்தவனுக்கு பாராட்டு அனுப்பியது மட்டுமல்லாமல் அடைக்கலமும் ,காவாந்தும் பண்ண முயலுகின்றார் ராணியார்.

பிரிட்டனுக்கு தனிப்பட்ட விஜயமாக வரும் தன்னை போர்க் குற்றங்களுக்காக கைது செய்யாமல் பார்த்துக் கொள்ளுமாறு பிரிட்டிஷ் மகாராணிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே கடிதம் எழுதியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை அதிபர் ராஜபக்சே இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்திற்கு ராஜபக்சே வருவதை அறித்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டு எதிர்ப்புத் தெரிவிக்க, விமான நிலையத்தின் பின் வாசல் வழியாக தப்பித்து ஓடினர் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும்.
இந்நிலையில் ராஜபக்சே, ‘என்னை கைது செய்யாமலிருக்க உதவுங்கள்’ என்று இங்கிலாந்து ராணி எலிசபத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் ராஜபக்சே.
கடிதத்தை பெற்றுக்கொண்ட ராணி, ‘உங்கள் உயிருக்கு பிரிட்டன் உத்தரவாதம் தருகிறது. பயப்படும்படி எதுவும் நேராது’ என்று உறுதி அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.







