அசின் மீது நடவடிக்கை - ராதாரவி

தடையை மீறி கொழும்பில் படப்பிடிப்புக்காக சென்றுள்ள நடிகை அசின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க செயலாளர் ராதாரவி கூறியுள்ளார்.

இனப்படுகொலையை அரங்கேற்றிய சிறீலங்காவுக்கு நடிகர், நடிகைகள் யாரும் செல்லக் கூடாது, படப்பிடிப்புகளை வைத்துக் கொள்ளக் கூடாது, படப்பிடிப்புகளுக்குப் போகக் கூடாது என்ற முடிவை நடிகர் சங்கம், திரைப்பட வர்த்தக சங்கம், ஊழியர் சங்கமான பெப்சி உள்ளிட்ட அனைத்து திரையுலக அமைப்புகளும் சேர்ந்த கூட்டமைப்பு எடுத்துள்ளது.

கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு தென்னிந்தியத் திரையுலகினர் குறிப்பாக நடிகர், நடிகைகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

ஆனால் நடிகை அசின் இந்த தடையை மீறி கொழும்பில் படப்பிடிப்புக்காகப் போயுள்ளார். மகிந்த அரசு வேண்டி விரும்பி அழைப்பு விடுத்ததால் இந்தி நடிகர் சல்மான் கான் தனது ரெடி படத்தின் படப்பிடிப்பை கொழும்புக்கு மாற்றியுள்ளார்.

இந்தப் படத்தில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார் அசின். தமிழ் திரையுலகம் மூலம் சினிமாவுக்கு வந்த அசின், தெலுங்கிலும் நடித்துள்ளார். தற்போது இந்தியில் மார்க்கெட்டை ஸ்திரமாக்கிக் கொள்ள ரொம்பவே சிரமப்பட்டு வருகிறார்.

தமிழ்ப் படத்தில் அசின் நடித்து வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதை ராதாரவியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் தடையை மீறி அசின் போயிருக்கிறார். அது கடுமையாக கண்டித்தக்கது. எனவே அதுகுறித்து உரிய முறையில் ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம் என்றார்.

| | Read More »

டக்ளஸ் குழுவினருக்கு மகேஸ்வரனின் மனைவி கொடுத்த "நெத்தியடி" !

சிறிலங்கா நாடாளுமன்றில் உரையாற்றிய ஐ.தே.வின் யாழ். மாவட்ட உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் உரையை குறிக்கிட்டு குழைப்பிய டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பியினருக்கு விஜயகலா மகேஸ்வரன் தக்க பதிலடி கொடுத்து தலைகுனிய வைத்துள்ளார் என்று நாடாளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

நேற்று பிற்பகல் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விஜயகலா மகேஸ்வரினின் உரைக்கான நேரத்தில் அவர் உரை நிகழ்த்தினார்.

அதன்போது, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கடத்தல் மற்றும் ஏனைய வன்முறைச் சம்பவங்களுடன் அரசுடன் சேர்ந்தியங்கும் ஆயுதம் தாங்கிய கட்சி ஒன்றே தொடர்புபட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அதன்போது,எழுந்து அவரது உரையை இடைமறித்த டக்ளஸ் தேவானந்தா, "யாழ்ப்பாணத்தில் செயற்படுவதாகக் கூறப்படுகின்ற அந்தக் கட்சி எது?" - என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதலளித்த விஜயகலா, "யாழ்ப்பாணத்தில் பல கட்சிகள் உள்ளன. நீர் எதற்கு பதகளித்து பதற்றப்படுகின்றீர்? ஏன் பயப்படுகின்றீர்" - என கிண்டலாக சிங்களத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மீண்டும் மீண்டும் டக்ளஸ் தேவானந்தா, "குறித்த கட்சி எது என்பதைத் தெளிவு படுத்தவேண்டும்" - எனக் கேட்டபொழுது விஜயகலா அவ்வாறே பதிலளித்துள்ளதுடன் தனது கணவர் மகேஸ்வரனை டக்ளஸ் தேவானந்தாவே கொலை செய்ததாகவும் இது தொடர்பில் தான் வழக்குத் தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இடைமறித்த ஈ.பி.டி.பி.யின் சந்திரகுமார், "உமது கணவன் மண்ணெண்ணை வியாபாரிதானே என்றும் டக்ளஸ் தொடர்பில் கதைக்க முடியாது" - என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதலளித்த விஜயகலா "நீர் வெளிநாட்டில் இருந்துவிட்டு இப்போதுதான் வந்திருக்கின்றீர். உம்மையும் டக்ளஸ் தேவானந்தா கொலை செய்ய முயன்றார். நீர் வெளிநாடு செல்லாதிருந்திருந்தால் டக்ளஸ் உம்மையும் போட்டு தள்ளியிருப்பார். எனவே இப்போது இங்கு கதைப்பதற்கு எந்தத் தகுதியும் உமக்கு இல்லை" - என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இருவரும் மெளனித்துப் போனதாக நாடாளுமன்றத் தரப்புக்கள் தெரிவித்தன.

| | Read More »

போர்க் கதாநாயகர்கள் சிறையில், கே.பி மட்டும் சொகுசாக இருக்கிறார்: சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவாளராக இருந்த கே.பி ஐ அரசாங்கம் நம்புவதால் பெரும் ஆபத்து உள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கே.பி ஐக் கைது செய்து பல மாதங்களாகியுள்ள போதிலும் அவரை ஏன் இன்னமும் சிறையில் அடைக்கவில்லை எனக் கேட்ட கேள்விக்கு, அரசாங்கம் முன்னாள் புலித் தலைவருடன் பணியாற்றுவதற்குக் காண்பிக்கும் ஆர்வமானது போரில் தங்களுடைய உயிரை இழந்த படையினரின் ஒழுக்கத்தைக் கெடுக்கின்றது.

அவரைச் சிறையில் போடாமல் இருப்பது அரசின் வெட்கக் கேடான செயல் என்றும் கூறினார். கே.பி இன் இருப்பில் ஏராளமான பணம் உள்ளது. அவரின் சட்ட விரோதச் செயல்களைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கும், அவரைச் சிறையில் அடைக்காமல் இருப்பதற்கும் இப்பணமே காரணமாக இருக்கக் கூடும்.

பல பிரிகேடியர்கள், ஜெனரல்கள் உட்பட ஏராளமான போர்க் கதாநாயகர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் நிலையில், பயங்கரவாதிகள் மட்டும் சொகுசாக இருக்கிறார்கள் என சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

கே.பி நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு நபர் அல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். போர் முடிந்து ஓராண்டுக்குப் பின்னர் கே.பி புலம்பெயர் தமிழர்களை அரசுடன் இணைத்துச் செயற்படுத்துவதில் அரசுக்கு உதவி வருகிறார்.

இச்செயற்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களின் பெரும்பான்மையினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு வந்த புலம்பெயர் தமிழர்களுடன் கே.பி வட பகுதிக்கு விஜயம் செய்துள்ளமைக்கு, சரத் பொன்சேகா பாராளுமன்ற ஒன்றியத்தின் அமர்வுகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லத் தடைவிதித்திருக்கும் அரசு, குற்றச்செயல்களைப் புரிந்ததற்காகத் தடுத்து வைத்திருந்த கே.பி ஐ மட்டும் வடக்குக்குச் செல்ல அனுமதித்தது என்று ஜே.வி.பி இனர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

| | Read More »