நிர்வாணப்படுத்தி,கற்பளித்து ராணுவத்தினர் சுட்டுக்கொல்லும் காட்சி-காணொளிகள்

வன்னியில் நடைபெற்ற போரின் இறுதியில் ராணுவத்தினரிடம் சரணடைந்த பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி,கற்பளித்து ராணுவத்தினர் சுட்டுக்கொல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(குழந்தைகள் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் பார்ப்பதற்கு தடை)

இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவெறிபிடித்த ராணுவத்தினரிடம் சரணடைந்த பெண் போராளிகள் உட்பட பலரை ராணுவத்தினர் சித்திரவதை செய்து சுட்டுக்கொல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










குறிப்பிட்ட காணொளியின் சிறிய பகுதியை நேற்று பிரித்தானியாவை தலமையகமாக கொண்டியங்கிவரும் 4 சனெல் தொலைக்காட்சி சேவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறிப்பிட்ட காணொளியின் முழு வடிவத்தை ஈழதேசம் இணைய வாசகர்களுக்காக இணைத்துள்ளோம்.

குறிப்பாக காணொளியின் முன் பகுதி முன்பு பல மாதங்களுக்கு முன்னதாக 4 சனெல் தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட காட்சி இணைக்கப்பட்டுள்ளது,இறுதிப் பகுதியில் புதிய காணொளி இணைக்கப்பட்டுள்ளதென்பதனை தெரிவித்துக்கொள்கிறோ

| | Read More »

மீண்டும் தமிழர்களை அழிக்க முனையும் பிரித்தானிய மகாராணி

காலனித்துவ ஆட்சியில் தமிழர்களின் சுயத்தை அழித்து அதை சிங்களவனிடம் தாரை வார்த்தது மகாராணியார் குடும்பம்

இப்போது மீண்டும் தமிழர்களை அழித்தவனுக்கு பாராட்டு அனுப்பியது மட்டுமல்லாமல் அடைக்கலமும் ,காவாந்தும் பண்ண முயலுகின்றார் ராணியார்.
தன்னை காப்பாற்றும் படி மகிந்தா பிரித்தானியா மகாராணியிடம் மன்றாடினாரா?

http://3.bp.blogspot.com/_orHurCodGB8/TPWxsg7FniI/AAAAAAAAH-w/itRcb6r3HAE/s1600/tamilmakkalkural_blogspot_WAR_CRIMINAL.jpg

பிரிட்டனுக்கு தனிப்பட்ட விஜயமாக வரும் தன்னை போர்க் குற்றங்களுக்காக கைது செய்யாமல் பார்த்துக் கொள்ளுமாறு பிரிட்டிஷ் மகாராணிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே கடிதம் எழுதியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை அதிபர் ராஜபக்சே இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்திற்கு ராஜபக்சே வருவதை அறித்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டு எதிர்ப்புத் தெரிவிக்க, விமான நிலையத்தின் பின் வாசல் வழியாக தப்பித்து ஓடினர் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும்.

இந்நிலையில் ராஜபக்சே, ‘என்னை கைது செய்யாமலிருக்க உதவுங்கள்’ என்று இங்கிலாந்து ராணி எலிசபத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் ராஜபக்சே.

கடிதத்தை பெற்றுக்கொண்ட ராணி, ‘உங்கள் உயிருக்கு பிரிட்டன் உத்தரவாதம் தருகிறது. பயப்படும்படி எதுவும் நேராது’ என்று உறுதி அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

| | Read More »

மகிந்த தங்கியுள்ள விடுதி முன்பு போராட்டம் நடைபெறும்

மகிந்த ஆக்ஸ்ஃபேட் பல்கலைக் கழகத்க்தில் பேசாவிட்டாலும் அவர் தங்கியுள்ள விடுதி முன்பு போராட்டம் நடைபெறும்.

Now Killer rajapaksa Demo is Moved To Dorchester Hotel London Park Lane W1A 2HJ



தமிழர்களை அழித்து ஒழித்த கொலைகார இலங்கை கிட்லர் மகிந்தா அவரது படை பட்டாளங்களுடன் ஆடம்பர விடுதியில். தங்கி நின்று கும்மாளம் .முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் சாவல் விட்டு மக்களின் ஆர்ப்பாட்டத்தை ஜன்னல் வழியாக பார்வை இட்டு கொண்டுள்ளாராம் ./


கொட்டும் அடர் பனி மழைக்குள்ளும் கடும் குளிரில் நடுங்கிய படி மக்கள் அங்கும் ஆர்ப்பாட்ட போர்க்கொடியை நடத்திய வண்ணம் உள்ளனர் .

நீங்களும் இன்றே சென்று கலந்து கொள்ள கீழ் வரும் முகவரிக்கு விரைந்து செல்லுங்கள்.

கொடுங்கோலன் மஹிந்த தங்கி நிற்கும் விடுதி முகவரி மற்றும் நம்பர் இங்கே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய வண்ணம் இருக்கிறார்கள்.


தொலைபேசி இலக்கம். 00442076298888

DORCHESTER HOTEL

MAYFAIR ,PARK LANE

LONDON W1K 1QA.

போராட்டத்திற்காக பேரூந்துகள் உங்கள் நகரங்களில் இருந்து புறப்படவுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு :

North West Transport arrangement, All coaches Leave at 3pm:-

Harrow: Ashely cash& carry, Abi diamond, Rooks Heath School.

Sothall: Tamilini cash & carry, Lady Margaret halal meat, Goldman Estate.

Hayes: Tamilan cash & carry.

Wembley: In front of Alperton underground station.

Colindale: Thirupathai cost cutter, Royal Food & Wine.

Watford: St Albans Road.

More info: 075 7268 0443

மேலதிக பேரூந்துகள் விடப்பட இருப்பதால் உங்கள் அருகில் உள்ள தமிழ் அமைப்புகளோடும் தொடர்புகொள்ளுங்கள்.

நாளை திட்டமிட்ட வகையில் போராட்டம் நடைபெறும் என பிரித்தானிய தமிழர் பேரவையும், மற்றைய தமிழ் அமைப்புகளும் தெரிவித்துள்ளது. நாளை ஆக்ஸ்ஃபேட் பல்கலைக்கழகத்தில் மகிந்த ஆற்ற இருந்த உரை ரத்துச்செய்யப்பட்டுள்ளது என்று உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியிருந்தது.

இருப்பினும் அவர் தங்கியுள்ள டோச்சஸ்டர் விடுதிக்கும் முன்பாக இப் போராட்டம் திட்டமிட்ட வையில் நடைபெறும் என தமிழ் அமைபுகள் தெரிவித்துள்ளது. மகிந்த இலங்கைக்கு திரும்பிவிட்டதாகவும் இதனால் போராட்டங்கள் தேவையில்லை எனவும் சிலர் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் பிரான்ஸ், சுவிஸ், மற்றும் இதர நாடுகளில் இருந்து பஸ் மற்றும் கார்களில் பல தமிழர் பிரித்தானியா நோக்கிவந்துகொண்டு இருக்கின்றனர். அத்தோடு மகிந்த இன்னும் பிரித்தானியாவில் தங்கியிருப்பதாக ஊர்ஜிதமான செய்திகள் கிடைத்துள்ளதோடு, அவர் விடுதிக்கும் பொலிஸ் பாதுகாப்பும் இன்னும் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே பொய்யான பரப்புரைகளை நம்பாது, மக்கள் நாளை போராட்டத்தில் பெரும்தொகையாகக் கலந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுகொள்கின்றனர் ஏற்பாட்டாளர்கள். டோச்சஸ்டர் விடுதிக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்த தேவையான அனுமதியைப் பெறும் முயற்ச்சியில் தற்போது தமிழ் அமைபுகள் ஈடுபட்டுள்ளதால் இன்னும் சில மணித்தியாலங்களில் சட்டச் சிக்கல் தீர்ந்துவிடும்.

எனவே நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்வர் என்பதில் ஜயமில்லை. பிரித்தானிய தமிழர்களின் பாரிய போராட்டத்தால் இவ்வெற்றி கிட்டியுள்ளது என்பது அனைவரும் அறிந்த விடையம்.

| | Read More »

பிரபல ஆங்கில பத்திரிகையாளர் திரு சிவநாயகம் காலமானர்

பிரபால ஆங்கில பத்திரிகையாளர் திரு சுப்பிரமணியம் சிவநாயகம் அவர்கள், நேற்று திங்கட்கிழமை, 30 நவம்பர், மாலை 11.00 மணிக்கு கொழும்பில் காலமானர்.
திரு சிவநாயகம் அவர்கள், 1981ம் மாதம் வரை, கொழும்பில் வாழ்ந்த காலங்களில் – பிரபல ஆங்கில பத்திரிகைகளான “டெயூலி நியூஸ்”, “டெயிலி மிறர்” ஆகியவற்றுடன், சிறிலங்கா சுற்றுலா நிறுவனத்திலும் கடமையாற்றியவர். அதன் பின்னர், யாழ்பாணத்தில் கல்விமான்களினால் 1982ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலப் பத்திரிகையான “சற்ரடே றிவீயில்” (Saturday Review) ஆசிரியராக கடமையாற்றினர்.

ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசங்கம், “சற்ரடே றிவீயை” தடை செய்து திரு சிவநாயகம் அவர்களுக்கு பல தொல்லைகளை கொடுத்த காரணத்தினால்;, சிவநாயம் ஐயா அவர்கள் இந்தியா சென்று, அங்கு “தமிழர் தகவல் மையத்தில்” சில காலம் கடமையாற்றினர்.

அதை தொடர்ந்து, தனது நண்பர்களுடன் இணைந்து, ஆங்கிலப் பத்திரிகையான “தமிழ் நேசன்” என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வரும்வேளையில், இந்தியா அரசினால், இந்தியாவில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டடு, பல வருடங்கள் இந்தியா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டார்.

இந்தியா சிறையிலிருந்து வெளியேறியதும், பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரி, சில வருடங்கள் பாரிஸில் வாழ்ந்து வந்தவேளையில், ஆங்கில மாதச் சஞ்சிகையான “கோற் பிறிங்” என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வந்தார். இவ்வேளையில் இவரது சில நண்பர்களின் அழைப்பினாலும், இவரது சில குடும்ப அங்கத்தவர்களுக்கு அருகமையில் வாழ்வதற்காக, லண்டன் பிரித்தானியா சென்று, அங்கு “கோற் பிறிங்” ஆங்கில மாதச் சஞ்சிகையை தொடர்ந்து நடத்தி வந்தார்.


இவர் பிரித்தானியாவில் வாழ்ந்தவேளையில், தனது கட்டுரைகள,; ஆங்கக்கள், பத்திரிகை அனுபவங்களுடன,; அரசியல் தக்கங்களையும் உள்ளடக்கிய, இரு ஆங்கில பிரசுரங்களான “பேன் அன் த கண்”, “சிறிலங்கா – விற்னாஸ் ரு கிஸ்றீ” (Pen and the Gun” & “Sri Lanka – Witness to History” – A journalist’s Memoirs 1930 – 2004) ஆகியவற்றை வெளியிட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் கொக்குவிலிலை பிறப்பிடமாக கொண்ட சிவநாயகம் ஐயா அவர்கள், (1930ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி) கொக்குவில் இந்து கல்லூரி, வட்டுகோட்டை யாழ்பாணக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில் இவர் பல சுகயீனம் காரணமாக, குடும்பத்துடன் வாழ விரும்பிய காரணத்தினால், கொழும்பு சென்று, அங்கு சில வருடங்களாக வைத்தியசாலையும் வீடுமாக வாழ்ந்து கொண்டிருக்கையில், திங்கட்கிழமை 30 நவம்பர், மாலை 11.00 மணிக்கு கொழும்பில் காலமானர்.

சிவநாயகம் ஐயாவின் குடும்ப தகவலின் பிரகாரம், இவரது பூதவுடல் எதிர்வரும் வியாழக்கிழமை டிசம்பர் 2ம் திகதி, கொழும்பில் தகனம் செய்யப்படும்.

| | Read More »

ஈழமுரசும் புலத்திலும் ஒற்றை நாணயத்தின் இரு பக்கங்களே

கனடாவில் கடந்த சனிக்கிழமை முதல் வெளிவரும் புலத்தில் இதழ் தொடர்பாக ஊடகஇல்லம் வெளியிட்ட அறிக்கை

அன்பார்ந்த கனடிய தமிழீழ உறவுகளே,

புலத்தில் பத்திரிகை ஊடாக உங்கள் வாசல்தேடி வந்து உறவாடிக் கொள்வதில் பாரிஸ் ஊடக
இல்லத்தின் தாய்ப்பதிப்பாக விளங்கும் ஈழமுரசு இதழின் (ஐரோப்பா) ஆசிரியர் குழுவினராகிய நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஐரோப்பிய தேசங்கள்
தோறும் வெளிவரும் ஈழமுரசு இதழின் கனடிய பதிப்பு, முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிகழ்வுகளின் விளைவாக கனடாவில் வெளிவருவதில் அண்மைய
மாதங்களில் தடங்கல்கள் ஏற்பட்டிருந்தன.

இதேநேரத்தில் தாயகச் செய்திகள், அரசியல் ஆய்வுகள், களப் பதிவுகள் என இதுவரை காலமும் பல்வேறு தளங்களில் உங்களின் கைகளை வந்தடைந்த ஈழமுரசு இதழின் வருகை திடீரென நின்று போனதையிட்டு கனடிய தமிழீழ உறவுகளாகிய உங்களில் பலர் வெளிப்படுத்திய ஆழ்மனப் பதிவுகளையும், ஆதங்கங்களையும் நாம் கவனத்தில் எடுக்கத் தவறவில்லை.

இந்நிலையில் பல்வேறு நெருக்கடிகளையும், சவால்களையும், இடையூறுகளையும் வெற்றிகொண்டிருக்கும் நாம், புலத்தில் என்று புத்திதழ் வடிவம்பெற்று மீண்டும் ஈழமுரசு (ஐரோப்பா) இதழின் கனடிய பதிப்பை உங்கள் கைகளில் தவழ விடுவதில்
பேருவகையடைகின்றோம்.

பாரிஸ் ஊடக இல்லம் என்ற ஒற்றை நாணயத்தின் இரு பக்கங்களாகவே ஈழமுரசு (ஐரோப்பா)
இதழும், புலத்தில் இதழும் திகழ்கின்றன. இந்த வகையில் இது உங்கள் இதழ். உங்களுக்கான
இதழ். உங்கள் எண்ணங்களின் களமும் கூட!

இதுவரை காலமும் எமது கனடிய பதிப்பிற்கு நல்லாதரவும், நல்லாசியும் வழங்கி, ஆல்போல்
கிளைபரப்பி அறுகுபோல் கனடிய தமிழ் வாசகர் வட்டத்தில் நாம் வேரூன்றுவதற்குக் காலாக
அமைந்த எமது நேசத்திற்குரிய வணிகப் பெருந்தகைகளுக்கும், எமது பாசத்திற்குரிய
வாசர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

கடந்த காலங்களைப் போன்று இடையூறுகள் இன்றி எமது ஊடகப் பணி தொடர்வதற்கு தொடர்ந்தும்
உங்கள் நல்லாதரவை நல்குமாறு உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

ஈழமுரசு (ஐரோப்பா) – புலத்தில் ஆசிரியர் குழுமம்


| | Read More »