‘‘ஐ. நா. வில் தமிழர் குரலை அடக்க தமிழ் சங்கங்களின் பணம் உதவுகிறது”

ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவனந்தாவின் ஆள் பொஸ்கோ (பிரான்ஸ், பாரிஸ்) என்பவருக் பிறசில்ஸ் காரியாலயம் நடந்த பணம் கொடுப்பது யார்?
இதே ஈ.பி.டி.பி. பொஸ்கோவிற்கு பாரிஸிலிருந்து ஜெனிவா செல்வதற்கு பணம் கொடுத்தது யார்?
பாரிஸிலிருந்து ஜெனிவா சென்ற போஸ்கோவிற்கு சுவிஸ் அப்துல்லாவிடம் ஜெனிவாவில் தங்குமிட வசதி செய்து செய்யுமாறு பிரான்ஸிலிருந்து வேண்டுகோள் விடுத்தது யார்?
பொஸ்கோ ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவனந்தாவின் ஆள் என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் முதலில் தெரிந்து கொள்கிறீர்கள் என்பதை உங்கள் மனச்சாட்சியுன் கதவுகளில் கையை வைத்து உண்மையை மற்றவர்களுக்கு கூறுங்கள்.
இவ் ஈ.பி.டி.பி. பொஸ்கோ ஜெனிவாவில் என்ன செய்கிறார் என்றால், சிறிலங்கா அரசிற்கு எதிராக வேலை செய்வதற்கு பதிலாக கிருபாகரன் பற்றி கற்பனை கதைகளை பரப்புகிறார். கிருபாகரனுக்கு எதிரான பிரச்சாரத்தில்; சிறிலங்கா தேசியப் புலனாய்வில் மிக நீண்ட காலமாக பணி புரிந்து வரும் டக்ளஸ் தேவனந்தாவின் ஆள் ஒரு தமிழருடன் இணைந்துள்ளார்.
உங்களில் யாருக்கும் சுவிஸில் வசிக்கும் பத்திரிகையாளாகளான திரு துரைரட்ணம், திரு நிராஜ் டேவிட்டுடன் பழக்கம் தொடர்பு இருந்தால,; இவர்களை தொடர்பு கொண்டு கேளுங்கள். மிகுதியை இவர்கள் முலமாக இந்த பொஸ்கோ ஜெனிவாவில் கிருபாகரனை பற்றி என்ன சொன்னர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இளைஞர்கள் முன்னுக்கு வருவதை நாங்களும் வரவேற்கிறோம். இதை காரணம் காட்டி கூட்டணி அமைத்து கிருபாகரனை வேலை செய்யாது தடுப்பது, சிறிலங்கா அரசு டக்ளஸ் தேவனந்தாவின் சிநதனைகளுக்கு உருவம் கொடுப்பது அல்லா உங்கள் வேலை திட்டம்.
உங்கள் பணத்தில் டக்ளஸ் தேவனந்தாவின் நிகழ்ச்சி நிரல் நடைபெறுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
சில மாதங்களுக்கு முன், நீங்கள் பெரும் பணத்தை செலவழித்த நடத்திய பிறசில்ஸ் கூட்டத்தில் எத்தனை ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்? உங்கள் மனச்சாட்சிகளில் கையை வைத்து கூறுங்கள் ஏன் இப்படி ஓர் கூட்டம் நடந்தது என்பதை நீங்கள் யாராவது ஆராய்ந்தது உண்டா?
ஐ. நா. விலிருந்து கிருபாகரனை வெளியேற்ற வேண்டும் என்பதில் தமிழ் அணி ஒன்று அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. நபர்கள் பின்வருமாறு:
கனடவிலிந்து வருகை தரும் ஆனந்த சக்கரியின் மகன், பாரிஸ் இளங்கோவின் அடியாட்களால் வழி நடத்தப்படும் நாடுகடந்த அரசின் பண்பற்ற ஓர் பிரதிநிதி, லண்டனிலிருந்து வருகை தரும் ஓர் வங்கி ஊழியரும் பொய்க்ககும் புழுகுக்கும் பெயர்போன நபர், பலரை மடையராக்கிய டக்ளஸ் தேவனந்தாவின் ஆள் பொஸ்கோ, இவர்களுடன் சிறிலங்கா தேசியப் புலனாய்வில் மிக நீண்ட காலமாக பணி புரிந்து வரும் ஒரு தமிழரும்.
லண்டனிலிந்து வருகை தந்த வங்கியாளர், ஐ. நா. வில் ஓர் சிங்களப்ப பத்திரிகையாளருக்கு 2 விஸ்கி போத்தில்களை கொடுத்து கிருபாகரனுக்கு எதிரான தமது அணிக்கு உதவுமாறு வேண்டியுள்ளார்.
வாழ்க இவர்கள் பணி.
இவர்கள் யாவரும் முள்ளிவாய்கலின் பின்னர் இவ் ஐ. நா. மண்டபத்திற்குள் நுழைத்தவர்கள்.
இவர்களது நாட்டுப்பற்று தேசியப்பற்று முள்ளிவாய்காலுக்கு முன்பு எங்கு போனது?
புதிய புதிய பிரச்சனைகளை தயவு செய்து ஆரம்பிக்காதீர்கள
இதற்கு உங்கள் பணத்தை வழங்கி நீங்கள் ஏமாறாதீர்கள்.
rste.org







