கருணா ஒட்டுக்குழு இனியபாரதி இப்போது பிரான்ஸில்: என்ன நடக்கபோகிறது ?

கருணா ஒட்டுக்குழுவின் முக்கியஸ்தரும் கிழக்குமாகாணம் மட்டக்களப்பு,அம்பாறை பகுதிகளில் அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட பல படுகொலைகளுடன் நேரடியாக சம்பந்தம் கொண்டவருமான இனியபாரதி என்று அழைக்கப்படும் குமாரசுவாமி புஸ்பகுமார் இப்போது பிரான்சுக்குள் நுழைந்திருப்பதாக தெரியவருகிறது. தமிழ்தேசியகூட்டமைப்பு வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள்,கொலைமுயற்சிகள்,வெள்ளைவான்கடத்தல் என்பனவற்றுடன் எண்ணற்ற கொலைகளிலும் ஈடுபட்டு ஐக்கியநாடுகள் சபையால் சிறுவர்களை கடத்துவது சம்பந்தமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவர் சிங்கள அரசாங்கத்தின் நிகழ்நிரல் ஒன்றுடனேயே பிரான்சுக்குள் நுழைந்திருப்பதாக தெரிகிறது.

கருணாவின் கட்சியும் ஒட்டுக்குழுவுமான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் சேர்பதற்காக 18 வயதுக்கு உட்பட்ட 5சிறுவர்கள் உள்ளிட்ட 13பேரை கடத்திச்சென்றதாக இவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை விசாரித்த சிங்களதேசத்தின் தேசியசிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் அந்த 13 சிறுவர்களும் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கமுடியாமல் இருப்பதாக தெரிவித்து இருந்தார்கள். இனப்படுகொலையாளர்களான சிங்களஅரசின் ஆளும்கட்சியின் அம்பாறைமாவட்ட இணைப்பாளரும்,போர்க்குற்றவாளி மகிந்தராஜபக்சவின் இணைப்பாளருமாகிய இவர் அண்மையில்சிங்கள அரசுடன் முரண்படுவதுபோல ஒரு 'செற்அப்' செய்துகொண்டு சுவிஸில் நுழைந்திருந்தார்.இப்போது அவர் பிரான்சுக்குள் நுழைந்திருக்கிறார்.

இவரின் படுகொலைகள்,பாலியல்வல்லுறவுகள்,கடத்தல்கள்,சிறுவர்களை கடத்துதல் போன்றவற்றை மக்கள் முன்னாலும் சம்பந்தப்பட்ட நாடுகளின் உரியவர்கள் முன்னாலும் வெளிப்படுத்தவேண்டும். சிங்கள அரசு-கே.பி-கருணா கும்பலின் புதியசதி நடவடிக்கை ஒன்றின் முடிவுகளுக்கமையவே இவர் இங்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கலாம்.

Posted by எல்லாளன் on 3:55 PM. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response